ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெரியார் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம் தாராபுரம் இளைஞரணி கூட்டத்தில் முடிவு
September 8, 2020 • Viduthalai • மற்றவை

தாராபுரம், செப். 8- 30.8.2020 ஞாயிறு இரவு 7 மணிக்கு காமராஜபுரம் சின்னதுர்க் கையன் இல்லத்தில் நகர கழக இளைஞரணி கூட்டம் கழக இளைஞரணி தலைவர் ஆ.மு னீஸ்வரன் தலைமையில் நடை பெற்றது.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் நா.சக்திவேல், நகர கழக அமைப்பாளர் இரா. சின்னப்பதாஸ் ஆகியோர் முன் னிலையிலும் நடைபெற்றது.

கலந்து கொண்டவர்கள்.

பொதுக்குழு உறுப்பினர் நா.சக்திவேல், கா.சின்னத் துர்க்கையன், ஆ.முனீசுவரன், கு.பொன்னரசு, இரா.சின்னப் பதாசு, வே.மாரியப்பன், பு.முரு கேஷ், மு.மோகன், கு.பரத் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

தீர்மானங்கள்

  1. நகர கழக அமைப்பாளர் இரா.சின்னப்பதாஸ் அவர்களின் சகோதரி மகனும் தாராபுரம் நகர கழக இளை ஞரணி அமைப்பாளருமான ர.குணசேகரன் 21.8.2020 அன்று மறைவுற்றார். அவ ருக்கு வீரவணக்கத்தையும் அவரை இழந்து வாடும் அவ ரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
  2. எதிர்வரும் 17.9.2020 தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண் டாடும் வகையில் சுவர் எழுத்து, சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்வதென இக் கூட்டம் முடிவு செய்கிறது.
  3. செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் கழகத் தோழர் இல்லங்களில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும் கழக கொடி யேற்றியும் கொடியேற்றும் இடங்களில் தந்தை பெரியார் படம் வைத்து மாலை அணி வித்தும் இனிப்பு வழங்கியும் மிக சிறப்பாகக் கொண்டாடு வதென முடிவு செய்யப்பட்டது.