ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்க!
August 29, 2020 • Viduthalai • கழகம்

6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

புதுடில்லி, ஆக. 29- ‘நீட், ஜேஇஇ தேர்வு களை நடத்தும்படி அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்கம் உட்பட 6 மாநிலங்கள் வழக்கு தொடர்ந் துள்ளன. நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வி மாணவர் சேர்க்கைக்கான தகுதி தேர்வாக நீட், ஜேஇஇ ஆகியவை நடத்தப்படுகின்றன.

கடந்தாண்டு வரை இத்தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி வந்தது. இந்தாண்டு முதல் இத்தேர்வுகளை நடத்துவதற்கான, ‘தேசிய தேர்வு முகமை’ அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டுக்கான நீட்  தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இருந்தன. அதேபோல், ஜேஇஇ.க்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கரோனோ வைரஸ் அச்சுறுத் தல், ஊரடங்கால் இத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

பின்னர், செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வும், செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரையில் ஜேஇஇ. தேர்வும் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இதற்கு மாநில அரசுகளும், மாணவர் களும் கடும் எதிர்ப்பு தெரித்தனர்.

மேலும், இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந் தனர். இதை கடந்த 17ஆம் தேதி நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. தேர்வுக ளுக்கு தடை விதிக்கவும் மறுத்தது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த் தும், தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி யும் மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ் டிரா, ராஜஸ்தான்,  சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகளின் சார்பில் நேற்று தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘கரோனோ நோய்  தொற்று அதிகம் இருப்பதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க  வேண்டும்.

மேலும், இது தொடர்பாக கடந்த 17ஆம் தேதி வழங்கிய உத்தரவை நீதி மன்றம்  மறுஆய்வு செய்ய வேண்டும். இதில், மாணவர்களின் நலனை நீதிமன் றம் அடிப்படையாக கருத  வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடக்க இன்னும் 2  வாரங்களே உள்ள நிலையில், இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக  எடுத்து விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.