ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நாடாளுமன்றத்தில் நேற்று....!
September 23, 2020 • Viduthalai • மற்றவை

இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழியறிஞர்கள் புறக்கணிப்பு:

மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக)

மத்திய கலாச்சார அமைச்சர் பிரக லாத் சிங் படேல், சுமார்  12,000 ஆண்டு களுக்கு முந்தைய இந்திய கலாச்சாரத் தின் தோற்றம் மற்றும் பரிணாமத்தை ஆய்வு செய்ய பதினாறு உறுப்பினர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக எழுத் துப்பூர்வ பதில்மூலம் நாடாளுமன்றத் திற்குத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் கலாச்சாரம், பாரம் பரியம் மற்றும் வரலாறு ஆகியவை ஆய்வு செய்யப்பட வேண்டும் என் பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம். ஆனால், குழுவில் பல சமூகங்கள் விடுபட் டுள்ளன.

குழுவில் ஆறு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் அல்லது கல்வியாளர்கள், அவர்கள் சமஸ்கிருத மொழி படிப்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள். குழுவில் ஒரு சர்ச்சைக்குரிய நபரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ், இந்திய நாட்டின் ஒரு தொன்மையான மொழி. பல அறிஞர்கள் இருக்கிறார்கள், தமிழ் மொழியிலிருந்தோ அல்லது தமிழ் அறிஞர்களிடமிருந்தோ பிரதிநிதித்துவம் இல்லை என்று நாங்கள் வேதனைப்படுகிறோம். ஒட்டுமொத்தமாக  தென் னிந்திய மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் இல்லை. இந்தியாவில் பழங்குடியினர், பெண்கள், திருநங்கைகள், வடகிழக்கு மக்கள் மற்றும் மத சிறுபான்மையினர் போன்ற ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் சிறுபான்மையினராவர். காலனித்துவத்திற்கு முந் தைய இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிய இந்த சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைச் சேர்ப்பது முக்கியம். காலனித்துவ  சக்திகளின் நுழைவால் அதிகம் பாதிக் கப்பட்ட சமூகங்கள் இவை.

ஒடுக்கப்பட்டவர்களைவிட அடக்குமுறையாளரின் கண்களால் வரலாறு எழுதப்படும் என்ற அச்ச உணர்வை இந்தக் குழுவில் உள்ள பல உறுப்பினர்கள்  நியமனம் உருவாக்குகிறது.

ஜாதி அமைப்பின் தோற்றம் மற்றும் அதற்கான காரணம் என்ன? என்பதை அறிந்து கொள்வது அவசியம். இதேபோல், தாழ்த்தப்பட்டவர்களின் சமூகத்திற்கு இழைக்கப்படும் கொடு மையைப் புரிந்துகொள்வது அவசியம். இவை அனைத்தையும், வரலாற்றை எழுதும் வாய்ப்பு பெற்ற சிலர் தங்கள் வசதிக்கேற்ப திருத்தி எழுதாமல், உள்ளது உள்ளபடி  எழுதவேண்டும். அதைப் படிக்கும்போதுதான் உண்மை நிலை புரியும். திராவிட கலாச்சாரம் எப்போதும் கொண்டாடப்படுகிறது  என்று பேசினார்.

திருச்சி சிவா உரையை மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வரவேற்று, இந்த  நல்ல ஆலோசனையை மத்திய கலாச்சார அமைச்சரிடத்தில் தெரிவிக்கும்படி, அவை யில் இருந்த மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடம், அறிவுறுத்தினார்.