ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நாடாளுமன்றத்தில் நேற்று....!
September 21, 2020 • Viduthalai • இந்தியா

ஓபிசி, எஸ்.சி. பிரிவினர்க்கான இலவச பயிற்சி

மக்களவையில் கனிமொழி (திமுக)

தமிழ் நாட்டில் ஓ.பி.சி., எஸ்.சி. பிரிவினர்க்கு மத்திய அரசு இலவச பயிற்சி நடத்துகிறதா? அவ்வாறெனில் கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? வரும் ஆண்டுகளில் மேலும் பயிற்சி மய்யங்கள் கிராமங்களில் அமைக்க திட்டம் உள்ளதா? என திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, மத்திய சமூக நலம் மற்றும் மேம்பாடு துறை அமைச்சர் ரட்டன்லால் கட்டாரியா அளித்த பதிலில், தமிழ் நாட்டில் இரண்டு பயிற்சி மய்யங்களை அரசு தேர்ந்தெடுத்து 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 2017-18 இல் 15 சதவீத மாணவர்களும், 2018-19 இல் 2.5 சதவீத மாணவர்களும் தேர்வு பெற்றுள்ளார்கள் மேலும் புதிய பயிற்சி மய்யங்களைத் தேர்ந்தெடுக்க மாநில அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் எப்போது அமையும்?

- கட்டுமான பணி இழுத்தடிப்பு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என மக்களவையில் நேற்று முன்தினம் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதில் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணைஅமைச்சர் அஷ்வின் குமார், “மதுரையின் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜப்பான் சர்வதேச வங்கியிடம் (ஜப்பான்இண்டர்நேஷனல் கோஆப்ரேஷன் ஏஜென்சி ஜேஅய்சிஏ) கடன் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைக்க வேண்டும்.இது தொடர்பான ஒப்பந்தத்தில் ஜப்பான் குறிப்பிடும் காலக்கட்டத்தை பொறுத்தே மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பதைக் கூற முடியும்” என அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் மசோதா

விவசாயிகளை அவமதிப்பதாகும்

மாநிலங்களவையில் டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக)

விவசாயம் மாநிலப்பட்டியலில்  உள்ளது. இந்த மசோதாவைக் கொண்டு வர இந்த அரசுக்கு உரிமை இல்லை. தமிழகத்தில், திமுக ஆட்சியில் இருந்தபோது எங்களுக்கு உழவர் சந்தை இருந்தது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அங்கு கொண்டு வருவார்கள், வாங்குபவர்கள் அங்கு வருவார்கள். விகிதத்தை நிர்ணயிக்க ஒரு அரசாங்க முகவர் இருப்பார் மற்றும் விற்பனை சீராக செல்லும்.

இந்த மசோதா இறுதியில் விவசாயிகளை பெரிய தொழில்துறை  நிறுவனங்களுக்கு அடிமைகளாக விற்பனை செய்ய பயன்படுத்தப்படும். இதைத்தவிர இந்த மசோதா வழங்க வேறு எதுவும் இல்லை. இந்த நாட்டின் மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 20 சதவீத பங்களிப்பை வழங்கும் விவசாயிகள் இந்த மசோதாவால் அடிமைகளாக மாற்றப்படுவார்கள். இந்த மசோதா விவசாயிகளுக்கு உதவாது. இதன் இறுதி முடிவு என்னவென்றால், இந்த மசோதா விவசாயிகளைப் பாதித்து அவர்களைக் கொன்று அவர்களை ஒரு பொருளாக மாற்றும் என பேசினார்.

விவசாயிகளை விற்பதற்காகக்

கொண்டுவரப்பட்டதே வேளாண் மசோதா !

மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக)

‘‘கரோனா காலத்தில் இந்த மசோதாக்களை கொண்டுவர வேண்டிய அவசரம் என்ன..? இந்த மசோதாக்களை கொண்டுவந்ததன் மூலம் இந்தியா விவசாயிகளின் நாடு என்ற பெயர் போய் கார்ப்பரேட் நிறுவங்களின் நாடு என்றாகிவிட்டது. ஜந்தர்மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போதெல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. இது போன்ற விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களைக் நிறைவெற்றுவதைக் கைவிட்டு தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு மசோதாக்களை அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.ஆயினும், வேளாண் மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் திருச்சி சிவாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.