ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பட்டி தொட்டி முதல், நகரங்கள் வரை பெரியார் அவர்களின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடிட திருவாரூர், காரைக்கால் மண்டல கலந்துரையாடலில் முடிவு
September 6, 2020 • Viduthalai • கழகம்

திருவாரூர், செப். 6- திருவாரூர், காரைக்கால் மண்டல திராவிடர் கழக காணொலி கலந்துரையாடல் கூட்டம் 25.08.20 செவ்வாய்அன்று மாலை 5மணி முதல் 6.30 வரை நடைபெற்றது திருவா ரூர் மண்டல திராவிடர்கழக தலைவர் ஓவியர் சங்கர் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார்

நாகை மாவட்டச் செய லாளர் ஜெ.புபேஸ்குப்தா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட திராவிடர்கழக தலைவர்  வீ.மோகன், திருத் துறைபூண்டி மாவட்ட திரா விடர் கழக தலைவர்  கி.முரு கையன், திருவாரூர் மாவட்ட வீர.கோவிந்தராசு. மயிலாடு துறை மாவட்ட தலைவர் கடவாசல் ஆ.ச.குணசேகரன். திருத்துறைபூண்டி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் மண்டல திரா விடர்கழக தலைவர்  ஜி.கே.நாராயணசாமி, காரைக்கால் மண்டல செயலாளர் கு. கிருஷ்ணமுர்த்தி. திருவாரூர் செயலாளர் ச.பொன்முடி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்

கழகப் பொதுச்செயலாளர் உரை

மண்டல கழகத்தினுடைய கலந்துரையாடல் நோக்கம் பற்றியும் தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது, கிராமம் முதல் நகரங்கள் வரை பெரி யார் படங்கள், சுவரொட்டிகள், சுவர் எழுத்துக்கள், கழக கொடி யேற்றுதல் எங்கு நோக்கிலும் பெரியார் பெரியார் என்னும் முழக்கம் கேட்க வேண்டும் கழகத்தோழர்களிடம் கழகப் பொறுப்பாளர்கள் தொடர் போடு இருப்பது கரோனா காலத்தில் அவசியம் எனவும், கரோனா காலத்திலும் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் ஓய்வின்றி இயங்குவதோடு நம்மையும் இயங்கச்செய்வது குறித்தும் கழகப்பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் உரையாற்றி னார்.

புதுச்சேரி மாநில தலை வர் சிவ.வீரமணி, திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.சிவக் குமார், ஏரவரஞ்சேரி அரங்க.ராஜா, மாநில மாணவரணி துணைச் செயலாளர் நாத் திக. பொன்முடி, திருநெய்பேர் கோவிந்தராசு, திருத்துரை பூண்டி மாவட்ட ப.க தலை வர் புயல்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள்

கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றி னார், பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புகளின் மனுநீதி கொள்கைக்கு ஒரே மாற்று தந்தை பெரியாரின் மனிதநேயம், சமூகநீதி, மானு டப்பற்று கொள்கைகளே, பெரியார்தான் வெல்வார், நூற்றாண்டுகள் பல கடந்தாலும் பெரி யார்தான் பேசப்படுவார் மனித நேயத்திற்கு எதிரான மதவாதம் ஒருபோதும் வெல் லாது  தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடுவோம் தந்தை பெரியார் காணவிரும்பிய முழுமையான சமுதாயத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் வென்றெடுப் போம் என தனது உரையில் குறிப்பிட்டார்

இறுதியாக திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் அருண்காந்தி நன்றி கூறினார்

கூட்டத்தில் கீழ்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1.

இரங்கல் தீர்மானம்.

பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தர் வரியியல் அறிஞர் இராசரத்தினம்

மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் சாமிநாதன் ஆகியோர் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது

 தீர்மானம் 2

விடுதலையை பரப்புவோம்.

சமூக நீதிக்கு ஏற்படும் ஆபத்துகள் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்குகள் ஆகியவைகளை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளுக்கு வழிகாட்டிடும் நிலையிலிருந்து சங்கநாதம் புரிந்துவரும் விடுதலை நாளி தழை PDFல் பல லட்சம் நபர் களிடம் சேர்க்கும் பணியில் அனைத்து தோழர்களும் ஈடுபட இக்கலந்துரையாடல் கேட்டுக் கொள்கிறது.

 தீர்மானம் 3

தலைமைசெயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது.

01.08.20 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுடைய தலைமையில் காணொலி  வாயிலாக நடைபெற்ற திரா விடர்கழக தலைமை செயற் குழு மற்றும் மாவட்டத் தலைவர், மாவட்ட செயலா ளர்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது எனதீர்மானிக்கப்படுகிறது.

 தீர்மானம் 4

தந்தை பெரியார் 142 ஆவது பிறந்தநாள் விழா  !

அறிவுலக ஆசான் தந்தை  பெரியார் அவர்களின் 142 வது பிறந்த நாள் விழாவினை வரும் செப்டம்பர் 17 அன்று திராவிடர்களின் தேசிய விழாவாக மிக எழுச்சிமிக்க வகையில்

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்தோ றும் இல்லங்கள்  தோறும் பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து கழக கொடிகளை ஏற்றுவது என் றும் பெரியார் படங்கள் தாங் கிய வண்ண சுவரொட்டி களை அச்சடித்து ஊர்தோ றும் ஒட்டுவது என்றும் சுவர் எழுத்து விளம்பரங்கள் செய் வது இனிப்புகள் வழங்கியும் எழுச்சிமிக்க செயல்பாடுகளு டன் மிகச்சிறந்தமுறையில் கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.