ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
புதிய கல்விக் கொள்கையா, நவீனக் குலக்கல்வித்திட்டமா
October 10, 2020 • Viduthalai • மற்றவை

புதிய கல்விக் கொள்கையா?

நவீனக் குலக்கல்வித்திட்டமா?

பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கை நவீன குலக்கல்வித்திட்டம் என்று தமிழகத்தின் பல்வேறு இயக்கங்கள் குற்றம் சாட்டி எதிர்த்து வருகின்றன. ஆனால் அதனை ஆதரிக்கும் சிறு கூட் டம் மறுத்து வருகிறது. அப்படியானால், நாம் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதா ரம் இல்லையா?

குழந்தைத் தொழிலாளர் (தடை மற் றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1986ஆம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப் பட்டது. அந்த சட்டத்தை அமல்படுத்த தேவையான விதிகள் 1988இல் உருவாக் கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. அந்த சட்டத்தின்படி, குழந்தைகள்  (14 வயது நிறைவடையாதவர்கள்,) எந்த வகையான தொழிலிலும் ஈடுபடுத்தக் கூடாது. மீறினால் தண்டனைக்குரிய குற்றமாகும்  இதில் கூட மத்திய அரசுத் துறைகளிலே ஒருமித்த கருத்து கிடை யாது. எப்படி என்றால், ரயில்வேயில் 12 வயதிற்குக் குறைந்தவர்கள் சிறுவர்கள் என்று, அவர்களுக்கு கட்டணத்தில் 50%  சலுகை காட்டப்படுகிறது. ஆனால் குழந் தைத் தொழிலாளர் என்று வரும்போது 14 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் குழந்தை கள் என்று சொல்லப்படுகிறது.ஒரு சட்டம் நிறைவேற்றுவதிலேயே ஒருமித்த கருத் தில்லாதவர்கள் ஒரேதேசம்  ஒரேஅரசு, ஒரே மொழி என்றெல்லாம் கூறுவதை எதில் சேர்ப்பது?

இந்த மூலச்சட்டம் (1986) பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 2016ல் திருத்தம் செய்யப்பட்டது. அதாவது மூலச்சட்டத் திற்கு   திருத்தச்சட்டம் குழந்தைத் (தொழி லாளர்  (தடை மற்றும் பாதுகாப்பு)திருத்தச் சட்டம் 2016 என்று ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்தசட்டத்தையும், மூலச் சட்டத்தையும் அமல்படுத்த குழந்தை தொழிலாளர்கள் (தடை மற்றும் ஒழுங்கு படுத்துதல்) திருத்த விதிகள் 2019 ல் உருவாக்கப்பட்டன. எந்த தொழிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்ற மூலச்சட்டத்தின் அடிப்படையை இந்த திருத்தங்கள் பெருமளவிற்கு மாற்றி அமைத்துவிட்டன..

1986 ஆம் ஆண்டு சட்டத்திலிருந்த குழந்தைகள் என்ற விளக்கம்  குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் அதாவது  என்று மாற்றப்பட்டது..மேலும் குழந்தை கள் குடும்பத்திற்கு உதவியாக, பள்ளி படிப்பிற்கு இடையூறு இல்லாத வகையில், விடுமுறைக்காலங்களில் குடும்பத் தொழி லில் பயன்படுத்துவது/உதவியாக இருப் பது குற்றமல்ல என்று திருத்தம் செய்யப் பட்டது.

குடும்பத்தொழில் என்றால் 1.பாது காப்பு அற்ற தொழிலாக இருக்கக்கூடாது. 2. குழந்தைகள் பணப்பயன் பெறுகின் றதாக அமையக்கூடாது. 3.குடும்பத்திற்கு உதவுவதாக மட்டும் அமைய வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.

குடும்பத்தொழில் என்றால் 1.ரத்த சம்பந்தமுடைய சகோதர- சகோதரிகள், 2.தத்தெடுத்த பெற்றோரின் குழந்தைகள் 3.பெற்றோரின் ரத்த சம்பந்தமுடைய சகோதர சகோதரிகள் ஆகியோர் செய் கின்ற தொழில்கள் என்று வரையறுக் கப்பட்டுள்ளது..மேலும் குடும்பத்தொழில் என்பதற்கு, மேற்கண்ட நபர்கள் வேலை யாட்களைக்கொண்டு செய்கின்ற வேலை, தொழில், தயாரிப்பு மற்றும் வணிகம் என்று தெரிவிக்கின்றது.இப்படி ஒரு திருத்தம் ஏன் செய்யப்பட்டது என்ப தற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்பட வில்லை. இந்திய மக்கள் தொகையில் எத்தனைப் பேர் குழந்தைகளை குடும்பத் தொழிலில் உதவியாக வைத்துக் கொள்ள அரசிடம் கோரினார்கள் என்பது தெரிய வில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் தனிநபர் மசோதா அல்லது தீர் மானங்கள் கொண்டு வந்தார்களா என் பதும் தெரியவில்லை. மேலும் பின்னாளில் கொண்டுவர உத்தேசித்துள்ள தேசியக் கல்விக் கொளள்கைக்கு முன்னோடியாக இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட் டதா என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன் றாகும். 2016ல் அமைக்கப்பட்ட டி.எஸ். ஆர்.சுப்ரமணியம் குழு அறிக்கையை ஒட்டி, கொண்டுவரப்பட்டதா என்பதும் ஆராயத் தக்கது. மேலும் ஒரு சட்டத்திற்கு விதிகள் உருவாக்கப்படும்போது, அந்த வரைவு விதிகள், மத்திய அரசின் அரசிதழிலே வெளியிடப்பட்டு அதனால் பாதிக்கப்படுபவர்களிடமிருந்து ஆலோ சனைகள் பெறப்பட்டு அவைகளைப் பரிசீலித்தபின் விதிகள் வெளியிடப்பட வேண்டும். திருத்தச்சட்டம் குடியரசுத் தலைவரால் ஒப்பளிக்கப்பட்டு, 30.6.2016 இல் வெளியிடப்பட்டுள்ளது.அதற்கான வரைவு விதிகள் அரசிதழில் 20/04/2017ல் வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குள் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. அரசிதழைத் தவிர வேறெதிலும் இவை வெளியிடப்படாத காரணத்தினால்  நிச் சயமாக மக்களின் கவனத்திற்கு வரவே வாய்ப்பில்லை. சட்டப்படி ஆலோசனை கள் என்பதெல்லாம் வெறும் கண்து டைப்பு நாடகங்கள்தான். இன்னும் சொல் லப் போனால் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கே இந்த வரைவு விதிகள் அடங்கிய அரசிதழ் சென்று சேர்ந்திருக்குமா என் பதே சந்தேகம்.

புதியக்கல்விக் கொள்கையின்படி 5மற்றும் 8ஆவதில் தேற இயலாதவர்கள் எங்கு வேலை செய்ய இயலும். குடும்பத் தொழில் ஒன்றுதான் அவர்களுக்கு ஆதா ரம். குடும்பத்தொழில் என்று கல்விக் கொள்கை கூறவில்லையே தவிர, நம் குழந்தைகளை குலக்கல்வியில் தள்ளு கின்ற மறைமுகமான சதிதான் இது என் பதில் சந்தேகமில்லை.

நம் சமுதாயத்திலே, விவசாயி மகன் விவசாயியாகவும், முடிதிருத்துபவர்கள் குழந்தைகள் அதே தொழிலைச் செய் யவும், துணிவெளுப்பவர்கள் வீட்டில் அதேநிலை நீடிக்கவும் புதிய கல்விக் கொள்கை உதவுமே தவிர வேறெதற்கும் பயன்படாது.

மத்திய அரசாங்கத்தின் சார்பாக கிண் டியில் ஒரு காலணி தயாரிப்புப் பயிற்சி மையம் நடைபெறுகின்றது. 20 ஆண்டு களுக்குமுன் நான் அங்கு சென்று விசாரித் ததில் அந்தப் பயிற்சியில் பட்டியல் இனத் தைச்சேர்ந்தவர்கள் தான் சேருகிறார்கள், மற்றவர்கள் யாரும்சேர வருவதில்லை என்று கண்டறிந்தேன்.

புதிய கல்விக்கொள்கையை உத்தே சித்தே சட்டத் திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டனவா? அல்லது கோவில்களில் பூசாரி வேலை செய்யும் பார்ப்பனர் வீட்டு பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுக்கு உதவியாக இருக்க கொண்டுவரப்பட்டு, நம்மீது மறைமுகமாகத் திணிக்கத் திட்ட மிடப்பட்டதா?

ஆக எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிஞ்சி நிற்பது நவீன குலக்கல்வித்திட்டம்தான்?

- வை.பார்த்திபன், 

பொருளாளர்

பகுத்தறிவாளர் பேரவை, பம்மல்.