ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
புதையல் பேராசை, மூடநம்பிக்கையால்  பச்சிளங்குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி- போராடிக் காப்பாற்றிய தாய்!
August 5, 2020 • Viduthalai • தமிழகம்

குழந்தையின் தந்தை, பாட்டி, மோசடிச் சாமியார் மூவர் கைது

களக்காடு,ஆக.5 புதையல் கிடைக்கும் என்ற பேராசை, மூடநம்பிக்கையால் 5 மாதக் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற குழந்தையின் தந்தை, பாட்டி மற்றும் மோசடிச் சாமியார் என மூவர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டனர்.

நெல்லை மாவட்டம் களக்காட்டை அடுத்த சடையமான்குளம் கிராமத் தில்  நரபலி கொடுக்கப்படவிருந்த தனது 5 மாதக் குழந்தையை அக்குழந் தையின் தாய் போராடி காப்பாற்றி யுள்ளார்.

நெல்லை மாவட்டம் களக்காடு அடுத்த சடையமான்குளத்தைச் சேர்ந் தவர் 70 வயதான பார்வதி . மாந்திரீகம் போன்ற மூட நம்பிக்கைகளைக் கொண்டவராக இருந்துள்ளார். அவ ரின் வளர்ப்பு மகன் குமரேசன். கும ரேசனுக்குத் திருமணமாகி 7 வயதிலும் 5 வயதிலும் 5 மாத கைக்குழந்தையாகவும் 3 மகன்கள் உள்ளனர். மூதாட்டி பார் வதிக்கு கிரான ராஜன் என்றமோசடிச் சாமியாருடன் நீண்ட கால பழக்கம் இருந்துள்ளது. அவ்வப்போது பார் வதி வீட்டில் நள்ளிரவில் பூஜைகள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. பூஜை குறித்து கேள்வி கேட்டால் சூனியம் வைத்துவிடுவதாக மிரட்டி வந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் கூறு கின்றனர். இந்த நிலையில் பார்வதி வீட்டில் புதையல் இருப்பதாக ஆசை காட்டிய கிரான ராஜன், அதனை எடுத்துத் தருவதாகக் கூறி அவரிடம் 2 லட்ச ரூபாய் பணமும் வாங்கியுள் ளான்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புதையல் எடுப்பதற்கான பூஜை நடந் துள்ளது. பூஜையின்போது பலி கொடுப்பதற்காக கருப்புப் பூனை ஒன்றும் கோழி ஒன்றும் கொண்டு வரப்பட்டுள்ளது.

நடு வீட்டுக்குள் 3 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி அதில் எலுமிச்சை உள்ளிட்ட பூஜைப் பொருட்களை போட்டு பூனையை பலி கொடுக்க முயன்றபோது பூனை தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. பூனையை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், குமரேசனின் 5 மாத கைக் குழந்தையை பலி கொடுக்க வேண்டும் என கிரான ராஜன் கூறியதாகச் சொல் லப்படுகிறது. இதற்கு பார்வதியும் குடி போதையில் இருந்த குமரேசனும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், குழந்தையின் தாயான குமரேசனின் மனைவி ராமலட்சுமி ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதற் காக அவருக்கு தீர்த்தம் கொடுப்ப தாகக் கூறி மயக்க மருந்தை கிரான ராஜன் கொடுக்க முயன்றுள்ளான்.

மூன்று பேரின் நடவடிக்கை களைப் பார்த்து எச்சரிக்கையான ராமலட்சுமி, குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவந்து தெருவில் கூச்சல் போட்டுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று திரண்டு கிரான ராஜன், பார்வதி, குமரேசன் ஆகியோரை மடக்கிப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத் துள்ளனர். மூவரையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூட நம்பிக்கை, புதை யல் பேராசையால் பெற்ற குழந் தையை பலி கொடுப்பதா என்று அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.