ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிப்படுத்திய நாசா
October 29, 2020 • Viduthalai • உலகம்

வாசிங்டன், அக்.29 இந்தியாவின் சந்திராயன் - 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற் பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது.

ஆனாலும், சந்திராயன் விண் கலம் கண்டு பிடித்தது.

நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது.

இந்த நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மய்யத் தில் இருந்து சோபியா தொலை நோக்கி மூலம் நிலவின் மேற் பரப்பில் நீர் மூலக்கூறை கண்ட றிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடி யோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீர் நிலவின் குறிப்பிட்ட பகுதிகளில் இல் லாமல் பெருமளவு பரவி இருப்பது தெரியவந்துள்ளது. நீர் மூலக்கூறுகள் நிலவில் பனிசூழ்ந்த பகுதிகள், நிழல்பகுதிகளில் மட்டு மல்லாமல் அனைத்து பகுதிகளி லும் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.

சூரிய ஒளி விழாத நிலவின் தென்துருவ பகுதியில் பனிக்கட்டி வடிவில் 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு நீர் ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் கணித்ததை விட நிலவின் மேற்பரப்பில் அதிக அளவு தண்ணீர் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

 இந்த கண்டுபிடிப்பின் மூலம் எதிர்காலத்தில் மனிதன் அல்லது ஆய்வு கலன்கள் நிலவை அடையும் போது குடிநீர் அல்லது எரிப் பொருளுக்கான மூலப் பொருட்களாக இந்த நீர் மூலக் கூறுகள் விளங்கும் என்று நாசா தெரிவித்து உள்ளது.