ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு: அக்.28, நவ.3, 7ஆம் தேதியில் வாக்குப்பதிவு
September 26, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி, செப். 26- கரோனா அச்சுறுத்தல் இருந்த போதிலும், பீகார் சட்டப்பேர வைக்கு மூன்று  கட்டமாக தேர்தல் நடத் துவதற்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட் டது.

243 தொகுதிகளை கொண்ட இந்த பேரவைக்கு, அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. பீகார் சட்டப்பேரவையின் பதவி காலம் வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் சட்டப்பேரவை தேர்தலை நடத்தி, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வது அவசியமாகும். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டப்படி தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. தேர்தலை ஒத்திவைக்கும்படி பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறி வித்தது. 

இந்நிலையில், இம்மாநில சட்டப் பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடத் தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டில்லியில் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:

* மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ஆம் தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும். வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும்.

* கரோனா நோய் தொற்று காரண மாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவ வீரர்களின் போக்குவ ரத்து பயணங்களை குறைக்கும் வகையில், இந்த ஆண்டு 3 கட்டங்களாக மட்டுமே வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.  

* முதல் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். 2ஆம் கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிக ளிலும், மூன்றாவது கட்டமாக 15 மாவட் டங்களில் உள்ள 78 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

* தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பீகாரில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள் ளன.

* வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக் கும். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, வழக்கமான நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடத் தப்படும். இந்த கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகள், தனிமைப்படுத் தப்பட்டவர்கள் வாக்களிக்க ஒதுக்கப்படு கிறது. இம்மாநிலத்தில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் மொத்த எண் ணிக்கை 7.29 கோடி.

* சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

* கடந்த 2015ஆம் ஆண்டு சட் டப்பேரவை தேர்தலில், இம்மாநிலத்தில் 65,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டன. ஆனால், கரோனா காரணமாக இம்முறை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின் றன. இவ்வாறு அவர் கூறினார்.