ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல
October 27, 2020 • Viduthalai • இந்தியா

மோகன் பாகவத்திற்கு அசாதுதீன் ஒவைசி பதில்

அய்தராபாத், அக். 27- குடியு ரிமை திருத்தச் சட்டம்  குறித்து, சிலர் எங்கள் இசுலாம் சகோ தரர்களை தவறாக வழி நடத்தியுள்ளனர் என்ற ஆர். எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கருத்தை ஏ அய் எம் அய் எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடுமை யாக எதிர்த்தார்.

அசாதுதீன் உவைசி தனது ட்விட்டர் பதிவில், ” தவறாக வழிநடத்த நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. குடியு ரிமை சட்டத்தோடு, தேசிய குடிமக்கள் பதிவேடு இணைக் கப்பட்டால் என்ன நடக்கும்  என்பதை பாஜக வெளிப் படையாக தெரிவிக்க மறுக் கிறது.  இசுலாமியர்களைத் தவிர்த்து மற்ற அனைத்து மக்களுக்கு குடியுரிமை கொடுக் கலாம் என்று குடியுரிமை சட்ட திருத்த குறிப்புகளை நீக்கக் கூறுங்கள் இந்த பிரச் சினை மேலும் விவாதிக்கப் படுவதற்கு முன் னர், கரோனா வைரஸ் நோய்த் தொற்று பக்கம் கவனம் திரும்பியது. இதனால், சட்ட அம்சங்கள் குறித்த விவாதங்கள் நடை பெறாமல் போனது என்று அவர் கூறினார். குடியுரிமையை மதத்தோடு இணைக்கும் எந்த வொரு சட்டமும் கடுமையாக எதிர்க்கப்படும் என்றும் அசாது தீன் ஒவைசி வலியுறுத்தினார்.

முன்னதாக,  நாக்பூரில் நடந்த வருடாந்திர விஜய தசமி பேரணியில் பேசிய பாகவத், ”ஆர்எஸ்எஸ் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதி ரானது அல்ல. ஆனால், சிலர் தவறான கருத்துக்கள் மூலம் எங்கள் இசுலாம் சகோதரர் களை தவறாக வழிநடத்து கின்றனர்.“ நாட்டின் இசு லாம் மக்கள் தொகை கட்டுப் படுத்தப்படும் என்ற அடிப் படையில் தான் குடியுரிமை மசோதா  எதிர்க்கப்பட்டது. உண்மையில், குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் எந்த மதத்தையும், குடிமகனை யும் பாதிக்காது ,”என்று அப் பட்டமான பொய்யை மோகன் பாகவத் கூறியிருந்தார்

திருத்தப் பட்ட குடியுரி மைச் சட்டத்தின் படி அயல் நாடுகளில் இருந்து இந்தியா வில் வந்து தங்கி இருக்கும் இசுலாமியர்கள் அல்லாத மற்ற அனைத்து மதத்தவர்க ளுக்கும் குடியுரிமை வழங்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் குடிமக்கள் பதிவேட் டில் இஸ்லாமியர்களின் குடி யுரிமைச் சான்றிதழ்கள் குறித்து தெளிவான விதிமுறை கள் இல்லை. ஏற்கெனவே முன்னாள் குடி யரசுத்தலைவ ரின் உறவினர் மற்றும் முன் னாள் ராணுவ அதிகாரிகள் இந்தியர்கள் இல்லை என்று கூறி அவர்கள் தனிமைப்படுத் தும் முகாமில் அடைக்கப்பட் டுள்ளனர்.

மேலும் கருநாடகா மத் தியப் பிரதேசம் குஜராத் உள் ளிட்ட சில மாநிலங்களில் தனிமைப் படுத்தும் முகாம் கள் கட்டப்பட்டுக்கொண்டு இருந்த செய்திகள் படங்க ளோடு இந்தியன் எகஸ்பிரஸ் உள்ளிட்ட இதழ்களில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலை யில் மோகன் பாகவத் இச்சட் டத்தின் மூலம் இசுலாமியர்க ளுக்கு பாதிப்பு இல்லை என்று பொய் சொல்லி இருந்தார்.