ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பணமதிப்பிழப்பால் கிடைத்த நன்மை என்ன? : ராகுல் காந்தி கேள்வி
September 4, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி,செப்.4, ராகுல் காந்தி நேற்று (3.9.2020) பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிய வீடியோவை டுவிட் டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது, 'கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று பணமதிப்பிழப்பு பற்றி பிரதமர் அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய்கள் செல் லாது என்ற அறிவிப்பால் நாட்டு மக்கள் அனைவரும் வங்கிகள் முன்பு நின்றனர். இப்போது நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலை யில், பணமதிப்பிழப்பால் அடைந்த நன்மை என்ன வென்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9 சதவீதமாக கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் சரிந் துள்ளது. ஏழை மக்களின் நலன் பற்றி சிந்திக்காத, திட்டமிடாத ஊரடங்கால் இந்த மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பணமதிப் பிழப்பு காரணமாக ஏழை மக்கள் தங்கள் பாக்கெட் டிலும், வீட்டிலும் வைத் திருந்த சேமிப்பை எல்லாம் வங்கியில் டெபாசிட் செய் தனர். அதன் வழியாக கோடீஸ்வரர்களுக்கான பெரும் கடனை வாராக் கடனாக அரசு மாற்றியது. இறுதியில் பணமதிப்பிழப்  பால் கோடீஸ்வரர்கள் ஆதாயம் அடைய, ஏழைகளே பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு, அரசுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராட வேண்டும். இவ் வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது பதிவில் ராகுல் மேலும், ‘மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டு விட்டதா? அதனால், ஏழை மக்கள் பயன் அடைந்து உள்ளார்களா? காகிதம் இல்லா பொருளாதாரத்தை ஏற்படுத்த பிரதமர் மோடி விரும்பினார். ஆனால், தற் போது அது பணமே இல்லாத பொருளாதாரமாக மாறிவிட்டது,’ என கூறியுள்ளார்.