ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நீண்ட நாள் வாழவேண்டுமா
November 7, 2020 • Viduthalai • மற்றவை

நீண்ட நாள் வாழவேண்டுமா?

முதியவர்களின்  மரணத்திற்கு அதீத உடற்பயிற்சி காரணமில்லை

வயது முதிர்ந்தவர்கள் உடற்பயிற்சி செய்வதால் உடல்நிலை சீர் கெட்டு மர ணித்து விடுவார்கள் என்று கூறுவது உண் மையல்ல என்று ஆய்வுகளில் கண்டறிந்து உள்ளனர்.

உடற்பயிற்சி மற்றும் இதர உடல்ரீதியான செயல்பாடுகள் மக்களின் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதவை ஆகும். அனைத்து வயதினருக்கும் உடல் ஆரோக் கியத்திற்கு உடற்பயிற்சி கட்டாயத்தேவை ஆகும்.தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த  ஆய்வுகளில் உடற்பயிற்சி செய்பவர்கள் நீண்ட நாள் வாழ்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது, குறைந்த வயதில் மரணமடை பவர்கள் உடலியல் ரீதியாக அதிகம் செயல் படாமல் இருப்பவர்களாகவே உள்ளனர்.

  நார்வே நாட்டில் உள்ள நார்வேஜியன் அறிவியல் தொழில் நுட்பக் கல்வி நிறு வனம் 'த பிஎம்ஜே' மருத்துவ இதழில் வெளியிட் டுள்ள   ஓர் ஆய்வுக்கட்டுரையில் மருத்துவ ஆய்வாளர்கள் தொடர்ந்து அய்ந்து ஆண்டுகள் 70 முதல் 77 வயது வரையிலான முதியவர்களைத் தேர்ந் தெடுத்து அவர் களின் அன்றாட வாழ்க்கை முறையை ஆய்வு செய்தனர்,

அவர்களுக்குத் தேவையான உடற் பயிற்சி  ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்கி வந்தனர். இதன் படி 1567 முதிய வர்கள் இதில் பெண்கள் 790 மற்றும் ஆண் கள் 777 பேர், தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வந்தனர்.

நார்வேயில் எடுக்கப்பட்ட இந்த ஆய் வில் அங்கு சராசரி வயது 73 ஆக உள்ளது. இதனடிப்படை 87.5 சதவீத பங்கேற்பாளர் கள் நல்ல உடல் நிலையில் இருந்தனர்.

இவர்களில் 80 சதவீத முதியவர்கள்  எளிய மற்றும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவந்தனர்.   இதில் 400 பேர் இரண்டு வார இடைவெளி இல்லாத உடற்பயிற்சி மற்றும் 387 பேர் சிறிது இடைவெளியுடன் கூட உடற்பயிற்சி மற்றும் மீதமுள்ளவர் களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்ய அனுமதித்தனர்.

 தொடர்ந்து 5 ஆண்டுகள் இவர்களைக் கண்காணித்து வந்த போது இவர்களில் உட லியல் ரீதியிலான இயக்கம் 406 விழுக்காடு அதிகரித்திருந்தது, அதாவது இவர்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது,  இதில் 72 பேர் மிகவும் இளமையான நிலைக்குத் திரும்பிய தாக கூறியுள்ளனர்.

மேலும் இடைவெளியின்றி உடற் பயிற்சி  எடுத்துக்கொண்டவர்கள் இடை வெளி விட்டு உடற்பயிற்சி செய்தவர்களின் உடலி யல் அவ்வளவாக வேறுபாடுகள் காணப்படவில்லை. இவர்கள் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை எதிர்க்கும் ஆற்றலைக்  கூடுதலாக பெற்றிருந்தது   கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் விருப்ப உடற்பயிற்சிக்காக அனுமதிக்கப் பட்டவர் களின் உடலில் நோய் எதிர்க்கும் தன்மை சிறிது குறைந்து உள்ளதைக் கண்டுபிடித்து உள்ளனர்.

இவர்களின் விருப்ப உடற்பயிற்சிக்கான அனுமதிக்கப்பட்டவர்களில் 16 சதவீதம் இதய நோய்க்கான அறிகுறிகள் அதிகரித்து இருந்தது. அதே நேரத்தில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் குழுவில் உள்ள முதியவர்களின் 15 சதவீதம் மற்றும் 15.5 சதவீதம் இதயநோய் அறிகுறிகள் குறை வாகக்  காணப்பட்டன.

இதனடிப்படையில் வயதானவர்கள் அதீத உடற்பயிற்சி செய்தால் உடல் அசதி ஏற்பட்டு விரைவில் மரணமடைவார்கள் என்ற கூற்று பொய்த்துப் போனது. எந்த வயதானாலும் உடற்பயிற்சி செய்யும் போது அவர்களின் வாழ்நாள் அதிகரிக்கச் செய் யும் என்று கண்டறியப்பட்டுள்ளது.