ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
August 9, 2020 • Viduthalai • இந்தியா

மும்பை, ஆக. 9- பொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கரோனா பரவல், ஊரடங்கு ஆகிய வற்றால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2008ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் முதன்முறையாகக் கடன் புதுப்பிப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி தனி மனிதர்கள், நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடனைப் புதுப் பித்துக் கொள்ளலாம். இதற்கு வசதியாக திவால் மற்றும் நொடிப்பு நிலையை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முடக்கி வைக்கப் பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ஆம் தேதி நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் அளித்த கடன் களுக்கான தவணைகளை மூன்று மாதம் நிறுத்திவைக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 27ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்தது. இந்த மூன்று மாத நிறுத்திவைப்பு என்பது மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் செலுத்தவேண்டியத் தவணைகளுக்கு மட்டுமே பொருந்தும்.  மத்திய அரசு முதல் முதலில் மூன்று வார காலத்துக்கு மட்டுமே முடக்க நிலை அறிவித்தது. அந்நிலையில், மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் மூன்று வார காலத்துக்குப் பிறகு தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் மூன்று மாத கால தவணை நிறுத்திவைப்பு அறிவிக்கப்பட்டது.

கடனைக் காலதாமதமாகத் திருப்பிச் செலுத்த ரிசர்வ் வங்கி அறிவித்த காலம் ஆகஸ்டு 31ஆம் தேதி முடிவடைவதையொட்டி கடனைப் புதுப்பித்துக்கொள்ளும் திட்டம் ரிசர்வ் வங்கியால் அறி விக்கப்பட்டுள்ளது.

 

இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர்மீது குண்டர் சட்டம்

பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில்  சிறையிலடைப்பு

கள்ளக்குறிச்சி, ஆக. 9- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பெரியாரின் சிலையை அவமதித்த, இந்து மக்கள் கட்சியின் மாவட் டச் செயலாளர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து இந்துத்துவ, வகுப்புவாதவெறி கொண்ட வன்முறையாளர்களால் தூண்டப்பட்டு தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா ஆகிய சமூக நீதித் தலை வர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூர் மூன்று சாலை சந்திப்பில் அமைந்துள்ள பெரியார் சிலையைக்கு கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில் நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்து அந்நபர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பெரியார் சிலை அவமதித்தது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருக்கோவி லூர் காவல்துறை துணைக்  கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையில் குறிப்பிட்ட அந்த நேரத்தில் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமியின் மகன் மணி என்பவர் நிகழ் விடத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. இவர் இந்து மக்கள் கட்சி யின் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவரிடம் நடத்திய விசாரணையில் பெரியார் சிலையை அவமதித்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்ட இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மணியை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் அவர் திருக்கோவிலூர் சிறையில் இருந்து மாற்றப்பட்டு கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.