ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பாஜக ஆளும் உ.பியில் தொடரும் காவிமயம்!
July 15, 2020 • Viduthalai • இந்தியா

அமைச்சர் வசிக்கும் தெருவில் உள்ள

வீடுகளுக்குக்கூட வலுக்கட்டாயமாக காவி நிறம்

லக்னோ, ஜூலை 15- உத்திரப் பிரதேசம் மாநிலம் பிரயாக் ராஜ் நகரத்தில் உள்ள ஒரு தெரிவில் அம்மாநில அமைச் சர் நந்த கோபால் நந்தி வசித்து வருகிறார்.

நேற்று இவர் வசித்து வரும் தெருவில் அனைத்து வீட்டின் சுவற்றிலும் காவி பெயிண்ட் அடிக்கப்பட்ட தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கும்பல் கேட் காமல் தொடர்ந்த காவி கலரை அடித்துக் கொண்டி ருந்தனர். சிலர் புகார் தெரிவிப்பதற்காக செல்பேசியில் படம் பிடிக்கும்போது கலர் ஸ்பிரே அடித்து விரட்டினர்.

காவி நிறம் பா.ஜனதா கட்சியை குறிக்கும் என்பதால் அந்தத் தெருவில் வசிக்கும் நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குப்தா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகார் அடிப்படை யில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

‘‘இவர்களின் செயல் ரவுடி கள் அதிகரித்துள்ளதை காட் டுகிறது’’ என ஒருவர் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

‘‘நான் அவர்களிடம் நிறுத் துங்கள் என்று கூறியபோது, இடத்தை விட்டு செல்லுங்கள் என்று மிரட்டினர்’’ என்றார் மற்றொருவர்.

இதுகுறித்து குப்தா உத்திரப்பிரதேச மாநில அமைச்சர் நந்தகோபால் நந் தியின் உறவினர் மீது புகார் அளித்துள்ளார். ‘‘ஒரு குடிமக னாக எனது அடிப்படை உரிமை சிதைக்கப்படக் கூடாது. என்னை அமைதியாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். நான் ஒரு வணிகர். என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது. என்னுடைய வீடு காவி கலரில் இருக்க விரும்ப வில்லை. நான் அவர்கள் செயலுக்கு எதிர்க்கும்போது என்னை தாக்கி, வலுக்கட்டா யமாக பெயின்ட் அடித்து விட்டார்கள்’’ என்றார்.

ஆனால் அமைச்சர் கோபால் நந்தி கூறுகையில் ‘‘வழக்குப்பதிவு செய்தது சதி. அடிக்கப்பட்டது முற்றிலும் காவி கலர் அல்ல. ரெட், க்ரீன், சாக்லேட் கலர் கூட இருந்தது. அழகு படுத்துதலை சிலர் விரும்பவில்லை. அவர் கள் வளர்ச்சி பணிக்கு எதிரா னவர்கள்.

இந்த பிரச்சினையை பெரி தாக்கினால் அரசியல்வாதி யாகி விடலாம் என நினைக் கிறார்கள். என்னுடைய தெரு வில் மட்டும் இந்த பணி நடை பெறவில்லை. பிரயாக்ராஜ் முழுவதும் நடைபெறும் வளர்ச்சி பணி’’ என்றார்.