ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
புதுச்சேரி மாநில  கழக சார்பில் சுழலும் சொற்போர்
August 1, 2020 • Viduthalai • மற்றவை

புதுச்சேரி மாநில திராவிடர் கழகம் சார்பில் 22.7.2020 புதன் மாலை காணொளி காட்சி தலைவர் சிவா வீரமணி  தலைமையில் நடைபெற்றது. காரைக்கால் மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி  வரவேற்புரை ஆற்றினார். "காவியத்தலைவர் பெரியார்" என்னும் தலைப்பில் சொற்போர் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் நடுவராக கொண்டு நடைபெற்றது. "புரட்சிக்கவிஞர் பார்வையில்" எனும் தலைப்பில்  தமிழமல்லன், "முத்தமிழ் அறிஞர் கலைஞர் கவிதையில்" எனும் தலைப்பில்  அதிரடி அன்பழகன், "கவியரசு  கண்ணதாசன் நோக்கில்" பற்றி ராஜ், "மக்கள் கவிஞர்  இன்குலாப்", எழுத்தில் பூவை  புலிகேசி, "வைரமுத்து வரிகளில்" எழில் ஏந்தி பேசினர். இறுதியாக நடுவர்  துரைசந்திரசேகரன் "புரட்சி  கவிஞர் பாடல்களில் பெரியார் விஞ்சி  நிற்கிறார்"  என்று தீர்ப்பு வழங்கினார்.  முடிவில் மண்டல செயலாளர்  அறிவழகன் நன்றி கூறினார்.