ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பொள்ளாச்சியில் தந்தைபெரியார் 142ஆம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட கலந்துரையாடலில் முடிவு
September 10, 2020 • Viduthalai • மற்றவை

பொள்ளாச்சி, செப். 10-  கோவை பொள்ளாச்சி நகரப் பகுதி யில் மிக சிறப்பாக தந்தை பெரியார் அவர்களின் 142 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடுவது என நகர திராவிடர் கழகம் கலந்துரை யாடலில் முடிவுசெய்யப்பட்டது.

கோவை மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் பொள் ளாச்சி நகர திராவிடர் கழக கலந்துரையாடல்  மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர்  தலைமையில் 6.9.2020 அன்று நடைபெற்றது. கோவை மண் டலச் செயலாளர் ச.சிற்றரசு கருத்துரை வழங்கினார். வடி வேல் வரவேற்றார்.

மாவட்டச் செயலாளர் திக.செந்தில்நாதன், பொள் ளாச்சி பொறியாளர் தி பரம சிவம், நகரத் தலைவர் வீர மலை, நகரச் செயலாளர் நாக ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாரி முத்து, சிவராஜ், செழியன், முருகா னந்தம், கார்த்தி, வீர மணி ஆனந்தசாமி, பொன் ராஜ், புண்ணியமூர்த்தி.வெற்றி செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொள்ளாச்சி பகுதி முழு வதும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்து இடங் களிலும் சுவரெழுத்துப் பணி களை உடனே தொடங்குவது எனவும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சுவரொட் டிகளை ஒட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

நிறைவாக நகர அமைப் பாளர் ஆனந்தசாமி நன்றி யுரை வழங்கினார்.