ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளிலிருந்து விலகி தி.மு.க.வில் 500க்கும் மேற்பட்டோர் காணொலிமூலம்  இணைந்தனர்
July 25, 2020 • Viduthalai • அரசியல்

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்று உரை

தமிழர் தலைவர் வாழ்த்து

வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற மேனாள் உறுப்பினர் எஸ்.கே.வேதரத்தினம்  பா.ஜ.க. மாநில செயலாளர், பா.ஜ.க. தேசியப் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளி லிருந்து விலகி திமுகவில் காணொலிமூலம் தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.  எஸ்.கே.வேதரத்தினம் அவர்களிடம் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கி.முருகையன்  கழகத்தின் சார்பில் வேதரத்தினம் அவர்களுக்கு பயனாடை அணிவித்தார்.

சென்னை, ஜூலை 25- திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலை யில், நேற்று நாகை மாவட்ட பாஜக பொதுச்செயலாளரும், பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப் பாளருமான அமிர்த விஜயகுமார் உள்ளிட்ட 500 குடும்பங்கள் பா.ஜ.க. விலிருந்தும், அதிமுக - பாமக உள் ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து 50 குடும்பங்களும் அக்கட்சிகளிலி ருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக தலைவர் காணொலி வாயிலாக அவர்களை வரவேற்றுப் பேசியதாவது:

"நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்த விஜயகுமார் தலைமையில் பாஜக மற்றும் மாற்று இயக்கங்க ளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைகின்ற இந்தக் காணொலி விழாவில் பங்கெடுத்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது கரோனா காலம் என்பதால் நாம் ஒருவருக் கொருவர் நேரில் சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறோம். ஆனாலும் காணொலி மூலமாக நாம் சந்திக் கிறோம். கரோனா முடியட்டும் என்று காத்திராமல் உடனடியாக திமுகவில் இணைந்துவிட வேண் டும் என்று துடிப்போடு ஆர்வத் தோடு முன்வந்த உங்கள் அனைவரை யும் வரவேற்கிறேன். யாரெல்லாம் இணையக் காத்திருக்கிறார்கள் என்று நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எனக்கு ஒரு பட்டியலைக் கொடுத் தார். மிக நீண்ட அந்தப் பட்டியலை வாசித்தால் அதுவே நீண்ட நேரம் ஆகும். அவ்வளவு பேர் ஆர்வமாக திமுகவில் உங்களை இணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் உண்டு. ஆனால், அனைவருக்கும் கலைஞர் ஒரு பெயரை வைத்தார். அதுதான் 'உடன்பிறப்புகளே' என் பதாகும். 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்று அவர் சொன்னால் போதும்; ஒவ் வொரு தொண்டரும் தன்னைத் தான் தலைவர் பெயர் சொல்லி அழைக்கிறார் என்று நினைத்து ஆரவாரம் செய்வார்கள். அத்தகைய தொண்டர் பட்டாளத்தில் நீங்க ளும்  வந்து இணைந்துள்ளீர்கள். நாடு எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அது தெரிந்ததால்தான், மக்களைத் தி.மு.க.தான் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்தோடு நீங் கள் அனைவரும் வந்து தி.மு.க.வில் இணைந்திருக்கிறீர்கள்.

மார்ச் மாதத்தில் இருந்து கரோனா பரவி வருகிறது. இது ஜூலை மாதம். இன்னும் சில நாட் களில் ஜூலை முடியப் போகிறது. ஆனால், கரோனா பரவல் அதிக மாகி வருகிறதே தவிர குறைய வில்லை; குறைப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய - மாநில அரசு கள் எடுக்கவில்லை.

ஊடரங்கு போட்டு கரோனா வைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்றார்கள். ஆனால், 130 நாட் களாக ஊடரங்கில் தான் இருக்கி றோம். ஆனால், கரோனா குறைய வில்லை என்றால் இந்த அரசாங்கத் துக்கு கரோனாவைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை என்றுதானே அர்த் தம்? கரோனா பரவலைத்தான் கட் டுப்படுத்த முடியவில்லை, வாழ்வா தாரம் இழந்த மக்களுக்கு உதவிகள் செய்தார்களா என்றால், மத்திய அரசும் செய்யவில்லை; மாநில அரசும் செய்யவில்லை. மக்களுக்கு நிதி உதவி செய்யுங்கள் என்று சொன்னால், மத்திய அரசு கடன் கொடுக்கிறோம் வாங்கிக் கொள் என்கிறது. மாதம் 5,000 கொடுங்கள் என்று மூன்று மாதமாகச் சொல்லி வருகிறேன். முதல்வர் பழனிசாமிக்கு இன்னும் இரக்கம் வரவில்லை. இது தான் இரண்டு அரசுகளும் ஆளும் லட்சணம். இரண்டு அரசாங்கத்துக் கும் மக்களைப் பற்றி எந்தக் கவ லையும் கிடையாது. இரண்டு நாட் களாக நீங்கள் செய்திகளில், தொலைக் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். கரோனாவால் மரணம் அடைந்த வர்கள் எண்ணிக்கையையே மறைத்து விட்டார்கள் என்று! கரோனாவில் மரணம் அடைந்தவர் கள் தமிழகத்தில்தான் குறைவு என்று காட்டுவதற்காக, இறந்தவர் கள் எண்ணிக்கையை மறைத்து விட்டார்கள். ஒன்றிரண்டு எண் ணிக்கை குறைந்தால் அது கணக்கில் ஏதோ விடுபட்டுவிட்டது என்று சொல்லலாம். ஆனால் 444 பேர் உயிரிழந்த தகவலை மறைத்து விட் டார்கள். இவர்கள் எல்லோரும் மார்ச் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஜூன் 10ஆம் தேதி வரை இறந்த வர்கள். இந்த 444 பேர் என்பதும் உண்மையான கணக்குத்தானா? அல்லது இன்னும் மறைக்கிறார்களா என்று தெரியவில்லை.

அதுவும் இந்த மரண எண் ணிக்கை சென்னையில் மட்டும்தான். மற்ற மாவட்டங்களிலும் இதுபோல் மறைத்துள்ளார்களா என்பதும் இன்னும் தெரியவில்லை. இப்படி மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிக் கொண்டு இருக்கிற ஆட்சி முதல்வர் பழனிசாமி தலைமையி லான ஆட்சி. மரணத்திலேயே இவ் வளவு பொய்க்கணக்கு எழுதி இருப் பவர்கள், ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒதுக்கும் பணத்தில் எவ்வளவு பொய்க்கணக்கு எழுதி இருப்பார் கள்! கரோனா காலத்திலும் கொள் ளையடிக்கும் ஒரு கும்பலிடம் மாநில அரசு மாட்டிக்கொண்டு விட்டது. மத்திய  அரசுக்கு நாட்டு மக்களைப் பற்றிய எந்தக் கவலையும் கிடையாது. ஏதோ ஒரு கற்பனையில் கார்ப்பரேட்டுகளுக்கு வசதியான ஒரு ஆட்சியை அவர்கள் நடத்தி வருகிறார்கள். சாதாரண மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இருந் தால் பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து தங்கள் மாநிலத் துக்குச் செல்லும் கெட்டவாய்ப்பான சூழலை உருவாக்கி இருப்பார்களா? 20 லட்சம் கோடியில் திட்டங்கள் என்றார்கள். 3 லட்சம் கோடியில் உதவிகள் என்றார்கள். 50 ஆயிரம் கோடியில் தொழிலாளர்களுக்கு சலுகைகள் என்றார்கள். எல்லாமே காற்றோடு போய்விட்டது.

இவை எல்லாவற்றையும் விட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட, பட்டியலின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பில் கை வைத்து விட்டார்கள். படிக்க முடி யாது, வேலைக்குப் போக முடியாது என்ற நிலைமையை உருவாக்குகிறார் கள். இதற்கு எதிராக திமுக உள் ளிட்ட கட்சிகள் சார்பில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். அதன் தீர்ப்பைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவோம்.

இப்படி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி மக்க ளது உரிமைகளுக்காக இயங்கும் தி.மு.க.வை நோக்கி வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கி றேன். இன்னும் சில மாதங்களில் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்த லுக்கான பணிகள் தொடங்கும் போது, உங்களை அதில் இணைத்துக் கொள்ளுங்கள். நாகை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர் வாகிகளுடன், தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்".

இவ்வாறு அவர் பேசினார்.