ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பிறப்பதற்கே போராட வேண்டிய நிலையில் பெண்கள்
July 14, 2020 • Viduthalai • கரோனா

குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களத்தில் தமிழர் தலைவர் உரை

கோவை, ஜூலை 14, பிறப்பதற்கே போராட வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கிறார்களே இந்து மதம் இருக்கும் இந்த புண்ணிய பூமியில், இது பெருமையா என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.

குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களம் நடத்திய பொன்விழாச் சிறப்புக் கருத் தரங்கம் காணொலி (ஜூம் செயலி) வாயிலாக 12.07.2020 அன்று மாலை ஆறு மணியளவில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டார். வழக் குரைஞர் அ.அருள்மொழி தொடக்க வுரையாற்றினார். முனைவர் சுந்தர வள்ளி வாழ்த்துரை வழங்கினார்.

யாழ் கலை இலக்கியப் பண்பாட்டு மய்யத்தின் செயலர் இசைப் பேரா சிரியர் முனைவர் இரா.கிருஷ்ண பாரதி, 'கேள்விகள் கேட்போமே - பகுத்தறிவாலே' என்ற பாடலைப் பாடி  நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களத் தின் ஒருங்கிணைப்பாளரும், யாழ் கலை இலக்கியப் பண்பாட்டு மய்யத் தின் தலைவருமான பேரா.முனைவர் சுப.செல்வி வரவேற்புரையாற்றினார்.

கோவை வேலாண்டிபாளையத் தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருபதாம் நாள் தொடங்கப்பட்டது குறிஞ்சி மகளிர் சிந்தனைக்களம். அர சியல், கலை, இலக்கியச் செயல்பாடுகள் , இயற்கை அறிவியல் கருத்தரங்கங்கள், கீழடி ஆய்வுகள் குறித்த நிகழ்ச்சிகள், பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் என்று குறிஞ்சி இதுவரை எண்பத் தொன்பது நிகழ்ச்சிகளை நடத்தி யுள்ளது. கோவை இரத்தினம் கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து செயல்படுவதற்கென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கோவையில் நான்காண் டுகளாகச் செவ்வியல் இசை மற்றும் நாட்டார் கலைகள் குறித்த ஆய்வுகளை மேற் கொண்டு வரும் யாழ் கலை இலக்கியப் பண்பாட்டு மய்யத்துடன் இணைந்து கலை இலக்கியச் செயல்பாடு களை மேற்கொள்வதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட் டுள்ளது என்று குறிஞ்சியின் செயல்பாடுகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் தோழர் அன்புமதி அவர்கள் எடுத்துரைத்தார்.

நிகழ்வில் தொடக்கவுரை யாற்றிய திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக் குரைஞர் அ. அருள்மொழி அவர்கள் பேசியபோது குறிஞ்சி பெண்கள் அமைப்பு கோவையிலுள்ள பல்வேறு முற்போக்கு அமைப்புகளையும், பலதரப்பட்ட பெண் களையும் ஒன்றிணைக்கும் களமாகச் செயல்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்து, அதில் தமிழர் தலைவர் அவர்கள் சிறப்புரை ஆற்றுவது மிகவும் பொருத்தமானது என்று ஆசிரியர் அவர்களின் சிறப் புகளை எடுத்துவைத்து தொடக் கவுரை யாற்றினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் பேரா.முனை வர் சுந்தவள்ளிஅவர்கள் வழங்கிய வாழ்த்துரையில், தமிழ்நாட்டில் சங்கிகளைக் கதறவைக்கும் தலைவ ராகத் திகழும் ஆசிரியர் அவர்கள், அனைவரும் வியக்கத் தகும் வண்ணம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி உரையாற்றினார். மேலும், கோவை யில் பெண்கள் கூடும் களத்திலிருந்து மக்களோடு இணைந்து செயல் பட்டுவரும் குறிஞ்சி பெண்கள் அமைப்பு, பெண்களுக்கான இதழ் களை நடத்தவேண்டும் என்றும், கூத்து வகைகளைக் கையில் எடுத்துக் கொண்டு பெண்களுக்கு விழிப் புணர்வு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

பொன்விழா நிகழ்வில் சிறப், புரையாற்றிய திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பிறவி இழிவை ஒழிக்கும் களத்தில் பெண்ணுரிமை எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், அதில் தந்தை பெரி யாரின் தனித்துவமான மனிதநேயப் பார்வையையும் விரிவாக எடுத்துரைத் தார். பேதம் நிலைக்க வேண்டும் என்பதே சனாதனம். வர்ணாசிரம ஒழிப்பு என்பது ஜாதி ஒழிப்பு மட்டு மல்ல, பெண்ணடிமை ஒழிப்பும் முக்கியமானது. அது தான் அதன் சிறப்பம்சம்.

சனாதனத்துக்கு உயிரூட்டிக் கொண்டே இருக்கக் கூடிய அமைப் புகள் பெண்கள் மீது வைத்திருக்கும் பார்வை என்ன என்பதை அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதியுள்ள இந்துமதம் எங்கே போகிறது? என்ற நூல் தெளி வாக ஆதாரத்துடன் விளக்குகிறது.

பெண்களும், சூத்திரர்களும், வைஸ்யர்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று கீதை சொல் கிறது. மனிதர்களாகவே இவர்களைக் கருதவில்லை. இந்துமதம் என்று இன்று சொல்லப்படுகிற சனாதன மதம் - வேத மதம்.

நான்கு வருணங்களுக்கும் கீழே பஞ்சமர்களும், அவர்களுக்கும் கீழே பெண்களும் நிறுத்தப்பட்டிருக்கி றார்கள் வேத மதத்தால் - வர்ணா சிரமத்தால்!

பிறந்த பிறகு பெண்கள் போராடு கிறார்கள் உலகின் பிற நாடுகளில்! ஆனால் பெண்கள், தாங்கள் பிறப்ப தற்கே போராட வேண்டிய அவலம் தானே இந்த நாட்டில்! பெண் குழந்தை என்றால் கருக் கலைப்பு செய்துவிடலாம் என்ற அளவுக்கு இந்த நாட்டில்,  இந்து மதத்தில் மனநிலை இருக்கிறதே! தாய்ப் பாலுக்கு முன்பு கள்ளிப் பால் தரப்படுகிறதே! பிறப்பு ரிமையே மறுக்கப்படுகிறதே பெண்களுக்கு!

யாருக்காக நாம் போராடு கிறோமோ, அவர்களையே நமக்கு எதிராக நிறுத்துவது தானே ஆரியம்!  தேவதாசி முறையை ஒழிக்கப் போராடி னால், அம் முறையால் சிக்குண்டு கிடந்த தேவதாசிகளையே எதி ராக நிறுத்தினார்கள். பெண் களுக்குச் சொத்துரிமை வழங் கப்பட வேண்டும் என்று போராடினால், சட்டம் கொண்டு வந்தால், அதற்கு எதிராக பெண் களையே நிறுத்திப் பார்த் தார்களே! பெரியாரின் பெண் ணுரிமைப் போராட்டம் என்பது பார்ப்பனப் பெண்களுக்கும் சேர்த் துத் தானே!

ஆனால், பெண்களுக்குச் சொத் துரிமை வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வர முயன்றபோது, அதை எதிர்த்து பார்ப்பனப் பெண்களையே முன் களத்தில் நிறுத்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திரர் மேற் கொண்ட முயற்சியையும், அந்தப் போராட்டத்தைச் செய்வ தற்காக தாங்கள் செய்த பணிகளையும் அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் போட்டுடைத்து விட்டாரே! இன்றைக்கு பெரியாரின் பெண்ணியத்தால் பெற்றுள்ள உரிமைகளை பார்ப்பனப் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அனுபவிக் கிறார்களே! மொட்டைப் பாப்பாத்தி என்று ஒதுக்கிவைத்திருந்தார்களே, இன்றைக்கு உண்டா? மாதவிலக்கு என்று வீட்டுக்கு வெளியே அமர்த்தும் காட்டுமிராண்டித்தனம் இன்றைக் கும் உண்டா?

இன்றைய சூழலில் பெண்கள் படித்து வேலைக்குப் போன பின்னும், இன்னும் பெண்ணடிமை ஒழியவி ல்லையே! வெளியிலும் வேலைக்குப் போய்விட்டு, வீட்டிலும் வந்து வேலை பார்க்க வேண்டிய நிலை தானே இன்றும்! அந் நிலை மாற வேண்டாமா?

கற்பு என்கிற போது, ஆணுக்கு ஏன் அந்தக் கட்டுப்பாடு இல்லை என்று கேட்டார் பெரியார். பெரியாரின் பெண்ணுரிமை என்பது விஞ்ஞானம். விஞ்ஞானம் எதற் காகவும் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது. எது சரியோ, அதை முன்னெடுத்துச் செல்லும்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எதற்காக தன்னுடைய பதவியை உதறினாரோ, அவர் எதை சாதிக்க வேண்டும் என்று விரும்பினாரோ, அந்த பெண்களுக்குச் சொத்துரிமை என்பதை தமிழ்நாட்டில் 1989-இல் முத்தமிழறிஞர் தலைமையிலான திமுக ஆட்சியும், மத்தியில் திமுகவின் பெருந்துணையோடு 2004-இல் ஆட்சியமைத்த காங்கிரஸ் ஆட்சி கொண்டு வருவதற்குக் காரணம் பெரியாரின் இயக்கம் - திராவிட இயக்கமே என்று பெண்ணுரிமைத் தத்துவத்தையும், வரலாற்றையும் விரிவாக எடுத்துரைத்தார். (முழு உரை பின்னர் வெளிவரும்)

தமிழாசிரியர் காந்திஜெயந்தி  நிகழ்ச்சியைத் தொகுத்து, நன்றி யுரையும்  வழங்கினார். முனைவர் சுப.செல்வி, ஆ.நந்த குமார், சா.கதி ரவன், ப.வில்வம் ஆகியோர் நிகழ்ச் சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.

நேபாளியா  ராமன்?

"உண்மையான அயோத்தி இந்தியா வில் இல்லை, நேபாளத்தில் உள்ளது; கடவுள் ராமர் நேபாளி; இந்தியர் அல்ல?"
- நேபாள பிரதமர் கே.பி. சர்மாஒலி