ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
போராட்டங்களை தடுத்து நிறுத்த மீண்டும் ஊரடங்கை செயல்படுத்தும் பிரதமர் மோடி
September 23, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி, செப்.23 கரோனா தொற்று அதிகமுள்ள மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த வுள்ளார், இதன் பிறகு மீண்டும் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு வரலாம் என்று கூறப் படுகிறது, உண்மையில் நாடு முழு வதும் விவசாய விரோத மசோ தாவிற்கு எதிரான போராட்டம் வெடித்த நிலையில் கரோனா பெயரைச் சொல்லி மீண்டும் ஊரடங்கை கொண்டுவந்து விவசாயிகள் போராட்டத்தை மழுங்கடிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது

இந்தியாவில்  56,40,496 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட் டுள்ளது. இதில் 45,81,820 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 90,021 பேர் பலியாகியுள்ளனர். 9,67,848 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராட்டிர மாநி லத்தில் 12,42,770 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கடுத்த இடங்களில் ஆந்திரா (6,39,302), தமிழ்நாடு (5,52,674), கருநாடகா (5,33,850), உத்தரப் பிரதேசம் (3,64,543), டில்லி (2,53,075), மேற்குவங்கம்(2,31,484) ஆகிய மாநி லங்கள் உள்ளன. கரோனா நோய்த் தொற்று பரவாத வண்ணம் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து வர்த்தக நட வடிக்கைகளைக் கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரு கின்றன. ஆனால் இந்த இடத்தில் தான் பிரச்சினை ஆரம்பித்தது. சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் காற்றில் பறக்க விடப்பட்டதால் கரோனா பாதிப்பு மீண்டும் அதி கரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் இருக்கின்றன.

குறிப்பாக நோய்த்தொற்று அதிக முள்ள மாநிலங்கள் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். இந்நிலையில் கரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள 7 மாநில முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் உடன்  மோடி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இதுதொடர்பாக வெளியிடப் பட்டிருந்த அரசின் அறிக்கையில், கோவிட்-19 தொற்று அதிகமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்கள் உடன் பிரதமர் உயர் மட்ட ஆலோசனை இன்று நடத்த வுள்ளார். அதில் கரோனா நிலவரம், மாநில அரசுகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பேசப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் மாநில/ யூனியன் பிரதேச அரசுகள்,

 மகாராட்டிரா, ஆந்திரப்பிரதேசம்,  கருநாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டில்லி, பஞ்சாப் ஆகியவை ஆகும். இந்த மாநிலங்கள் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் 63 சதவீ தத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இவற்றில் மகாராட்டிரா, பஞ்சாப், டில்லி ஆகிய மாநிலங்கள் பலி விகிதம் 2 சதவீதத்தைப் பெற்றுள்ளன. இந்த கூட்டத்தில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட வாய்ப் புள்ளது.

 ஆனால் உண்மையில் விவசாயிகளுக்கு எதிரான சட்ட மசோதா இரு அவையிலும் நிறைவேற்றப்பட் டதை எதிர்த்து நாடு முழுவதும் கடுமையான போராட்டம் எழுந் துள்ளது, இந்த நிலையில் இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமான மீண்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை கரோனா பெயரில் மோடி அறிவிக்க உள்ளதாக விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கி ணைப்பவர்கள் கூறி வருகின்றனர்.