ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 53ஆவது ஆண்டு பொறியாளர் தினம் கொண்டாட்டம்
September 27, 2020 • Viduthalai • கழகம்

வல்லம்,  செப். 27- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தின் கட்டடவியல் துறையால் ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்ட 53ஆவது பொறியாளர் தினக் கொண் டாட்டங்கள் 16.9.2020 அன்று நடை பெற்றன. ஜி.சிறீலால் உதவிப் பேராசிரி யர் (சிவில்) வரவேற்புரை நிகழ்த்தினார்.

கே.எம்.பி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி புவனேஸ்வரி, ஒடிசாவின் இயக்குநர் மற்றும் ஹாங் காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வருகை ஆராய்ச்சி அறிஞர் டாக்டர் தனதா கே.மிஸ்ரா (Dr.Dhanada K.Mishra) சொற்பொழிவு நிகழ்த் தினார். அவரது உரையில் காலநிலை நெருக்கடி நிலைபாடு, நிலையான வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை கொண்ட உள் ளூர் பொருளாதாரத்தில் பொறியாளர் கள் பங்கினை குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.எஸ்.வேலுசாமி, இணை துணை வேந்தர் பேரா. எஸ். தேவதாஸ், கல்விப்புல முதன்மையர் பி.கே.சிறீவித்யா என கல்வியாளர்கள் பேரா. எஸ். செந்தமிழ்குமார், கட்டடவி யல் துறைத்தலைவர், பேரா. ஆர். ஜெயந்தி, கட்டடவியல் துறை மற்றும் துறைத்தலைவர்கள், இயக்குநர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்குபெற்றனர்.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று ஆசிரிய உறுப்பினர்களுக்கு விரு துகள் வழங்கப்பட்டன. சிவில் இன்ஜி னியரிங் துறையின் பேராசிரியரும் தலை வருமான பேராசிரியர் ஆர். ஜெயந்தி, இணைப் பேராசிரியர் மற்றும் கட்டடக் கலைத்துறை தலைவர், திரு.எஸ்.ரமேஷ் பாபு - ஸ்மார்ட் சிட்டி தஞ்சாவூர் திட் டத்தில் ஒரு ஆலோசனை திட்டத்தை பெரியார் மணியம்மை அறிவியல் மற் றும் தொழில்நுட்ப நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிறைவு செய்ததற்காக (ரூ.48.05 கோடி) இது இந்திய அரசாங்கத் தின் முதன்மைத் திட்டம் மற்றும் இயந் திர பொறியியல் துறையின் பேராசிரியர் தலைவர் பேரா. டி.ஜெயசிம்மன், நானோ காம்போசைட் மற்றும் நானோ பொருள் களைப் பயன்படுத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அவர் செய்த பங்களிப்பு மிக பயனுள்ளதாக இருக்கிறது எனக் கூறினார். இறுதியில் பேரா.டி.நரேந்திர பிரசாத், உதவி பேராசிரியர் நன்றியினை தெரிவித்தார்.