ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
புதுச்சேரி பெரியார் பற்றாளர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியத்திற்கு நமது வீர வணக்கம்!
September 3, 2020 • Viduthalai • கழகம்

புதுச்சேரியில் தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவராக பல ஆண்டுகள் தொண்டாற்றிய அருமைத் தோழர் எம்.ஏ. சண்முகம் அவர்களது அருமை மகனும், தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கொள்கையில் நாட்டமும், பற்றும் கொண்ட ஆர்வலரும், நம்மிடம் மிகுந்த அன்பு காட்டி பழகியவருமான டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியம் அவர்கள் (வயது 70) இன்று (3.9.2020) காலை காலமானார் என்ற துக்கச் செய்தியை மாநிலத் தலைவர் சிவ. வீரமணி அவர்கள் தெரிவித்தபோது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

அரசியலில் அவர் எந்த நிலைப்பாடுகளுடன் இருந்தாலும் அடிப்படையில் மாறாத ஒரு பகுத்தறிவாளர் - பெரியார் பற்றாளர்.

அவரது மறைவு மூலம் புதுவையில் எடுத்துக் காட்டான தொண்டறச் செம்மல் ஒருவரை நாடு இழந்துள்ளது என்பதே.

அவரது இழப்பு புதுச்சேரி பொதுவாழ்வில் ஒரு பெரும் இழப்பு.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத் தினர், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்!

 

- கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

3.9.2020