ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பாரதீய ஜனதாவும் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மக்களிடையே வெறுப்புணர்வைப் பரப்புகின்றன
August 21, 2020 • Viduthalai • இந்தியா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம்

ராய்ப்பூர், ஆக.21  பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புகின்றன. காங் கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறி யுள்ளார்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட தலைமை அலுவலக் கட்ட டங்கள் கட்டப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (20.8.2020) நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. காணொலி காட்சி மூலம் அலு வலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சத்தீஷ்கார் முதலமைச்சர் புபேஷ் பாகல், அந்த மாநிலத்துக்கான அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல்.புனியா, மாநில காங்கிரஸ் தலை வர் மோகன் மர்காம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது:-

இந்தியாவில் இரு வகையான பொருளாதாரங்கள் உள்ளன. ஒன்று பெரு நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பு சார்ந்த பொருளாதாரம். மற்றொன்று விவசாயிகள், தொழிலா ளர்கள், சிறுதொழில் செய்வோர், சிறிய கடைக்காரர்கள், ஏழைகள் போன் றோரை உள்ளடக்கிய அமைப்புசாரா பொருளாதாரம்.

அமைப்பு சாரா பொருளாதாரத்தை சார்ந்துள்ள தொழில்கள் மூலமே நாட் டில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இந்த அமைப்புசாரா பொருளாதாரத்தை கடந்த 6 ஆண்டு களில் மோடி அரசு சீரழித்துவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றின் மூலம் அமைப்புசாரா பொருளாதாரத்தை மத்திய அரசு நாசமாக்கிவிட்டது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையா லும், ஜி.எஸ்.டி. வரியாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் புரிவோர் மிகவும் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள். பிரதமர் மோடி பெரிய தொழில் அதிபர்களுக்கு ஆதர வாகவே செயல்படுகிறார்.

ஏதாவது நெருக்கடியான சூழ் நிலைகள் ஏற்படும் போது அமைப்பு சாரா பொருளாதாரம்தான் அதை தாங்கி, பாதிப்பை தடுக்கக்கூடியதாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அமைப்பு ரீதியிலான பொருளாதாரம் மற்றும் அமைப்புசாரா பொருளாதாரம் ஆகிய இரண்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நாங்கள் செயல்படுகிறோம்.

கரோனா பாதிப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று ஊரடங்கை அமல் படுத்தினார். இதனால் அமைப்புசாரா தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால் வரும் நாட்களில் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாமல் போய்விடும்.

பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மக்களிடையே வெறுப் புணர்வை பரப்புகின்றன. காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் மக்க ளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.