ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் மறைவு: கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
September 14, 2020 • Viduthalai • கழகம்

தஞ்சை, செப். 14- உரத்தநாடு ஒன்றியம் புலவன்காடு பெரியவர் நல்லான் அவர்களின் மகனும், பேராசிரியர் உ.பர்வீன் அவர்களது இணையரும், மாநல் மீன்பண்ணை உரிமையாளர் மாநல். பரமசிவம், புலவன்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாநல்.மெய்க்கப்பன், பொறியாளர் மாநல்.தங்கமணி, மாநல்.செயலெட்சுமி. ஆசிரிய மான மாநல்.இளமுருகு ஆகியோ ரின் அண்ணனும், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான பேராசிரியர்.நல்.இராமச்சந்திரன் உடல்நலக்குறை வால் 13.9.2020 அன்று நண்பகல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் மறைவுற்றார்.

மறைவுச் செய்தி அறிந்தவுடன் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, கல்விக் காவலர் பூண்டி துளசி அய்யா வாண்டையார் ஆகியோர் பேராசிரியர் பர்வீனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறு தல் கூறினார்கள்.

மருத்துவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் சார்பில் வட்டாட்சியர் வெங்கடேசன், மருத்துவக்கல்லூரி டீன் மருதுரை, பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில செயலாளர் பேராசிரியர் ப.சுப்ரமணியம்,   பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் முதல்வர் பேராசிரியர். கோ.மல்லிகா, கழகப் பொதுச்செயலாளர் இரா.செயக் குமார், கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டியன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வம், பெரியார் வீர விளை யாட்டுக் கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணிச் செயலா ளர் மருத்துவர் அஞ்சுகம்பூபதி, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டத் துணைச் செயலாளர் க.சந்துரு, மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச் செல்வி, மாவட்டமகளிர்பாசறை செயலாளர் ச.அஞ்சுகம், மாநகரத் தலைவர் சு.நரேந்திரன், உரத்தநாடு ஒன்றியத் தலைவர் த.செகநாதன், ஒன்றியச் செயலாளர் ஆ.இலக்கு மணன், மாநகர பகுதிச் செயலாளர் இரா.இளவரசன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு

அ. இராமலிங்கம், பேரா.கு.குட்டி மணி, வேர்ட்ஸ்வொர்த் பெரியார் மணி, சி.திராவிடமணி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மக் கள் தொடர்பு அலுவலர் இளங்கோ, ச.பிரகாசம், பெரியார்நூற்றாண்டு பாலிடெக்னிக் பேரா.மணிவண் ணன், கே.ஆர்.பன்னீர்செல்வம், உரத்தநாடு இளைஞரணித் தலை வர் பு.செந்தில்குமார் ஆகியோர்  மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்கள், மாலை நான்கு மணிக்கு உடல் எடுத்துச் செல் லப்பட்டு புலவன்காட்டில் தாயார் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட விவசாயஅணி செயலாளர் பூவை.இராமசாமி, பெரியார் அறக்கட் டளை உறுப்பினர் கு.அய்யாத் துரை,  ஒன்றிய மகளிரணி அமைப் பாளர் அல்லிராணி, திரிபுரசுந்தரி, வீதிநாடகக்குழுமாநில அமைப்பா ளர் பெரியார்நேசன், ஒன்றிய துணைச்செயலாளர் நா.பிரபு, உரத்தநாடு நகரத்தலைவர் பேபி.ரெ.இரவிச்சந்திரன், நகரச் செயலா ளர் ரெ.இரஞ்சித்குமார், மேற்கு பகுதிச் செயலாளர் புலவர்.இரா. மோகன், மண்டலக்கோட்டை செந்தில், சுரேந்தர், தெற்குநத்தம் க.சசிக்குமார், குமரவேல், ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் பால கிருட்டினன், ஒன்றியக்குழுத் தலை வர் பார்வதிசங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரியங்கா இளந் தமிழன், வெள்ளூர் முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் நெடுவை சா.செகதீசன், பாளாம் புத்தூர் கணேசன், பூவத்தூர் சங்கர், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பழனிவேல் வாண் டையார், புலவன்காடு அன்புமணி, தமிழேந்தி, தெலுங்கன்குடிக்காடு பூபதி, தி.மு.க. பொறுப்பாளர்கள் மலர்மன்னன், தவ.ஆறுமுகம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் பாண்டியன், சுப்ரமணியன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் திரண்டுவந்து கண் ணீர்மல்க இறுதி மரியாதை செலுத் தினார்கள்.