ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பூஜை செய்தால் கரோனா போய்விடுமா
October 15, 2020 • Viduthalai • இந்தியா

பூஜை செய்தால் கரோனா போய்விடுமா?

ஆப்பிள் வைத்து கோயிலில் பூஜையாம்

அகமதாபாத், அக்.15 கரோனா நோயாளிகளுக்காக

3 ஆயிரம் கிலோ ஆப்பிள்களை வைத்து சிறப்புப் பூஜை நடத்தி, அகமதாபாத் கோயிலில் வழிபாடு மேற்கொள்ளப் பட்டது.

அகமதாபாத்தில் சிறீசுவாமி நாராயண் மந்திர் எனும் பெயரிலுள்ள கோவிலில் கரோனா பொதுமுடக்கம் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் சுவாமிநாராயண் கோயில் மூடப்பட்டது. அரசு பொதுமுடக்கத் தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், நவராத்திரியை முன்னிட்டு சாமி நாராயண் மந்திர் 13.10.2020 அன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில், கோயிலில் கரோனா நோயாளிகளுக்காக 3 ஆயிரம் கிலோ ஆப்பிள்களை வைத்து சிறப்புப் பூஜை நடத்தி, வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சிவப்பு, பச்சை மற்றும் தங்க நிறங்களில் ஆப்பிள்கள் சிறு முக்கோண வடிவில் அடுக்கப்பட்டன. அவை அனைத்தும் பூஜைக்காக உருவாக்கப் பட்ட சிறப்பு மரப் படிகளில் காட்சிப் படுத்தப்பட்டன.

இது குறித்துக் கோயில் பூசாரி கூறும்போது, ''பூஜைக்குப் பிறகு அனைத்து ஆப்பிள்களும் கோவிட் 19 நோயாளி களுக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.

 

வரலாறு காணாத வகையில் காற்று மாசுபாடு குறைந்தது - ஆய்வில் தகவல்

புதுடில்லி, அக்.15 கரோனா பரவல் உச்சம் பெற்றதால் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. தற்போது அதில் பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி படிப்படியாக ஊரடங்கை விலக்கி வருகின்றன.

இந்த ஊரடங்கால் உலக அளவில் வரலாறு காணாத வகையில் காற்று மாசுபாடு குறைந்திருப்பது ஆய்வில் கண் டறியப்பட்டு உள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத் தில், முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தைவிட 8.8 சத வீதம் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்தல் குறைந்திருக்கிறது.

குறிப்பாக கரோனாவின் முதல் அலை உச்சம் பெற்றிருந்த ஏப்ரல் மாதத்தில் 16.9 சதவீதம் குறைந்திருக்கிறது. மொத்தத் தில் 155 கோடி டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுதல் குறைந்திருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாததாகும்.

உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2008-ஆம் ஆண்டு, எண்ணெய் நெருக்கடி ஏற்பட்ட 1979 ஆண்டு மற்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டங்களைவிட அதிக அளவு மாசு குறைந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

போக்குவரத்து துறை முடங்கியதே பெரும்பாலான மாசு குறைபாட்டுக்கு, அதாவது மக்கள் வீடுகளில் இருந்து பணி செய்ததால் 40 சதவீத மாசு குறைப்புக்கு போக்குவரத்து துறையே காரணம் என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் கம்மன் கூறியுள்ளார்.

இந்த ஆய்வு மாசுபாட்டை கண்டறிய பயன்பட்டது மட்டு மின்றி, எதிர்காலத்தில் இதுபோன்று மாசுக்களை குறைப்ப தற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வழி வகுத்தி ருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

ஹலால் உணவுக்கு தடை கோரி இந்துத்துவ இயக்கம் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுடில்லி, அக்.15 ஹலால் முறைக்கு தடைவிதிக்க கோரி அகண்ட பாரத மோர்ச்சா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறிப்பிட்டுள்ளதாவது, இறைச்சி உணவுக்காக இஸ்லாமியர்கள் ‘ஹலால்’ முறைப் படி கோழி, ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கொல் கிறார்கள். இது கால்நடைகளுக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் ஏற்படுத்தும். ஆகவே இந்த முறையில் கால் நடைகள் கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்படுள்ளது.

இந்த மனு நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த அவர் கூறியாவது: இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதன் உண்மை யான நோக்கம் என்ன? மக்களின் உணவுப் பழக்கங்களில் நீதிமன்றங்களால் தலையிட முடியாது. யார் சைவ உணவு களை உண்ண வேண்டும், யார் அசைவ உணவுகளை உட் கொள்ள வேண்டும் என நீதிமன்றங்கள் தீர்மானிக்க முடியாது.

‘ஹலால்’ முறையில் கொல்லப்பட்ட இறைச்சியை விரும் புபவர்கள் அதனை உண்ணட்டும். ‘தட்கா’ முறையில் கொல்லப்பட்ட இறைச்சி வேண்டுபவர்கள், அதனை உட் கொள்ளட்டும். இதில் நீதிமன்றங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டி ருப்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.