ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நாட்டில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா
August 18, 2020 • Viduthalai • இந்தியா

நாட்டில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா?

சோனியா காந்தி கேள்வி

புதுடில்லி, ஆக. 18- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, நாடு தனது ஜன நாயக மதிப்புகளை அவ்வப் போது சோதித்து தொடர்ந்து அதனை மேம்படுத்தி வருகி றது. தற்போதைய அரசு, ஜன நாயக அமைப்பு, அரசமைப்பு மதிப்புகள் மற்றும் மரபுக ளுக்கு முரணாக நிற்கிறது. எனவே, இதுகூட இந்திய ஜனநாயகத்தை சோதிக்கும் காலமாக உள்ளது.

சுதந்திரம் என்றால் என்ன என்பதை அனைத்து மக்க ளும் ஆராய்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும். இன்று நாட்டில் எழுத, பேச, கேள்வி கேட்க, மறுப்பு கூற, சுய கருத் துகளை கொண்டிருக்க, பொறுப் பேற்பதை எதிர்பார்க்க சுதந் திரம் உள்ளதா? ஒரு பொறுப் பான எதிர்க்கட்சியாக ஜன நாயக சுதந்திரத்தை காக்க தேவையான முயற்சிகளையும் போராட்டங்களையும் மேற் கொள்வது எங்கள் பொறுப்பு. இந்தியா தனது ஜனநாயக மதிப்புகள், பலதரப்பட்ட மொழிகள், மதங்கள் மற்றும் பிரிவுகளின் பன்மைத்துவத் திற்காக மட்டுமல்லாமல், ஒற்றுமையுடன் துன்பங்களை எதிர்கொள்ளும் தன்மைக் காகவும் உலகம் முழுவதும் தனித்து அறியப்படுகிறது. இன்று, முழு உலகமும் கரோனா வைரஸ் தொற்றுநோயுடன் போராடி வருகிறது.

இந்த தொற்றுநோயை இந்தியா ஒற்றுமையாக தோற் கடித்து ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்த தொற்று நோயிலிருந்தும் கடு மையான பொருளாதார பாதிப்பில் இருந்தும் நாம் அனைவரும் ஒன்றாக வெளியே வருவோம் என்று முழு நம்பிக்கை கொண்டுள் ளேன். லடாக் கல்வான் மோத லில் வீரமரணம் அடைந்த நம் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் வீரத்தை மதிக்கவும் அவர் களுக்கு உரிய மரியாதை கொடுக்கவும் அரசை கேட் டுக் கொள்கிறேன். சீன ஊடு ருவல்களை முறியடிப்பதும் தாய்நாட்டின் இறையாண் மையைப் பாதுகாப்பதுமே நம் வீரர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய அஞ்சலியாகும். சுதந்திர தினமான இன்று, நாட்டிற்கு ஒரு பிரகாசமான ஜனநாயக எதிர்காலம் கிடைக் கும் என்று நம்புகிறேன். இவ் வாறு அவர் கூறினார்.