ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நாட்டையே உலுக்கும் நிதி மோசடி!
September 25, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி, செப்.25 இந்தியாவிலிருந்து பல கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப்பணம் பரிமாற்றம் குறித்த பின்சென் என்ற ஊழல் கோப்புக்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக் குழுமம் பன்னாட்டு புலனாய்வு பத்திரிகையாளர் மற்றும் பஸ்ஃபீட் செய்திகள் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டது.

இதனை மத்திய நேரடி நிதி வாரியம் மற்றும் நிதி அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, முக்கிய உறுப்பினர்களுடன் ஆலோ சனையில் ஈடுபட இருப்பதாக உச்சநீதிமன் றத்தால், கறுப்பு பணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட சிறப்பு விசா ரணைக்குழு அறிவித்தது.

இந்த கோப்புகளில் இடம் பெற்றிருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனம் குறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் இருக்கும் வருவாய்த் துறை மற்றும் மத்திய நேரடி நிதி வாரியத்திடம் பேசியதாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் இந்நாள் கறுப்பு பணம் சிறப்பு விசாரணைக்குழு தலைவருமான எம்.பி.ஷா இந்தியன் எக்ஸ்பிர சிடம் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இடம் பெற்றிருக்கும் துறைகளுக்கு சில காலம் அவகாசம் அளித்த பிறகு அகமதாபாத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும், அப்போது தான் இந்த விசயத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று ஷா இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்தார்.

சிறப்பு விசாரணைக்குழுவில் இடம் பெற் றிருக்கும் நேரடி நிதி வாரியம், அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, ரிசர்வ் வங்கி மற்றும் மற்ற குழு உறுப்பினர்களுக்கு, எப்போது ஆலோ சனை கூட்டம் நடைபெறும் என்று அறி விக்கப்படும் என்று கூறினார். அவர் மேலும், முதற்கட்ட விசாரணையை அனைத்து துறை யினரும் மேற்கொண்ட பிறகு தான் அடுத்த கட்டத்தை எட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறப்பு விசாரணைக்குழுவின் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அரிஜித் பசாயத், ஷா கூறிய கருத்து களையே முன்மொழிந்தார். ”ஷா கூறிய கருத்துகளையே நானும் முன்மொழிகின்றேன்” என்று கூறிய அவர், ‘‘ஃபின்சென் கோப்பில் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கும் அனைத்து விவகாரங்களையும் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்று கூறினார். கறுப்பு பணம் குறித்து விசாரணை மேற்கொள்ள இந்த விசாரணை குழு மே 2014 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் உருவாக்கப்பட்டது. மோடி முதன்முறையாக ஆட்சி அமைத்தபோது எடுக்கப்பட்ட மிக முக்கிய முதல் முடிவு இதுவாகும்.

கறுப்பு பண விவகாரத்தில் விசாரணை ஏற்கெனவே நடந்து முடிந்திருந்தாலும், விசா ரணைதுவங்கப்பட்டிருந்தாலும்கூட அனைத்துவிதமான விவகாரங்களையும் விசாரிக்க இந்த குழுவிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விசா ரணைக்குழு சில முக்கியமான அறிக்கைகளை சமர்பித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005- இன் கீழ் கொண்டு வரப்பட்டது. அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ராவும் இந்த ஃபின்சென் கோப்புகள் தொடர்பாக தன்னுடைய கருத்து களை கூறியுள்ளார். உலகளாவிய ஊடக விசாரணையையும், அதில் இந்தியாவின் தரப்பு விசாரணையையும் நாங்கள் கருத்தில் கொண் டுள்ளோம் என்று அவர் அறிவித்தார். இந்த கோப்பில் இடம் பெற்றிருக்கும் சில வழக்குகளை நாங்கள் விசாரித்து வருகிறோம். மேலும் சில புதிய தகவல்கள் விவரிக்கப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள் மூலம் வரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்  இந்த ஆட்சியில் லட்சம் கோடிக்கணக்கில் ஊழல் பணம் உலகெங்கும் பல நாடுகளுக்கு கைமாறப்பட்டிருக்கிறது, அது தற்போது தடையின்றி நடந்துகொண்டு இருக்கிறது, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை முழுமையாக மறைத்து நடிகைகள் குறித்து இரவும் பகலும் தொலைக்காட்சி ஊடகங்கள் விவாதம் நடத்திக்கொண்டு உள்ளன.