ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பிரசாந்த் பூஷனுக்கு அளித்த ஒரு ரூபாய் தண்டனை மிகமிக மோசமானது உச்ச நீதிமன்றத்தின் மரியாதையையும், புகழையும் குறைப்பது
September 4, 2020 • Viduthalai • மற்றவை

(01-09-2020 நாளிட்ட 'இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)

உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூஷனுக்கு அளித்த ஒரு ரூபாய் அபராத தண்டனை மென்மையானதாக இருக்கலாம். ஆனால் அதன் பாதிப்பு மிகமிக மோச மானது. பெயரளவுக்காக ஒரு ரூபாய் அபராதத்தை நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான தண்டனையாக பிரசாந்த் பூஷனுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், அவ்வாறு அபராதத்தைக் கட்டத் தவறினால் மூன்று மாத சாதாரண சிறை தண்டனை அவருக்கு அளிக்கப்படுவதுடன், வழக்குரைஞர் தொழில் செய் வதற்கு அவருக்கு மூன்று மாதத் தடை விதிக்கப்படும் என்று   கூறிய தீர்ப்பும், தங்களைப் பற்றிய விமர்சனங் களை சகித்துக் கொள்ள இயலாத தன்மை கொண்ட தனது இருண்ட முகத்தை உச்சநீதிமன்றம் முகத்தி ரையை விலக்கிக்  காட்டியுள்ளது.

தற்போதைய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு முன் பதவியில் இருந்த சில தலைமை நீதிபதிகளின் செயல்பாடுகள் பற்றி, நீதித் துறை சிந்திக்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ இயலாத, மறைமுகமாக தெரிவிக்கப்பட்ட விரும்பத் தகாத குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள்  மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் டுவீட்டுகளை வெளி யிட்டதே பிரசாந்த் பூஷன் செய்த குற்றமாகக் கூறப் படுகிறது. அவருக்கு தண்டனை அளிப்பது பற்றிய விசாரணையின்போது,   பூஷன் மன்னிப்பு கோரு வார், அதன் மூலம் இந்த பிரச்சினை முழுவதுக்கும் ஒரு அமைதியான முடிவை ஏற்படுத்தலாம் என்று நீதிமன்ற அமர்வு நம்பி எதிர்பார்த்திருந்தது. ஆனால் தனது உண்மையான உணர்வுகள் மற்றும் மனச் சாட்சிக்கு மதிப்பளித்து, அதற்கும் மேலாக இந்த வழக்கை முடித்து வைப்பதற்கு உச்சநீதிமன்றம் தனது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இயன்ற ஒரு வழியை நீதி மன்ற அமர்வுக்கு அளிக்கும் மன நிலையில்  பிரசாந்த் பூஷன் இருக்கவில்லை.  உச்ச நீதிமன்றத்தின் கவுரவத்தை உயர்த்தும் நோக்கத் துடன் வெளியிடப்பட்ட உண்மையான விமர்சன மாக அவரது டுவீட்டுகளைக் கருதி, நீதிமன்ற அமர்வு பூஷனுக்கு எந்த தண்டனையும் அளிக்கா மல் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று  அட் டர்னி ஜெனரல் தெரிவித்த அறிவார்ந்த ஆலோச னைக்கு நீதிமன்ற அமர்வு செவி சாய்க்கவில்லை என்பது இழப்புக் கேடே ஆகும். தனிப்பட்ட நீதிபதி களின் மரியாதையைக் காப்பாற்றுவது இந்த குற்ற வழக்கு நடவடிக்கையின் நோக்கம் அல்ல என்பதை யும்,  உச்சநீதிமன்றத்தின் கவுரவம், மரியாதை ஆகிய வற்றை காப்பாற்றிக் கொள்வதற்கு  தேவைப்படும் பொது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றிக் கொள் வதே அதன் நோக்கம் என்பதையும், அபராத தண் டனை அளிக்கப்பட்ட 82 பக்க தீர்ப்பும்,  பூஷனைக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட 108 பக்க தீர்ப்பும்,  வெட்ட வெளிச்சமாக ஆக்கிவிட்டன. நீதித்துறை யின் கவுரவம், மரியாதை மற்றும் நம்பகத்தன்மை ஆகிய மதிப்பீடுகள் கேள்விக்கு உள்ளாகியிருப்ப தால்,  இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்துக்குக் கூறப்படும் நல்ல அறிவுரையாக இருந்திருக்கும். எடுத்துக் காட் டாக, பூஷன் உண்மையை தனது பாதுகாப்புக்காக எடுத்துக் கொண்டபோது,  அது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேலும் தீவிரமானதாக ஆக்கிவிட்டது என்று குறை சொல்லப்பட்டது. அதற்கான காரண காரியம் சரியானதே ஆகும்.  கடந்த கால தலைமை நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கருத்து மற்றும் நடத்தையைப் பற்றி பூஷனின் பாதுகாப்பு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டியதில்லை. என்றாலும்,  அவ ருக்கு நீதிமன்றம் தாக்கீது அளித்தபோதே இது நன்றாகத் தெரிந்துவிட்டது. கடந்த 6 ஆண்டு காலத் தில் பதவியில் இருந்த தலைமை நீதிபதிகள் நாட்டின் ஜனநாயக நடைமுறையின் அழிவிற்கு எவ்வாறு பங்காற்றியுள்ளனர் என்ற தனது கருத்தை, கண் ணோட்டத்தை விளக்குவதற்கான ஒரு வாய்ப்பு  அளிக்காமல், நிச்சயமாக எவர் ஒருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டமுடியாது. 

நீதி மன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான வரது செயல்பாடுகளை விட நீதிமன்றத்தின் நடத்தை மீதே அதிக வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக, இந்த வழக்கின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அண் மைக் காலங்களில் நீதித் துறையின் நடத்தை பற்றி தான் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட் கவோ, வருத்தம் தெரிவிக்கவோ மறுத்துவிட்ட கார ணத்தால்,  அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமற்றதாக இருந்தாலும், தவிர்க்க இயலாததாக இருப்பதுமாகும்.

நன்றி: 'தி இந்து', 1.9.2020

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்