ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
 மருத்துவப் படிப்பில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மாநில அரசு நிறைவேற்ற ஒத்துழைக்கவில்லை : உச்ச நீதி  மன்றத்தில்  மத்திய  அரசு புகார்
October 14, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி,அக்.14, மருத்துவப்படிப் பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்த ரவை நிறை வேற்ற மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தமிழக அரசுமீது குற்றஞ்சாற்றி யுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று (13.10.2020) உச்ச நீதி மன்றத்தில் நீதி யரசர்  எல் நாகேஸ்வர ராவ் அடங்கிய  3 நீதிபதிகள் அமர்வு முன் வந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு சம்பந்தமாக பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவது சம்பந்தமாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதார அமைச்சர் அளித்த பதிலை படித்து காண்பித்து,  மத்திய அரசின் சுகாதார அமைச்சரே  ஒப்புக் கொண்ட நிலையில்  இந்த ஆண்டே இடஒதுக்கீடு தராமல் நீட் தேர்வு முடிவுகள் வெளியிட மத்திய அரசு ஆயத்தம் ஆவதால் இட ஒதுக்கீடு இந்த கல்வியாண்டில் நிறை வேற்ற வேணடும் என்று வாதிட்டார்.

அதற்கு பதில் அளித்து மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பல்பீர் சிங் தமது வாதுரையில்,  உயர்நீதிமன்ற உத்தரவிற் கிணங்க கடந்த 7.9.2020 தேதியில் கமிட்டி அமைத்து 22.9.2020 தேதியில்  உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டின்படி  அமைத்த குழுவின் கூட்டம் நடை பெற்றது என்றும் இதில் 2021 ஆம் ஆண்டிற்கான இட ஒதுக்கீடு தொடர் பான பிரச்சினைகள் மட்டுமே விவா திக்கப்பட்டன என்றும்குறிப்பிட்டார்.

மேலும் அவர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி  மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சதவீதம் தொடர்பான பிரச்சினைகள்  விவாதிக்கப்பட்டது என்றும் இக் கூட்டத்தில் தமிழக அரசின் பிரதிநிதி தமிழக அரசின் முடிவை அறிந்து பிறகு தெரிவிப்பதற்காகக் கூறி கால அவ காசம் கேட்கப்பட்டு  இன்று வரை அவர் திரும்பி வரவில்லை என்பதால், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அமைத்த குழுவால்   எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று வாதிட் டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை அமல் படுத்துவதில் அலட்சியம் காட்டுவதால் இந்த ஆண்டிற்கு  எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும்  வழக்கை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைப்போம் கூறினார்கள். அப்போது, கேவியட் மனு தாக்கல் செய்திருந்த - _ திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் தன்னுடைய வாதத்தில் 69விழுக்காடு மாநில இடஒதுக்கீட் டைப் மருத்துவ படிப்பில் உயர்நீதி மன்றம் அமைத்த குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டு  உள்ளது என்றும்,  மத்திய அரசு கடந்த 2016இல் இருந்து பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு தராமல் பிற் படுத்தப்பட்ட மாணவர்களை கடந்த 4 ஆண்டுகள் வஞ்சித்து விட்டது என்றும் உயர் நீதிமன்றம் கடந்த 27.7.2020 தேதியில் உத்தரவு போட்டும்  இன்று வரை  மாநில அரசின் அலட் சியத்தால் நிறைவேற்ற முடியாமல் உள்ளது என்று வாதிட்டார்.

மேலும் அவர் மத்திய அரசு வரும் 16.10.2020 தேதியில்  நீட் முடிவை வெளியிட இருப்பதால்  மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் கொடுப்பதுபோல இவ்வழக்கிற்கு எந்தவித பாதகமில்லாமல் (without prejudice to the case and committee’s decision  for this year alone) கமிட்டி முடிவிற்கு குந்தகமில்லாமல் குறைந்தது 27 சதவீத இட ஒதுக்கீடு  மத்திய அரசால் வழங்கப்படலாம் என்றார். மேலும் அவர் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு இந்த பிரச் சினையை தீர்மானிக்கும் வரை மற்றும் வழக்காடிகளின் உரிமைகளுக்கு பாதக மில்லாமல்  இது ஒரு தற்காலிக ஏற்பா டாக ஏற்றுக்கொண்டு இந்த  கல்வி ஆண்டே இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார் .

வில்சனின் கோரிக்கையை  கேட்ட நீதிபதி எல்.நாகேஸ்வராவ் அடங்கிய அமர்வு, இந்த ஆண்டு மட்டும் மருத் துவ படிப்பில் குறைந்தபட்சம் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழிமுறை களைப் பின்பற்றுமாறு  மத்திய அர சுக்கு ஆஜரான மத்திய அரசின் மூத்த வழக்குரைஞர் பல்பீர் சிங்கை அறிவு றுத்தியதுடன், இந்த வழக்கை வரும் 15.10.2020 க்கு விசாரணைக்கு தள்ளி வைத்தனர்.