ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பொருளாதாரச் சரிவை மீட்க மத்திய அரசுக்கு  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் ஆலோசனைகள்
August 13, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி,ஆக.13 கரோனா வைரஸ் பாதிப்பினாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடை வினாலும் ஏற்பட்டுள்ள சேதங் களைச் சரி செய்ய பிரதமர் மோடி அரசு 3 வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று முன்னாள் பிர தமர் மன்மோகன் சிங் தெரிவித் துள்ளார்.

பிபிசிக்கு மின்னஞ்சலில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு: மக்களின் வாழ்வா தாரங்களைக் காப்பாற்ற நேரடியாகப் பண உதவி, செலவு செய்யும் திறனைத் தக்க வைத்தல், வர்த்தகங்களுக்குத் தொழில்களுக்கு அரசு ஆதரவுடன் கூடிய கடன் உத்தர வாதத் திட்டங்கள் மற்றும் நிறுவன தன்னாட்சி மற்றும் நடைமுறைகள் மூலம் நிதி கிடைக்கச் செய்தல் ஆகிய வழி முறைகளை கையாள வேண்டும்.

இந்தப் பொருளாதார நெருக்கடி கரோனா வைரஸ் பாதிப் பினால் ஏற்பட்ட மனிதார்த்த நெருக்கடியாகும். இதற்குத் தீர்வு காணும்போது நம் சமூகத்துக்கேயுரிய உணர்வுகளுடன் அணுக வேண்டுமே தவிர எண்களாலும் பொருளாதார முறைமைகளாலும் அளக்கக் கூடாது.

வர்த்தகங்களுக்கு உதவ, நேரடி பணம் அளித்தல் என்பதற்கு பெரிய அளவில் கடன் வாங்க வேண்டும். இது தவிர்க்க முடியாதது. இதற்காக ஒட்டுமொத்த உள்நாட்டு உற் பத்தியான ஜிடிபியில் ராணுவ, சுகாதார, பொருளாதார சவால்களைச் சமாளிக்கக் கூடுதலாக 10% செலவானாலும் செய்துதான் தீர வேண்டும்.

மார்ச் மாத காலாண்டின் முடிவில் பொருளாதாரம் 3.1% ஆக சரிவடைந்தது. 11 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலை. கடன் வாங்குவதன் முலம் இதனை சரி செய்ய முடிந்தால், இதன் மூலம் எல்லைகளைக் காக்க முடியும், வாழ்வாதா ரங்களை தற்காக்க முடியும் என்றால், பொருளாதார மேம்பாடு அடைய முடியும் என்றால் கடன் வாங்குவதில் தவறில்லை இவ்வாறு கூறியுள்ளார் மன்மோகன் சிங்.

 

நான் இதுவரை யாருக்கும் மொழியாக்கம் செய்ததே கிடையாது  : கனிமொழி

சென்னை, ஆக.13 நான் இதுவரை யாருக்கும் மொழியாக்கம் செய்ததே கிடையாது என தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார்.

தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில் நம்முடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில் சி.அய்.எஸ்.எப். அதிகாரிகள் நட வடிக்கை எடுத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழகத்தில் மட்டும் நடக்கும் பிரச்சினை அல்ல. பல இடங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடிய பிரச்சினை. எல்லா இடங்களிலும் இப்படி இருக்கக் கூடிய மனப்பான்மையைச் சரி செய்தால் சாதாரண மக் களும் இந்தியர்கள்தான்; அவர்களுக்கும் நாட்டில் மரி யாதை இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தும்.

நான் இதுவரை யாருக்கும் இந்தியில் மொழியாக்கம் செய்து பேசியதே கிடையாது. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குப் பேசியதாகக் கூட நினைவு இல்லை. இந்தி தெரிந்தால்தான் மொழியாக்கம் செய்து பேச முடியும். நான் படித்த பள்ளியில் 2 மொழி தான். ஆங்கிலம், தமிழ் மட்டும் படித்தேன்.

டில்லிக்கு சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தி கற்றுக் கொள்ளவில்லை. இது எல்லா தலைவர் களுக்கும் தெரியும். நான் தான் இந்தியில் மொழி பெயர்த்ததாகக் கூறினால் அதை நிரூபிக்க வேண்டும். எனக்கோ, வேறு யாருக்கோ இந்தி தெரியுமா?, தெரியாதா? அதைத் தாண்டி இந்தி தெரிந்தால்தான் இந்தியர்களாக இருக்க முடியும் என சொல்வது எவ்வளவு பெரிய அவமானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொள்ளாமல் எனக்கு இந்தி தெரியுமா?, தெரி யாதா?, மொழிபெயர்ப்பு செய்தேனா? என்பது பெரிய விஷயம் கிடையாது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கூட தனக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகப் பகிர்ந்துள்ளார்.

குமாரசாமி உள்பட பலர் தங்க ளுடைய உணர்வுகளை, சம்பவங் களைப் பகிர்ந்து உள்ளனர். இந்தி தெரிந்தால்தான் இந்தியாவில் இருக்க முடியும். ஒரு மதத்தைப் பின்பற்றி னால்தான் நாட்டில் இருக்க முடியும் என்பதை கண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.