ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவோம்
August 27, 2020 • Viduthalai • இந்தியா

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி முதல்வர்கள் உறுதி

புதுடில்லி,ஆக.27- மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருவதற்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநி லங்களின் முதல்வர்கள் உறுதியேற் றுள்ளனர்.

பாஜக, அதன் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று (ஆக.26) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்தார்.

கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினை கள் குறித்து விவாதிப்பதற்காக சிறப்புக் கூட்டத்துக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த சிறப்புக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல் வர் அம்ரீந்தர் சிங், இராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகையை மாநிலங் களுக்கு வழங்காமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவது தொடர் பாக கூட்டத்தின்போது விவாதிக் கப்பட்டது. அப்போது, மகாராஷ் டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘மாநிலங்களுக்கான உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர் பாக மத்திய அரசை எதிர்த்துப் போராட வேண்டுமா அல்லது மத் திய அரசுக்கு அடிபணிந்து நடக்க வேண்டுமா என்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.

‘ஒருங்கிணைந்து வழக்கு தொடுக்க வேண்டும்’: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறு கையில், ‘மாநில அரசுகளின் உரி மைகள் பறிக்கப்படுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம். உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழ லில் நீட் தேர்வையும் ஜேஇஇ முதன்மைத் தேர்வையும் நடத்துவ தற்கு மத்திய அரசு முயன்று வரு கிறது.

இத்தகைய இக்கட்டான சூழ லில் மாணவர்கள் தயாராகாததால் அத்தேர்வுகளை ஒத்திவைக்குமாறு அனைத்து மாநிலங்களும் ஒன்றி ணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்’ என்றார்.

‘கூட்டாட்சி தத்துவத்தை சீர் குலைக்கிறது’: கூட்டத்தின்போது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பேசுகையில், ‘கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகை யில் மத்திய அரசு நடந்து வருகிறது. அதற்காக பல்வேறு அமைப்புகளை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது’ என்றார்.

தேசிய கல்விக் கொள்கை, சுற் றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.