ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மத்திய பி.ஜே.பி. மோடி அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் போராட்டம் வெடித்துள்ளது
September 22, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி, செப்.22  மத்திய பி.ஜே.பி. மோடி அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் போராட்டம் வெடித்துள்ளது; விவ சாயிகள் பெரும் திரளாகப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

வேளாண் மசோதா நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டதை கண்டித்து அரியானா, பஞ்சாபில் உள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று டிராக்டர் பேரணியையும் அவர்கள் முன்னெடுத்து தங்களது எதிர்ப்பைக் காட்டி வரு கிறார்கள்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தி யாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

 இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அரியானாவில் விவசாயிகள் அமைப்பினர் 3 மணி நேரத்திற்கு சாலையை வழிமறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வருமாறு விவசாயிகளை அழைத்தார்.

விவசாயிகள் போராட்டம் தீவிரம்

பஞ்சாபிலும் விவசாயிகள் போராட்டம் தீவிர மடைந்துள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் இளைஞர் அணியினர் நடத்தி வரும் டிராக்டர் பேரணி பஞ்சாப்பிலிருந்து டில்லிக்கு செல்கிறது. மொகாலி மாவட் டத்தில் தொடங்கிய இந்தப் பேரணி தேசிய நெடுஞ்சாலை வழியாக அம்பாலாவை சென்றடைந்தது. பஞ்சாப்பில் நேற்றைய தினமும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் 31 விவசாய அமைப்புகள் கலந்து கொண்டன. வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியும் விவசாய அமைப்புகளின் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட வுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தையொட்டி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். அம்பலா, குருஷேத்ரா, சோனிபாட், ஜிந்த், சிர்சா, பதேகாபாத்,  ஹிசார், பிவானி ஆகிய அரியானாவின் முக்கிய நகரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் ரயில் மறியல் போராட்டத்தையும் விவசாய அமைப்பினர் நடத்து கிறார்கள். இதுகுறித்து பஞ்சாப் விவசாயிகள் கூறுகையில்,

‘‘நாங்கள் விவசாய மசோதாவை எதிர்த்துப் போராடி வருகிறோம். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தற்போதைய விவசாய மசோதா ஆகியவை மக்களுக்கு எதிராகவே அரசு எடுத்துள்ளது'' என்றனர். அண்டை மாநிலமான டில்லி எல்லையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

 இதனிடையே இந்தியா முழுமைக்கும் முழு அடைப்புப் போராட்டம் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்தப் போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உழவர் அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் பேரணி

 நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சைகளுக்கிடையே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பாஜக ஆளும் மாநிலமான கருநாடகா பெங்களூருவில் பேரணி நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டவர்களில் மூத்த சுதந்திர போராட்ட வீரர் எச்.என்.தொரேசாமி, ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், எழுத்தாளர் தேவநூரா மகாதேவா, நீதிபதி எச்.என்.நாகமோகன் தாஸ் (ஓய்வு)  ஆகியோர் அடங்குவர்.

இந்த ஆர்ப்பாட்டம் பஞ்சாப் மற்றும் அரியானாவில் உள்ள விவசாயிகள் மட்டுமல்ல, தென் இந்திய விவ சாயிகளும் கோபமாக இருப்பதை நிரூபித்தது என்று யோகேந்திர யாதவ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

‘‘நாடு முழுவதும் விவசாயிகள் கோபமாக உள்ளனர். பிரதமர் கூறுகையில், காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் மட்டுமே போராட்டங்களுக்கு நிதியுதவி செய்கின்றன என்றார். ஆனால், எந்த காங்கிரஸ் உறுப்பினர் இங்கே இருக்கிறார் என்பதை எனக்குக் காட்டுங்கள். அவர்கள் (அரசாங்கம்) எதிர்ப்பாளர்கள் அனைவரும் இடைத் தரகர்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் கண்டால் சொல்லுங்கள் இங்கே ஒரு இடைத்தரகரை'' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘‘உண்மை என்னவென்றால் - விவசாயிகள் மசோ தாக்களுக்கு எதிரானவர்களாக உள்ளனர். அது விவசாயி சார்பு அரசாங்கம்  என்று கூறும் அதே வேளை யில், எந்தவொரு விவசாயிகளின் அமைப்பும் கலந்தா லோசிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைமை யிலான உழவர் குழு கூட அதற்கு எதிராக உள்ளது.செப்டம்பர் 25 ஆம் தேதியில் அகில இந்திய பந்த்க்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயத்தை கம்பெனி ராஜ் ஆக்குவதற்கான முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்'' என்று அவர் கூறினார்.

‘‘இந்தப் பிரச்சினையில் ஒரு தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சர் பதவி விலகியுள்ளார். உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்? உங்கள் அரசாங்கத்திலேயே ஒருமித்த கருத்து இல்லை. நாட்டில் எவ்வாறு ஒருமித்த கருத்து இருக்க முடியும்? நாங்கள் அதை எதிர்க்கப் போகிறோம்'' என்றும் கூறினார்.

குடியரசுத் தலைவரிடம்

18 கட்சிகள் கோரிக்கை!

நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்திற்கிடையே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரை கையெழுத்து போட வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளனர்.

18 எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சமீபத்திய நாடாளுமன்ற செயல்பாடுகளை ஜனநாயக படுகொலை எனக் குறிப்பிட்டுள்ளதோடு, இந்தியாவின் அரசியல் மற்றும் புவியியல் நிறமாலையைக் குறிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாங்கள், இந்த பிரதி நிதித்துவத்தை உங்களிடம் கொண்டு வருகிறோம். ஜனநாயகத்தின் முழுமையான கொலைக்கு உங்கள் அவசர கவனத்தை மரியாதையுடன் ஈர்க்க இந்த கடிதத்தினை எழுதியுள்ளதாக அவர்கள் தெரிவித் துள்ளார்.

மேலும், “நீங்கள் மசோதாக்களுக்கு உங்கள் கையொப்பத்தை இட வேண்டாம் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அரசமைப்பு மற்றும் தார்மீக ரீதியான அனைத்து அதிகாரங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில்

எதிர்க்கட்சிகளின் சார்பில்...

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசால்  நிறை வேற்றப்பட்ட மூன்று சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நேற்று (21.9.2020) தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப் பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.