ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மறைவு
October 7, 2020 • Viduthalai • மற்றவை

மறைந்த சுயமரியாதை வீரர் ஆசிரியர் இராதாகிருட்டிணன் அவர்களின் துணைவியாரும் - மழவராயநல்லூர் கழகத் தலைவர் ‘நெல்‘ செல்வம் அவர்களின் தாயாரும் - ஆசிரியர் ரீட்டா அவர்களின் மாமியாருமான சரோஜினி அம்மையார் தன் 72ஆம் அகவையில், 4.10.2020 காலை 5 மணிக்கு மழவராயநல்லூரில் காலமானார். அம்மையாரின் உடலுக்கு சிதம்பரம் கழக மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட கழக இணைச் செயலர் யாழ்.திலீபன், கழக பொதுக்குழு உறுப்பினர் வலசக்காடு அரங்கநாதன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி பெரியார் தாசன், மாவட்ட இளைஞரணி செயலர் சிற்பி.சிதம்பரசன், திராவிடர் கழக ஒன்றியப் பொறுப்பாளர்கள் கு.தென்னவன், தெ.ஆறுமுகம், மழவராயநல்லூர் சிலம்பரசன், தி.மு.க. ஒன்றிய துணைச் செயலர் பத்மநாபன், வி.சி.க. தொகுதி பொறுப்பாளர் வெற்றிவேந்தன், ஊராட்சி மன்றத் தலைவர் பிருந்தாவதி வரதராசன், துணைத் தலை வர் வசந்தி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மாலை 4 மணிக்கு எவ்வித சடங்குகளின்றி அடக்கம் நடைபெற்றது.

- - - - -

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாதனூர் புதூரை சேர்ந்த பெரியார் பெருந் தொண்டர் இராஜா (வயது70) உடல்நலக்குறை வால் 5.10.2020 திங்கட்கிழமை காலை 5 மணி அளவில் மறைவுற்றார். தகவல் அறிந்ததும் அவரது உடலுக்கு  மாவட்ட கழகத்தின் சார் பில் மாவட்டத் தலைவர் வீ. சிவாஜி தலைமை யில் மண்டலத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்டத் துணைச் செயலாளர் சேட்டு, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பூபதிராஜ், ஒன்றிய இளை ஞரணித் தலைவர் சமரசம், வேப்பிலைப்பட்டி தமிழின்பன், வாசிகவுண்டனூர் சக்திவேல் ஆகியோர் அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.