ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
September 25, 2020 • Viduthalai • தமிழகம்

திருச்சி, செப். 25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் மன்றத்தின் சார்பாக 17.09.2020 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பெரியார் மன்றச் செயலர் பேராசிரியர் கே.ஏ.எஸ். முகமது சபீக் வரவேற்புரையாற்றினார்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தமது தலைமையுரையில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளினை இந் தியா மட்டுமல்லாது உலக நாடுகள் முழுவதும் கொண்டாடி வருகின்றன. தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தைக்காட்டிலும் சமூகநீதிக்கு அநீதி ஏற்படும்  இன்றைய சூழ் நிலையில் மிகவும் தேவைப்படுகிறார்கள்.

அத்தகைய சமூகநீதிக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் முதலில் அதனை எதிர்த்து குரல் கொடுப்பவர்தான் தமிழர் தலைவர் நமது நிறுவனத்தலைவர் ஆசிரியர் அவர்கள். இன் றைய காலக்கட்டத்திலும் காணொலி வாயிலாக சமுதாயப்பணிகளை தொடர்ந்து தொய்வின்றி செய்துகொண்டிருக்கிறார்கள். இத்தகைய தலைவரின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் நாமும் இணைந்திருப்பதுதான் பெருமை மற்றும் சிறப்பு. மருந்தியலோடு வாழ்வியலை தரக்கூடிய பெரியாரியலையும் மாணவ சமுதாயத்திற்கு நாம் கொண்டு சேர்ப் போம். சுயமரியாதை பேருலகு படைப்போம் என்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அரசி யல் அறிவியல் மய்யத்தின் தமிழ்த்  துறை பேராசிரியர் முனைவர் நா. லெனின் மானுடப்பற்றாளர் தந்தை பெரியார் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில்  மானிடப்பற்று ஒன்றையே குறிக் கோளாகக் கொண்டு தம் உடலில் ஏற்பட்ட நோய்களையும் பொருட்படுத்தாது தம் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபட்டவர்தான் பகுத் தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள். சமூகத்தை பீடித்திருக்கும் சாதிக்கொடுமைகள், மூடநம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனங்கள் போன்றவற்றை கண்டு களம் இறங்கி போரா டியவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

இன்று நம் நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை, மொழி சுதந்திரம் இல்லை, நம் மண்ணை நாமே பாதுகாக்க முடியவில்லை இதுபோன்ற சமூக இன்னல்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்றை யெல்லாம் எதிர்த்து தொடர்ந்து பேசிக்கொண் டிருப்பவர்தான் வேந்தர் ஆசிரியர் அவர்கள்.  சமூக விஞ்ஞானியாக தந்தை பெரியார் காண விரும்பிய சமத்துவ சமுதாயம் படைக்க அவர் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளின் மய்யக்கருத்து வெல்லட்டும் சமூகநீதி,  வீழட்டும் மனுநீதி. இதனை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று கூறி தமிழ் பற்று, சமுதாயப்பற்று தொடர்பான பல பாடல்களை பாடி நாகம்மையார் குழந்தைகள் இல்ல மாண விகள், பெரியார் மருந்தியல் கல்லூரி ஆய்வக மற்றும் தோட்டப்பணியாளர்களுக்கு சிறப்பு பரிசினை வழங்கினார். மேலும் தாம் எழுதிய 10 புத்தகங்களை பெரியார் மருந்தியல் கல்லூ ரியின் நூலகத்திற்கு நன்கொடையாக முதல்வர் அவர்களிடம் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூ ரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் மற்றும் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.   கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர் கள் மற்றும் நாகம்மை குழந்தை இல்ல மாண விகள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச் சிக்கு பெரியார் மன்ற இணைச் செயலர் திருமதி அ.சமீம் நன்றியுரையாற்ற கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது. முன்னதாக நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மனிதநேய மாண்பாளர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் திராவிடர் மாணவர் கழகம் மற்றும் பெரியார் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்கள்,  நாகம்மையார் குழந்தைகள் இல்ல மாணவிகள் மற்றும் பணியாளர்கள், பெரியார் பெண்கள் விடுதியின் பணியாளர்கள் மற்றும் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பாதுகாவலர்களுக்கு  சோப்பு, கிருமிநாசினி, முகக்கவசம், துண்டு மற்றும் போர்வை அடங்கிய பெட்டகம் வழங்கப்பட் டது.

இந்நிகழ்ச்சியில்   மறைந்த முதுபெரும் வரியியல் வல்லுநரும் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இணைவேந்தருமான மரியாதைக்குரிய ச.இராஜரத்தினம் மற்றும் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் நல். இராமச் சந்திரன்  ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப் பட்டது.