ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரோபோட்டிக்ஸ் மற்றும் உட்பொதிக்கப்பட்ட அமைப்பிற்கான மய்யம் தொடக்கம்
August 9, 2020 • Viduthalai • மற்றவை

தஞ்சாவூர், ஆக. 9- தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்)  அய்.அய்.டி. பம்பாயுடன் இணைந்து ரோபோட்டிக்ஸ் மற்றும் உட்பொதிக் கப்பட்ட அமைப்பிற்கான மய்யத்தைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 37 நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ளது. அதில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) ஒன்றாகும்.

இ-யந்திரா (e-Yantra) - இம்மய்யம் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பியல் துறையும் மற்றும் மும்பையின் நெக்ஸ் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல் கலைக்கழகம்) பேராசிரியர்கள் அய்.அய்.டி பம்பாயில் ரோபோட்டிக்ஸ் அடிப்படை கள் குறித்து பயிற்சி பெற்று மேலும் ஆன் லைனில் வெற்றிகரமாக பணி அடிப்படையிலான பயிற்சியையும் முடித்தனர்.

மும்பை அய்.அய்.டி. இ-யந்திரா முதன்மை புலன் ஆய்வாளர் பேராசிரியர் காவிஆரியா காணொலி மூலம் இம்மய் யத்தை நேற்று முன்தினம் (7.8.2020) திறந்து வைத்து இதன் சிறப்பியல்புகளை எடுத்துரைத்து உரையாற்றும்போது ரோபோட்டிக்ஸ் மூலம் கல்வியை பரப்புவதற்கான ஒரு முன் முயற்சி திட்டமேயாகும். இது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவி யால் செயல்படுகிறது. என்றும் இதன் ஆய் வகங்கள் பொறியியல் மாணவர்களுக்கு கைகோர்த்து அவர்கள் கற்பதற்கு, ஆய்வ கங்கள் மற்றும் வழிகாட்டுதலுக்கு சிறந்த மய்யமாகும். சவாலான பிரச்சினைகளை எடுத்துத் தீர்வுகளை வழங்குவதற்கான நடைமுறைக் கண்ணோட்டத்துடன் இந் தியாவில் அடுத்த தலைமுறைப் பொறியா ளர்களை உருவாக்குவதே இதன் குறிக் கோளாகும் என்றார்.

மாணவர்கள் அவர்களின் புதுமையான யோசனைகளை செயல்வடிவமும், காட் சிப்படுத்தவும் மேலும் ஆய்வகங்களை புதுமை மய்யங்களாக மாற்றுவது குறித்து விவாத கருத்தரங்கங்களைப் பல்கலைக் கழகம் ஒன்றிணைக்கிறது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.வேலு சாமி, பேராசிரியர் எஸ்.தேவதாஸ்,  கல்விப் புல முதன்மையர் பேராசிரியர் பி.கே.சிறீ வித்யா பேராசிரியர்கள் ஆர்.ராகேஷ், உ. சரவணக்குமார், பி.இளங்கோவன், என். சிவக்குமார் ஆகியோர் தொடக்க அமர் வின்போது காணொலி மூலம் பங் கேற்றனர்.