ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மக்களின் தூக்கம், மனநலத்தை பாதித்த கரோனா ஊரடங்கு
October 24, 2020 • Viduthalai • இந்தியா

ஆய்வில் புதிய தகவல்

வாசிங்டன், அக்.24 கரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு மக்களின் தூக்கம், உணவுப்பழக்கம் போன்றவற்றை மாற்றியமைத் திருப்ப துடன், உடல் பருமனையும் அதிகரித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் லூசி யானா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் மக்களிடம் ஆய்வு நடத்தினர். அமெ ரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கி லாந்து மற்றும் 50-க்கும் மேற்பட்ட நாடு களை சேர்ந்த 7,754 பேரிடம் ஆய்வு நடத்தி, ‘ஒபீசிட்டி’ என்ற மருத்துவ இதழில் அவர்கள் கட்டுரை எழுதி யுள்ளனர்.

உலக அளவில் ஆயிரக்கணக்கான மக்களிடம் அவர்களது வாழ்க்கை முறை மாற்றம் குறித்து முதல் முதலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி, வீட்டிலேயே தங்கியிருக் கும் உத்தரவுகள் மக்களுக்கு நேர்மறை யான ஆரோக்கியத்தை கொடுத்திருக் கின்றன. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. குறைந்த அளவில் அடிக்கடி உண்பதால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் அதிக நொறுக்குத்தீனி, குறைவான உடற்பயிற்சி, தாமதமாக படுக்கைக்கு செல்தல், குறைவான தூக்கம், கவலைகள் இரட்டிப்பு போன் றவற்றுக்கு இந்த ஊரடங்கு காரணமாகி இருக்கிறது.

உடல் பருமன் கொண்டவர்களை பொறுத்தவரை இந்த ஊரடங்கு நாட்களில் அவர்களுக்கு மேலும் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர்.

உடல் பருமன் கொண்டவர்கள் தங்கள் உணவு கட்டுப்பாட்டை மேலும் அதிகரித்து இருக்கிறார்கள். அதேநேரம் அவர்களது மனநலம் வெகுவாக பாதிக் கப்பட்டு எடை அதிகரிப்பு நிகழ்ந்துள் ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஊரடங்கு நாட்கள் உடல் பருமன் போன்ற நாள் பட்ட நோய்களை மக்களுக்கு கொண்டு சேர்த்திருப்பதாக ஆய்வா ளர்கள் தெரிவித்து உள்ளனர்.

 

பூண்டி ஏரிக்கு 33 நாட்களில் 2 டி.எம்.சி. தண்ணீர் வந்தது

செங்குன்றம், அக்.24   கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அங்கிருந்து பூண்டிக்கு வினாடிக்கு 1,000 கன அடியாக திறந்து விட்டு பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்ப தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். கடந்த மாதம் 21-ஆம் தேதி ஏரியின் நீர் மட்டம் 17 அடியாக பதிவாகி வெறும் 107 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் இருப்பு இருந்தது. நேற்று நீர் மட்டம் 27.95 அடியாக உயர்ந்தது.

ஏரியில் 1.310 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் நேற்று வரை 33 நாட் களில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2.014 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

 

பிரதமர் மோடி எங்கு சென்றாலும்  பொய் மட்டுமே சொல்கிறார்

ராகுல் காந்தி தாக்கு

 

 

ஹிசார், அக்.24 பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய் சொல்வதாகவும், பீகார் மக்களிடம் பொய் சொல்ல வேண்டாம் என்றும் ராகுல் காந்தி பேசினார்.

பீகார் மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடை பெற உள்ள நிலையில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற் கொண்டு பிரச்சாரம் மேற் கொண்டுள்ளனர். பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தை தொடங் கினார். தனது முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், நவடா மாவட்டம் ஹிசுவாவில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முதலமைச்சர் வேட் பாளருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு வேட் பாளர்களை ஆதரித்து பேசினார்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

பிரதமர் மோடி அவர்களே பீகார் மக்களிடம் பொய் சொல்ல வேண்டாம். பீகார் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினீர்களா? கடந்த தேர்தலில் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால் யாரும் வேலை பெற வில்லை.

பொது இடத்தில் பிரதமர் பேசும்போது ராணுவம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என்று கூறுகிறார். ஆனால் அவர் வீட்டிற்கு வந்ததும், அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார்.

விவசாயிகளை பாதிக்கும் வகை யில் 3 புதிய வேளாண் சட்டங்களை மோடி அரசு உருவாக்கியுள்ளது. அவர்கள் பீகாரில் மண்டிகள் மற் றும் குறைந்தபட்ச ஆதரவு விலையை முதலில் முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போது அவர்கள் அதை நாடு முழுவதிலும்  செய்கிறார்கள். லட்சக்கணக் கானோரை வேலையில்லாமல் ஆக்கப்போகிறார் பிரதமர். அவர் எங்கு சென்றாலும் பொய்களை மட்டுமே சொல்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.