ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நீதித்துறை நடைமுறைகளில் தாய்மொழியில் பேசவும், வாதாடவும், எழுதவும் வேண்டும் குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்
August 5, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி,ஆக.5, ஆந்திரா பல்கலைக் கழகத்தின் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சட்டக் கல்லூரி யின் 76ஆவது நிறுவன தினத்தை யொட்டி நடைபெற்ற பவள விழா மெய்நிகர் நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு உரையாற்றினார்.

நீதியை விரைந்தும், குறைந்த செலவிலும் வழங்க வேண்டியது அவசியம். நீண்ட காலத்துக்கு வழக் குகளை ஒத்திவைப்பதால் என்பது நீதி இப்போது அதிகச் செலவு கொண்ட தாக மாறி வருகிறது.  தாமதிக் கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. பொது நல மனுக்கள் என்பது, சுயநலம், பணத்துடன் சம்பந்தப் பட்ட, அரசியல் நலங்களுக்கான, தனிநபர் நல மனுக்களாக இருக் கக்கூடாது. பெரும்பாலான மக் களின் நலனுக்கானவையாக அவை இருக்கும் பட்சத்தில், தவறில்லை. குரலற்றவர்களின் குரலாக சட்ட மாணவர்கள் ஒலிக்க வேண்டும். தங்களது சட்ட அறிவை ஒடுக்கப் பட்ட மக்களை அதிகாரம் பெற்ற வர்களாக மாற்றப் பயன்படுத்த வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்குச் சட்ட உதவிகளை அர்ப்பணிப்பு உணர் வுடன் வழங்க வேண்டும். இளம் வழக்குரைஞர்கள் தங்கள் கட மையைச் செய்யும்போது, அச்சமற்ற வர்களாகவும், நியாய உணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும். நெறி முறைக்கு உட்பட்டு, தொழில் முறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அநீதி எங்கு நடந்தாலும், எப்படி இருந்தாலும் அதை எதிர்த் துப் போராட வேண்டும். சட்டங் களை இயற்றும்போது சந்தே கத்தைத் தவிர்க்க வேண்டும். சட்டங்கள் எளிமையானதாகவும், சிக்கலின்றியும் இருக்க வேண்டும். சொல்லில் மட்டும் கவனம் இருந்தால் போதாது, செயலிலும், நமது சட்டங்களின் நோக்கத்திலும் கவனம் இருக்க வேண்டும்.

வழக்குரைஞர்கள் பெரும் சமூக மாற்றத்தை உருவாக்கும் திறமை யுடையவர்கள். சமுதாயத்தைப் பொறுத்தே, சட்டங்களும் அமை யும். நீதி, நியாயம், சமத்துவம், கருணை, மனித நேயம் ஆகிய நற்பண்புகளின் அடிப்படையில் நமது சட்டங்களை ஆய்வு செய்து நிலையாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அத்துடன், நமது சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்கு முறைகளைத் தொடர்ந்து சீர்திருத்தம் செய்து கொள்ள வேண்டும்.

முன்னேற்றமான சமுதாயத்திற்கு பொருந்தாத சட்டங்களை தாமத மின்றி, பாரபட்சம் பார்க்காமல் ரத்து செய்வதுடன், காலத்திற்குப் பொருத்தமான வகையில் சட்டங்களை மாற்ற வேண்டும்.

நமது நீதி நடைமுறையைகளை முன்னேற்ற அனைத்து மட்டத்தி லும் முயற்சி தேவை. சட்ட உள்கட்ட மைப்பை தொடர்ந்து மேம்படுத்துவ துடன், மக்களுக்கு, குறிப்பாக சாதா ரண மக்களுக்கு நீதியை எளிதில் அணுகுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். நமது பெரும்பாலான சட்டங்களும், விதிமுறைகளும், இன்னும் சாதாரண மனிதனுக்குத் தெரியாததாகவே உள்ளன.

அடிப்படை, தொடக்க, உயர் தொடக்கக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். நான் மேலும் ஒரு படி சென்று கூறுகிறேன், நமது அனைத்து நடைமுறைகளிலும் பொது வாழ்க்கையிலும் தாய் மொழியைப் பயன்படுத்துவதுடன், நடைமுறையைப் பிரச்சாரப்படுத்த வேண்டும். கல்வியாக இருந்தாலும், நிர்வாகமாக இருந்தாலும், நீதித் துறை நடைமுறையாக இருந்தாலும், மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசவும், வாதாடவும், எழுதவும் வேண்டும். அப்போதுதான், அவர் களால் தடை யின்றி, சுலபமாக தங்கள் கருத்தைத் தெரிவிக்க முடியும். சட்டத் தொழிலை ஓர் இயக்கமாக இளம் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண் டும். மிகவும் அதிகாரமற்ற, ஆதரவற்ற நமது மக்களுக்கு சேவை புரிய எப்போ தும் தயாராக இருக்க வேண்டும் இவ் வாறு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டார்.

ஆனால், தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழி யாக்க இயலாது என்று அண்மையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதிய பதில் கடிதத்தில் கைவிரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.