ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நோயாளியை ஆம்புலன்சில் இருந்து சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்துச் செல்ல நவீன ஸ்டெரச்சர்
August 16, 2020 • Viduthalai • உலகம்

அபுதாபி, ஆக.16 அபுதாபியின் காவல் துறையின் மீட்புப்பணி ஹெலிகாப்டர்களுக்கு நோயாளி களை ஆம்புலன்சில் இருந்து சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்து செல்ல நவீன ஸ்டெரச்சர் வழங்கப் பட்டு உள்ளது.

அபுதாபி காவல் விமானப் போக்குவரத்து பிரிவின் துணை இயக்குநர் ஒபைத் முகம்மது அல் ஷாமிலி கூறியதாவது:- அமீரகத்தில் கரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அபுதாபியில் விபத்தில் பாதிக்கப்பட்ட அல்லது கரோனா வைரஸ் மருத்துவப் பரிசோ தனையில் பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக ஏர் ஆம்புலன்சு எனப்படும் சிறப்பு ஹெலிகாப்டரில் சிகிச்சைக்காக அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுவரை கவச உடைகளை அணிந்தபடி மருத்துவ ஊழியர்கள் நோயாளியை ஸ்டெரச்சரில் அழைத்து சென்று வந்தனர். இதில் அவர்கள் பயணம் செய்யும் ஹெலி காப்டரிலும், ஊழியர்களுக்கும் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு தற்போது கூடுதல் பாதுகாப்பிற்காக கேப்சூல் படுக்கைகள் போன்ற நவீன ஸ்டெரச்சர் அபுதாபியின் காவல் துறையின் மீட்புப்பணி ஹெலி காப்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணாடிப் பெட்டி போன்ற அமைப்பில் விபத்தில் பாதிக்கப்பட் டவர் அல்லது நோயாளி உள்ளே படுக்க வைக்கப்படுவார். அந்த பெட்டியின் உள்ளே ஆக்சிஜன் செலுத்த வசதி உள்ளது.

மேலும் பல்வேறு திறப்புகள் போன்ற அமைப்புகளில் இருந்து வெளியில் இருந்தபடியே நோயா ளியை தொடாமல் பரிசோதனை மற்றும் உயிர்காக்கும் கருவிகளை பொருத்த முடியும். அதற்காக மூடி போன்ற அமைப்பில் கையுறைகள் நோயாளியை தொடும் வகையில் உள்ளது.

இதன் மூலம் கரோனா நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற் றுள்ள நபர்களை எந்த வித தயக்கமும் இல்லாமல் ஹெலிகாப் டரில் தகுந்த மருத்துவப் பாதுகாப் புடன் அழைத்து செல்ல முடியும். இந்த நவீன கேப்சூல் படுக்கை ஸ்டெரச்சர் அமைப்புடன் உள்ள தால் நோயாளியை ஆம்புலன்சில் இருந்து அப்படியே சிகிச் சைக்கான பகுதிக்கு அழைத்து செல்ல முடியும். இதன் மூலம் கிருமித் தொற்று வெளியில் பரவாமல் தடுப்பதுடன் துரிதமாக பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையும் அளிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.