ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடிட திருச்சி மண்டல கலந்துரையாடலில் முடிவு
September 5, 2020 • Viduthalai • கழகம்

திருச்சி, செப். 5- திருச்சி மண்டல திராவிடர் கழக காணொலி கலந்துரையாடல் கூட்டம் 1.9.2020 செவ்வாய்க் கிழமை அன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.

திருச்சி மாவட்டத் தலை வர் ஞா.ஆரோக்கியராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கூட்டத்திற்கு மண்டலத் தலைவர் நற்குணம், மண்ட லச் செயலாளர் ப.ஆல்பர்ட், கரூர் மாவட்டத் தலைவர்  ப.குமாரசாமி, கரூர் மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, திருச்சி மாவட்டச் செயலா ளர் மோகன்தாஸ், லால்குடி மாவட்டச் செயலாளர் அங்க முத்து, மாநில தொழிலாள ரணிச் செயலாளர் மு.சேகர், மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர் மு.க. இராஜசேகரன், மண்டல மக ளிரணிச் செயலாளர் கிரேசி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்.

கழகப் பொதுச்செயலாளர் உரை

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பற்றியும் தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடு வது, கிராமம் முதல் நகரங்கள் வரை பெரியார் படங்கள், சுவரொட்டிகள், சுவர் எழுத் துக்கள், கழக கொடியேற்றுதல் எங்கு நோக்கினும் ‘பெரியார், பெரியார்’ என்னும் முழக்கம் கேட்க வேண்டும். கழகத் தோழர்களிடம் கழகப் பொறுப்பாளர்கள் தொடர் போடு இருப்பது கரோனா காலத்தில் அவசியம் எனவும், கரோனா காலத்திலும் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் ஓய்வின்றி இயங்குவதோடு நம்மையும் இயங்கச்செய்வது குறித்தும் கழகப்பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தனது தலை மையுரையில் குறிப்பிட்டார்.

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழ கிரிசாமி, இலால்குடி பாலச் சந்திரன், திருச்சி மாவட்ட மகளிரணிச் செயலாளர் சாந்தி, பொதுக்குழு உறுப் பி னர் கரூர் ஜெகநாதன், பெல். ஆறுமும், திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் மாரியப் பன், இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் பாலசுப்ரமணியன் ஆகி யோர் உரையாற்றினார்கள்.

தலைமைக் கழகப் பேச்சா ளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி சிறப்புரையாற்றி னார். பி.ஜே.பி., ஆர்.எஸ். எஸ்., சங்பரிவார் அமைப்பு களின் மனுநீதி கொள்கைக்கு ஒரே மாற்று தந்தை பெரியா ரின் மனிதநேயம், சமூகநீதி, மானுடப்பற்று கொள்கை களே, பெரியார்தான் வெல் வார், நூற்றாண்டுகள் பல கடந்தாலும் பெரியார்தான் பேசப்படுவார். மனித நேயத் திற்கு எதிரான மதவாதம் ஒருபோதும் வெல்லாது.

தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியோடு கொண் டாடுவோம். தந்தை பெரியார் காண விரும்பிய முழுமை யான சமுதாயத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை யில் வென்றெடுப்போம். போட்டி போட்டு பெரியார் பிறந்த நாள் விழா ஏற்பாடு களை செய்வோம்என தனது உரையில் குறிப்பிட்டார்

இறுதியாக திருச்சி மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் க.அம்பிகா நன்றி கூறினார்

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன:

தீர்மானம் 1.

விடுதலையை பரப்புவோம்.

சமூக நீதிக்கு ஏற்படும் ஆபத்துகள் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்குகள் ஆகியவைகளை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளுக்கு வழிகாட்டிடும் நிலையிலிருந்து சங்கநாதம் புரிந்துவரும் விடுதலை நாளி தழை PDFல் பல லட்சம் நபர் களிடம் சேர்க்கும் பணியில் அணைத்து தோழர்களும் ஈடுபட இக்கலந்துரையாடல் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2

தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது.

1.8.2020 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களு டைய தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற திரா விடர் கழகத் தலைமைச் செயற் குழு மற்றும் மாவட்டத் தலை வர்கள், மாவட்டச் செயலா ளர்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

 தீர்மானம் 3

தந்தை பெரியார் 142ஆவது பிறந்தநாள் விழா!

அறிவுலக ஆசான் தந்தை  பெரியார் அவர்களின் 142 ஆவது பிறந்த நாள் விழா வினை வரும் செப்டம்பர் 17 அன்று திராவிடர்களின் தேசிய விழாவாக மிக எழுச்சிமிக்க வகையில், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்தோறும் இல்லங்கள்தோறும் பெரியார் படம் வைத்து, மாலை அணிவித்து கழகக் கொடிகளை ஏற்றுவது என் றும், பெரியார் படங்கள் தாங் கிய வண்ண சுவரொட்டி களை அச்சடித்து ஊர்தோ றும் ஒட்டுவது என்றும், சுவர் எழுத்து விளம்பரங்கள் செய் வது, இனிப்புகள் வழங்கியும் எழுச்சிமிக்க செயல்பாடுகளு டன் மிகச்சிறந்தமுறையில் கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்படுகிறது

புதிய பொறுப்பாளர்கள்:

திருச்சி மாநகரத் தலைவர்: ச.துரைசாமி

திருச்சி சுப்ரமணியபுரம் பகுதி தலைவர்: சி.மருதை