ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பகுத்தறிவு பகலவனின் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடுவோம்
September 16, 2020 • Viduthalai • கழகம்

செந்துறை, கோபி, பழனி கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

செந்துறை, செப். 16- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் செந்துறையில் 9.9.2020 அன்று மாலை 5.30 மணி யளவில் தொடங்கி நடைபெற்றது.

மண்டல தலைவர் பொறியாளர் இரா.கோவிந்தராஜன் தலைமை யேற்க, மண்டல செயலாளர் சு.மணி வண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கங் களை விளக்கி உரையாற்றினார்.

மாவட்ட இ.அ. தலைவர் சு.அறி வன், மண்டல இ.அ. செயலாளர் பொன்.செந்தில்குமார், மாணவர் கழக அமைப்பாளர் விஷ்ணு, மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய தலைவர் மா.சங்கர் உள்ளிட்ட தோழர்கள் கருத்துகளை கூறினர். செந்துறை ஒன்றிய செயலாளர் மு.முத்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

அரியலூர் ஒன்றிய தலைவர் மு.மருத முத்து, தொழிலாளரணி செய லாளர் வெ.இளவரசன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின. இராமச்சந் திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.செந்தில், செந்துறை நகர தலைவர் ப.இளங்கோவன், இளைஞரணி செயலாளர் லெ.தமிழரசன், க.பாரதிராஜா, சிவக் குமார், விஜயக்குமார், செ.வெற்றிச் செல்வன், மகேஷ் சுந்தரவடிவேல், ஓட்டுநர் பெரியசாமி, உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்

தன்மானம் தந்திட்ட தனிப்பெரும் தலைவர் தந்தை பெரியாரின் 142 ஆவது பிறந்த நாளை மிகச் சிறப்பாக பதாகைகள் அமைத்தும் சுவரொட் டிகள் ஒட்டியும் நல்ல வகையில் விளம்பரப்படுத்தி இனிப்புகள் வழங்கி விழாக் கோலத்தோடு, நடத் திடுவதெனவும், ஊர்தோறும் கழகத் தோழர்களின் இல்லந்தோறும் இலட் சியக் கொடியேற்றி பெரியார் படத்தை அலங்கரித்து வாசல்களில் வைப்பதெனவும் முடிவு செய்யப்படு கிறது.

தந்தை பெரியாரின் தத்துவங்களை மக்கள் மத்தியில் பரப்பிடும் வகையில் காணொலி மூலம் கருத்தரங்குகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்து வதென தீர்மானிக்கப்படுகிறது.

கரோனா கொடுந்துயரில் அவதிப் படும் மக்களுக்கு அவர்களின் அடிப் படைத் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ.5,000 வழங்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள் கிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வழிகாட்டுதல் அடிப்படையில் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டுமென் றும், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும் மத் திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கோபி கழக மாவட்டம்

கோபி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இரா.சீனிவாசன் தலைமையில் அவரது பெரியார் இல்லத்தில் 5.9.2020 சனிக் கிழமை மாலை 6 மணியளவில் நடை பெற்றது. கலந்துகொண்டவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: தந்தை பெரியார் பிறந்த நாளை ஒட்டி கோபி, நம்பியூர், சத்தி பகுதிகளில் பிரச்சார சுவரெ ழுத்து செய்வதென்று தீர்மானிக்கப் பட்டது.

தீர்மானம் 2: தலைமையகத்தில் இருந்து வந்துள்ள சுவரொட்டிகளை அனைத்து பகுதிகளிலும் ஒட்டுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

தீர்மானம் 3: அனைத்துக் கழக கொடி கம்பங்களிலும் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கு வது என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 4: பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் அமைந்துள்ள அயலூர் இருகாலூர் பெரியார் சமத் துவபுரங்களில் அமைந்துள்ள பெரி யார் சிலைகளுக்கு மாலை அணிவித்து சமத்துவபுர குடிமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவதென்று தீர் மானிக்கப்பட்டது. கூட்ட இறுதியில் கோவை சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் அ.அபிமன்யூ நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட திராவி டர் கழக பகுத்தறிவாளர் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கழக செயலாளர் த.சிவலிங் கம், மாவட்ட ப.க. தலைவர் டாக்டர் மோகன சுந்தரராஜன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் சி.மதிவதன், நகர கழக செயலாளர் த.ஆனந்தராஜ், மாவட்ட ப.க. செய லாளர் வெ.குணசேகரன், மாவட்ட ப.க. தலைவர் க.ந.கருப்பண்ணசாமி, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப் பாளர் நம்பியூர் மு.சென்னியப்பன், மண்டல மாணவர் கழக செயலாளர் ப.வெற்றிவேல், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ப.திலகவதி, பகுத்த றிவு ஆசிரியரணி மாவட்ட அமைப் பாளர் அ.குப்புசாமி, கோபி ஒன்றிய கழக செயலாளர் கே.எம்.சிவக்குமார், ஈரோடு பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் சீனு.மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பழனி கழக மாவட்டம்

கலந்தாய்வுக் கூட்டம் கோரிக் கடவு சமுதாயக் கூடத்தில் 2.9.2020 புதன் காலை 10.30 மணிக்கு நடை பெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ப.க. தலை வர் ச.திராவிடச்செல்வன் தலைமை தாங்கினார். பெரிய கருப்புச்சாமி வரவேற்று பேசினார். கூட்டத்துகு பழனி நகர செயலாளர் சி.இராதா கிருட்டிணன், ரகுமான், பாலன், மானூர் சங்கிலிதுரை. ராமலிங்கம் மற்றும் இளைஞரணி கொடியரசு கன்னிமுத்து, ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணி, வேலுமணி, கருப்புச் சாமி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. பால சுப்பிரமணியம் நன்றியுரையாற்றி னார்.

தீர்மானங்கள்

  1. திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் மறைவுற்ற நல்லதம்பி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.
  2. அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, அதை முன்னிட்டு 100 சுவரொட்டிகள் ஒட்டுவது, 42 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்வது என தீர் மானிக்கப்பட்டது.
  3. எதிர்வரும் டிசம்பர் 2ஆம் நாள். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை முன் னிட்டு 88 இடங்களில் சுவர் விளம் பரங்கள் செய்வது என்றும் சுவர்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால் இப்போதே அப்பணியை துவங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
  4. அய்யா அவர்களின் பிறந்த நாளுக்கு மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.