ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மத்திய ஆயுஷ் அமைச்சக பயிற்சி வகுப்பில், இந்தி தெரியாதவர் வெளியேறலாம் என்பதா
August 22, 2020 • Viduthalai • இந்தியா

மத்திய ஆயுஷ் அமைச்சக பயிற்சி வகுப்பில், இந்தி தெரியாதவர் வெளியேறலாம் என்பதா?

கனிமொழி எம்.பி. கடுங்கண்டனம்

சென்னை,ஆக.22, மத்திய ஆயுஷ் அமைச்சக பயிற்சி வகுப்பில், இந்தி தெரியாதவர் வெளியேறலாம் என்று கூறியதற்கு திமுக மக்களவை உறுப் பினர் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித் துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட் டுள்ள தாவது: மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தித் தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது.இது  கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இன்னும் எத்தனை  நாள் இந்தி தெரியாது  என்றால் அவமதிக்கபடுவதை, பொறுத்துக் கொள்ளப் போகிறோம்? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்

ஆக.24ஆம் தேதி முதல்  புறநோயாளிகள் சிகிச்சை நிறுத்தம்

புதுச்சேரி,ஆக.22, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் புறநோயாளிகள் சிகிச்சை 24ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக் கப்பட்டுள்ளது. மருத்துவ மனை ஊழியர்கள் பலருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டதால் சிகிச்சை பிரிவு நிறுத்தப்படுகிறது. தொலைப்பேசி மூலம் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டை குறைந்தபட்சம் 1000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நமது நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக ஜிப்மர் மருத்துவமனை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ மனையின் இயக்குநர் அளித்த தகவலின்படி அங்கே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென 250 படுக் கைகள் கொண்ட வார்டு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜிப்மர் மருத்துவமனை விழுப்புரம் உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நோயாளி களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறது. புதுச்சேரியில் இப்போது ஒவ்வொரு நாளும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகின்ற காரணத் தால் போதுமான அளவு சிகிச்சை அளிக்க முடியாமல் ஜிப்மர் மருத்துவமனை திணறி வருகிறது. எனவே உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டை ஆயிரம் படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். அங்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை நிலையமும் செயல்பட்டு வருகிறது. நாளொன் றுக்கு 1000 பரிசோதனைகள் செய்யும் விதமாக அதைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருந்தது.

 

சுற்றுச்சூழல் வரைவு மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

சென்னை,ஆக.22, சுற்றுசூழல் வரைவு மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சுற்றுசூழல் வரைவு மதிப்பீட்டு அறிக்கையை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதனால் சுற்றுசூழல் அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டுமென்றும் அதுவரை, வரைவு அறிக்கைக்கு தடைவிதிக்கக்கோரியும், மீனவர் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, சுற்றுசூழல் வரைவு அறிக்கை தமிழில் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் சங்கர நாராயணன், சுற்றுசூழல் தாக்க வரைவு அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருக்கிறது என்றும், மேலும் இந்த வரைவு அறிக்கைக்கு பிற உயர் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ள தாகவும் அவர் வாதிட்டார். தொடர்ந்து, இதன்மீது எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

இதனையடுத்து டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெ டுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த வழக்கில் போதிய விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டுமென்ற கோரிக்கை யையும் முன் வைத்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

கரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு முதல்வர் கெஜ்ரிவால் ரூ.1 கோடி நிதியுதவி

புதுடில்லி,ஆக.22, கரோனா வைரஸ் தொற் றால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தினரை நேரில் சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிவா ரணமாக ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கி னார். கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ராஜூ என்பவர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, மஜ்னு தில்லா பகுதியில் உள்ள குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிவாரண நிதிக்கான காசோலையையும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட் டிருந்த தூய்மைப் பணியாளர் ராஜூ கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு டில்லி மக்களுக்கு சேவையாற்றியதில் உயிரிழந்துள்ளார்.

இதுபோன்ற கரோனா தடுப்புப் பணியில் சேவை யாற்றுபவர்களால் பெருமை கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.