ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பார்ப்பனப் பெண்ணின் ஆணவத்தைப் பாரீர்!
August 16, 2020 • Viduthalai • மற்றவை

*          சங்கர மடத்துல பிராமணர் அல்லாதார் சாப்பிட முடியாது - அது மடத்தின் சம்பிரதாயம்

*          ஆமாம், பிராமணர்தான் சாமியைத் தொடணும், அவன்தான் Highest in Society  கண்டவன் கருவறைக்குள் போக முடியுமா? உன் வீடாடா அது?

தலையங்கம் எனும் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் பார்ப்பனப் பெண்மணி உமா ஆனந்தன் என்பவர் காஞ்சி மடத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லா தாருக்கு தனித்தனியே சாப்பாடு போடப் படுவதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில், கருவறைத் தீண்டாமையை வலியுறுத்தி பார்ப்பன ஜாதி ஆணவத்துடன் பேசி யுள்ளார். அதன் காட்சிப்பதிவு சமூக ஊடகங்களில்  பரப்பப்பட்டு வருகிறது.

அவர் பேசியுள்ளதாவது: "அந்த இன்சி டென்ட்டுக்கு அப்புறம் என்னோட நிறைய நான் பிராமின்ஸ்லாம் வருவா மடத்துக்கு. அங்கே வந்து மடத்துடைய சம்பிரதாயம் and பெரியவா பூஜை முடிச்சப்புறம், தீர்த்தம் கொடுத்தப்புறம்தான் சாப்பாடு போடுவாங்க. பிராமின்ஸ்க்குதான் சாப்பாடு அப்படிங்கிறதால, மடத்தோட சம் பிரதாயத்தையும் விடாம, இதுக்காக காமாட்சிக் கோயில்கிட்ட ஒரு சத்திரம், அங்க இருக்கு கல்யாண மண்டபம் - அங்க வந்து   Anybody and everybody can come and Eat Lunch.  Free Lunch. சாப்பாடு அவ்வளோ நன்னாயிருக்கும். என்கூட கொஞ்சம் நிறைய பேர் வருவா நான் பிராமின்ஸ்னுட்டு, நான் என்கூட வர்ற பிராமின்ஸ் அங்கே சாப்பிடணும், பெரியவா பிரசாதம்னுவா.   I go along whith them and eat with themன்னுட்டு அந்த மண்டபத்துக் குத்தான் நான் சாப்பிடப் போவேன் அவாளோட.

அதனாலே எனக்கொன்னும் கொறஞ்சி போயிடறதோ, Nothing.

எல்லாரும் கேப்பா, ஏன் பிராமின்தான் அர்ச்சகர் ஆகணுமா?அப்பிடின்னுட்டு

Yes, Yes. that is, we have to say it with Authority YES. அப்படித்தான்.

சாமியத் தொட்டுப் பூஜை பண்ற அவர்தான் Highest in Society.

போன ஜென்மத்தில பண்ணிய புண்ணியம். அவா, பூஜை பண்றவாளா இன்னிக்கி பிறந்திருக்கா. ஏன்னா  We believe in Re-birth, we believe in Karma.

அந்த கர்மா அக்கவுண்ட்டுனாலதான் இன் னிக்கி ஒரு குருக்கள் அவ்வளவு ஒசந்த இடத்தில பொறந்திருக்கார்.

இதிலே இன்னிக்குகூட I get   எவனாச்சும் என்கிட்ட திட்றச்ச, ஏன் மாமி, கருவறைக்குள்ளே எல்லாரையும் விடுவீங்களா அப்பன்னான்.

ஏண்டா விடணும்?ன்னு கேப்பேன் நான், கருவறைக்குள்ளே என்ன உங்க வீடா அது?

எதுக்கு விடணும் உன்னை?

குளிச்சுட்டு மடியா சாமியத் தொடறதுன்றது எப்பேர்ப்பட்ட பாக்கியம்?

அந்த சாமியை குளிக்காமப் போய்த் தொடுவியா நீ? சாப்பிட்டுட்டு கையலம்பிக்காம எச்சக் கையோட தொடுவியா?

இதெல்லாம் நியதிகள் We have to follow.

நம்பளோட  fore fathers were so knowledgeable."

இவ்வாறு அவர் பார்ப்பன ஜாதி ஆணவத்துடன் குறிப்பிட்டுள்ளார்.