ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நாடாளுமன்றத்தில் நேற்று....!
September 19, 2020 • Viduthalai • மற்றவை

தமிழ்நாட்டில் மத்திய அரசின் 90 சதவீத

பணியிடங்களை தமிழக பட்டதாரிகளுக்கு ஒதுக்குக:

மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக)

நேற்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா உரையாற்றும்போது,

‘‘ரயில்வே, வருமானவரி, பெட்ரோலியம்  உள்ளிட்ட மத் திய அரசுப் பணிகளில் தமிழக பட்டதாரிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். குறிப்பாக, மத்திய அரசுப் பணி களில் குறைந்த அளவிலேயே  தமிழகத்தில் இருந்து நிரப்பப் படுகிறது. அதனால்தான் தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில்  90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் 84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். மேலும் யு.பி.எஸ்.சி தேர்வுகளிலும்கூட தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் அதிகளவில் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர். ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பணி இடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்படுகிறது. எஸ்.எஸ்.சி.மூலம் நடத்தப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் தமிழகத்தில் இருந்துவெறும் 197 இடங்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சி குறித்து

வெள்ளைஅறிக்கை வெளியிடுக:

மக்களவையில் தயாநிதிமாறன் (திமுக)

நேற்று மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் உரையாற்றும்போது,

40 ஆண்டுகளில்  இல்லாத  அளவிற்கு  மோடி ‘‘ஆட்சியில் பொருளாதார  வீழ்ச்சி அடைந் துள்ளது. ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழ்நாட்டிற்குரிய ரூ.12,250.50 கோடியை மத்திய அரசு இன் னமும் தரவில்லை. இது தமிழக மக்களின் பணம். கரோனா தடுப்புப் பணியில் மாநிலங்கள் அதிகம் செலவு செய்யும் நேரத்தில், மத்திய அரசு நிதியைத் தர மத்திய அரசுக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவின்படி  அளிக்கவேண்டிய கடமை உள்ளது.

சென்ற காலாண்டில், இந்தியப் பொருளாதாரம் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதுகுறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும். கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர்க்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை கடந்த இரண்டரை ஆண்டு களாக மத்திய அரசு தரவில்லை எனக் கூறியுள்ளார்.