ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்
August 9, 2020 • Viduthalai • தமிழகம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக. 9- தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட் டம் ‘கூகுள் மீட்’ வழியாக நடைபெற்றது. செயற்குழு வில் மாவட்டத் தலைவர் ராஜாங்கம் தலைமையில் மாநிலத் தலைவர் கு.தியாக ராஜன் கலந்து கொண்டு புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு அமல்படுத்த கூடாது என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார்.

இச்செயற்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றத் தன்னுயிரைத் துச்சமென நினைத்து களப் பணியில் ஈடுபடும் மருத்து வர்கள், செவிலியர்கள், துப் புரவுப் பணியாளர்கள், காவல் துறை மற்றும் மருத்துவம் சார்ந்த பணியில் ஈடுபடும் அனைத்துத்துறை ஊழியர் களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றியை யும், பாராட்டையும், வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள் கிறது. புதிய கல்விக் கொள் கையை செயல்படுத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.   கரோனா நோய்த் தொற்று தீவிரமடைவதால் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதிக் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். கரோனாத் தடுப்பில் முழு மையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  5000க்கும் மேற்பட்டோர்மீது ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் போடப்பட்டுள்ள குற்ற குறிப்பாணைகள் (17பி), நிலு வையிலுள்ள வழக்குகள் மற் றும் பணிமாறுதல் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் விரோத நடவடிக்கை களை ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட தைக் காரணம் காட்டி ஓய்வுபெறும் நாளன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜேக்டோ ஜியோ ஒருங்கி ணைப்பாளர்கள் உள்ளிட் டோரின் பணியிடை நீக்கம் ரத்து செய்து முறையான பணி ஓய்வு ஆணை வழங்க வேண்டும்.      தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர்கல்விக்கு  விண்ணப்பித்தும் கிடைக் காத நிலையில் பின்னேற்பு விண்ணப்பித்துள்ள 5000 ஆசிரியர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்துவிட்டு பின்னேற்பு வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு பள்ளிக்காலத்தில் வழங்கப்படும் அனைத்து வகையான விலையில்லா பொருட்களையும் உடனடி யாக வழங்க வேண்டும். என்.எம்.எம்.எஸ் மற்றும் என்.டி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உட னடியாகக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண் டும்.

மாற்றுத்திறனாளி ஆசி ரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊர்திப்படியை மே மாதம் பிடித்தம் செய்யாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.