ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பள்ளிகளில் 1, 6, 9, 11ஆம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு வெளியீடு
August 14, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஆக. 14- பள்ளிகளில் 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட் டுள்ள அரசாணையில் கூறப்பட் டிருப்பதாவது:-

அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான 2020-2021ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை யும், ஒரு பள்ளியில் இருந்து மற் றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான (2 முதல் 10ஆம் வகுப்பு) மாணவர் சேர்க்கையும் வருகிற 17ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும், அதேபோல், மேல்நிலைப்பள்ளி களில் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை வருகிற 24ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அரசின் நிலையான செயல் பாட்டு வழிமுறைகளை பின்பற்றி அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த மாண வர் சேர்க்கை செய்யவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் புதிய சேர்க்கை செய்யும் நாளில் மாணவர்களுக்குரிய விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட் டுப் புத்தகங்கள், புத்தகப்பை, சீருடை மற்றும் இதர கல்விசார் பொருட் களை வழங்கவும் அனுமதி அளிக் கப்படுகிறது.

அதேபோல், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, நலிவடைந்த பிரிவினரின் குழந்தை களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடுக் கான சேர்க்கைக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனருக்கு அனுமதி வழங்கியும் அரசு ஆணையிடுகிறது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையின்போது பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் வருமாறு:-

5 மற்றும் 8ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றி தழ்கள் (டி.சி.) வழங்க தேவையான நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுத்து, மாற்றுச் சான் றிதழ்கள் தயார் நிலையில் வைத் திருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப் புக்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி, சமூக இடைவெளியை பின் பற்றி மாற்றுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள், ஆசிரி யர்கள் தங்களுடைய ஊட்டுப் பள்ளிகளில் (பீடர் ஸ்கூல்) 5, 8ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்கள், வீட்டு முகவரியை பெற்று 6, 9ஆம் வகுப்புகளில் குறிப்பிட்ட நாட்களில் சேர்க்கை செய்வதற்கு உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும்.

அதிக மாணவர்கள் இருந்தால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலையில் தலா 20 மாணவர்கள், பெற்றோரை அழைத்து மாணவர் சேர்க்கை செய்திடவேண்டும். அதற் கேற்ப கூடுதல் நாட்களையும் ஒதுக் கீடு செய்து கொள்ளலாம்.

பள்ளிகளில் சேர உரிய ஆவணங் களில் ஏதேனும் ஒரு ஆவணம் இல் லையெனினும் மாணவர் சேர்க்கை செய்து பின்னர், அச்சான்றுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதே போல், 1ஆம் வகுப்பில் சேர உள்ள மாணவர்கள் நேரில் வருகை புரிய வில்லை என்றாலும், பெற்றோர் தரும் ஆவணங்கள் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாண வர் சேர்க்கை செய்திட வேண்டும்.

மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு, குறிப்பிட்ட நாட்கள் ஆகிய வற்றை பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் தலைமை ஆசிரியர்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நாளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்பே பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் வருகை புரிந்து, அனைத்து பணிகளையும் முடித்து தயார் நிலையில் வைத் திருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கு பள்ளி களுக்கு வரும் மாணவர்கள், பெற் றோர் மற்றும் ஆசிரியர்கள் முகக் கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.