ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மனுதர்ம சாஸ்திரம்: ஒன்பதாவது அத்தியாயம்
October 25, 2020 • Viduthalai • மற்றவை

சுலோகம் 14:  மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத் தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.

15) மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பின்மையும், இயற்கையாகவுடைய வராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.

17) படுக்கை, ஆசன அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.

18) மாதர்களுக்கு ஜாதகர்ம முதலியவை மந்திரத்தோடு கிடையாது. மனச்சுத்தியுங் கிடையாது. பாவத்தைப் போக்குகிற மந்திரோபதேசமுமில்லை. ஆகையால் அபரிசுத் தாளாயிருக்கிறார்கள்.

19)  மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங் களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ் டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில் சொல் லிய பிரயாச்சித்தத்தைத் கேளுங்கள்.

30) கணவன் சொற்படி நடவாதவள் உலகத்தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.

46) கணவன் மனையாளைத் தள்ளிவிட்டாலும், விற்றாலும் அந்த மனையாள் தன்மை அவளை விட்டு நீங்காது. இப்படி இவர்களுக்கு பிரமன் சிருஷ்டி காலத்திலேயே ஏற்படுத்தியிருக்கிற சாசுவத மான தருமத்தை நாமறிந்திருக்கிறோம். ஆதலாலிவ் விதமான பிறன் மனையாளிடத்தில் பிறந்த பிள்ளை யும் உபயோகப்படமாட்டான்.

60)  ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனாயிருந்தால் மற்றுமொருவனையடைந்து உன்னிலத் தில் நான் பயிரிடுகிறேன். அப்பயிர் நம்மிருவருக்கும் பொதுவாயிருக்கட்டுமென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறார்ப்போல் ஒருவன் மனை யா ளிடத்தில் மனையாளில்லாத  மற்றொருவன் பிள் ளையையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லாவிட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத்திய கூலமாகவே யிருக்கிறது. ஏனெனில் பிஜத்தை விட நிலமுயர்ந்த நல்ல விஷயத்தைப் போல் மாதர் விஷயத்திலும், கணவனும் மற்றொரு வனும், பயிரைக் குறித்தாற்போல் புத்திரவுற்பத்தியைக் குறிக்கும் ஏற்பாடு செய்து கொண்டால் அதில் விளைகிற தானியம்போல் பிறந்த பிள்ளையும் இருவருக்கும் சொந்தமாகவிருப்பதை உலகத்திற் கண்டிருக்கிறோம்.

59) பிள்ளையில்லாமல் அந்தக்குலம் நசிக்கிறதாக விருந்தால் அப்போதந்த ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழுதலை முறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல் லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்.

60) விதவையிடத்தில் பெரியோர்களின் அனு மதிப் பெற்றுக் கொண்டு புணரப்போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டுபண்ண வேண்டியது. இரண் டாம் பிள்ளையை ஒரு போதும் உண்டு பண்ணக் கூடாது.

69)   ஒரு பெண்ணை ஒருவனுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத்தானம் செய்த பின் அந்த வான் இறந்துபோனால் அவன் தம்பி அல்லது அண் ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.

70) அவனந்தப் பெண்ணை விதிப்படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ்திரமுடையவளாயும், திரி கரண சுத்தியுடையவளாயு மிருக்கச் செய்து, ருதுஸ் நாள மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருது காலம் வனாயிற் பார்த்து கருப்பமுண்டாகாவிடில் கருப்பமுண் டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நான மானவுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது.

77)  கணவனை மனைவி பகைத்தால் அவன் ஒரு வருஷம் வரையிலும் பார்த்து அவள் வணங்கா விடில் அவளுக்குத் தான் கொடுத்த ஆடையா பரணம் முதலியவற்றை வாங்கிக் கொண்டு  அவ ளோடு பேசுதலும், புணர்தலும் ஒழிக்க ஜீவனத்துக் காகக் கொடுத்தது கலாத் தக்கதன்று.

78) கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடிய னாகவிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யா விட்டால் அவளுக்கு அலங்காரம் வஸ்த் திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.

81) மலடியான மனைவியை எட்டு வருஷத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறுபவளை பத்து வருஷத் திற்கு மேலும், பெண்ணையே பெறுபவளை பதி னொரு வருஷத்திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழு தேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.