ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பா.ஜ.க., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்மீதான 62 கிரிமினல் குற்ற வழக்குகளை கைவிடுவதா
September 6, 2020 • Viduthalai • இந்தியா

பா.ஜ.க., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்மீதான 62 கிரிமினல் குற்ற வழக்குகளை கைவிடுவதா?

கருநாடகாவில் கடும் எதிர்ப்பு

பெங்களூரு, செப்.6 மத்திய பாஜக அர சின் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையின் பரிந்துரையின் அடிப் படையில் பாஜகவைச் சேர்ந்த நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை கைவிட கருநாடக மாநில பாஜக அரசு முடி வெடுத்துள்ளது.  அதனைத் தொடர்ந்து கருநாடக மாநில சட்டம், சுற்றுலா மற்றும் வேளாண் அமைச் சர்கள் உட்பட பல அமைச்சர்கள்மீதான வழக்குகளும் கைவிடப்படும் எனக் கூறப்படுகிறது. அதில், கருநாடக அமைச்சர் ஜே.சி.மதுசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் சட்டமன்ற ஒழுங்கு நடவடிக்கை, கலவரம் செய்ய முயற்சித்தது போன்ற குற்றச்சாட்டின்படி பதிவு செய்யப் பட்டதாகும்.

அதேபோல், காங்கிரசில் இருந்து பா.ஜ.கவிற்கு தாவிய ஆனந்த்சிங் மீதான வழக்கும் கைவிடப்பட்டுள்ளது. ஆனந்த்சிங் மீது ஹாஸ்பெட் தாலுகா அலுவலகத்தைத் தாக்கியதற்காக 2017ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றவியல் மிரட்டல், அரசு ஊழியரைத் தாக்கி யது, பொதுச் சொத்துக்களை சேதப் படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட் டுகள் சுமத்தப்பட்டன. மேலும், மைசூரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா மீதான வழக்கு நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா, கடந்த 2017ஆம் ஆண்டு அனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின் போது அனுமதி இன்றி சென்றதால் அவர்களைத் தடுத்தற்காக காவலர்கள்மீது தாக்குதல் நடத்திய தாக வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.

இதில், மாண்டியா சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் சுமலதா அம்பரிஷ், யெல்பர்காவைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஹொன்னல்லியைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல் வரின் அரசியல் செயலாளர் நாடாளு மன்ற உறுப்பினர் ரேணுகாச்சார்யா ஆகியோர் மீது வழக்குகள் கைவிடப் படுகின்றன. இந்த வழக்குகளைக் கைவிடும் முடிவிற்கு கருநாடக மாநில டிஅய்ஜி,- அய்ஜிபி மற்றும் அரசு வழக்கு மற்றும் சட்டத்துறை இயக்கு நர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர் ஆனாலும் பா.ஜ.க அரசு அத னைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் வழக்குகளில் இருந்து பா.ஜ.க நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களை தப்பிக்கச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. கருநாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தற் போது கடும் கண்டனம் எழுந்து வருகிறது.