ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நம்மை மீண்டும் தாக்கும் என கரோனா வந்தவர்கள் பயப்படத் தேவையில்லை: விஞ்ஞானிகள் தகவல்
August 29, 2020 • Viduthalai • கரோனா

கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நபரை மீண்டும் அது தாக்கும் என்ற கேள்வி எழுந்து நிற்கிறது. இந்த நிலையில்தான்,  கரோனா மீண்டும் தாக்குமோ என அஞ்சுவதற்கு அவசியம் இல்லை என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது. அதுபற்றிய ஒரு பார்வை இது.

விஞ்ஞானி சத்யஜித் ராத்:- (டில்லி தேசிய நோய் எதிர்ப்பு நிறுவன வல்லுநர்): வைரசுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு அமைப்பு பற்றிய முடிவுகளை தனிப் பட்ட நோயாளிகளின் பாதிப்பில் இருந்து எடுக்க முடியாது. இது போன்ற நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மீண்டும் தொற்று ஏற் படுவது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. குறிப்பாக, இது போன்ற 3 உறுதிபடுத்தப்பட்ட நபர்கள் பற்றி மட்டுமே தகவல்கள் வந்துள்ளதால் எதுவும் கூற இயலாது.

விஞ்ஞானி ராம் விஷ்வகர்மா:- (ஜம்மு இந்திய ஒருங்கிணைந்த மருந்துகள் நிறுவன முன்னாள் இயக்குநர்): ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். இது வேறுபட்ட உள்ளார்ந்த மரபணு காரணங் களால் இருக்கலாம் அல்லது அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருந்துகளில் இருக்கலாம். மேலும் தனிப்பட்ட நிகழ்வுகளின் வரலாறு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

வைரசுக்கு எதிரான இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எல்லோரிடமும் அதே அளவில் இருக்காது. அதே வழியில் பாதுகாப்பானதாக வும் இருக்காது. எனவே வைரசால் முதல் முறை பாதிக்கப்பட்ட ஒரு நபர் அல்லது தடுப்பூசி போடப்பட்ட ஒருவர், ஆன்டிபாடி களில் இருந்து பாதுகாப்பை பெறாமல் இருக்கலாம். ஆனால் நோய் எதிர்ப்பு மண்ட லத்தின் டி செல்கள் வழியாக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கலாம். இருப்பினும் மற்றொரு நபரின் நிலை இப்படி இருக் காது. ஏராளமானவர்களிடம் ஆன்டிபாடி உருவாகா மல் போகலாம். ஆனால் இது ஒன்றே பாதுகாப்பு என்பது அர்த்தம் அல்ல. உயிரியல் ரீதியில், மக்கள் ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு வித்தியாசமாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சிக்கலான பின்னணியில் உள்ள அறிவியல் இன் னும் தெளிவாக இல்லை. அது குறித்த புதிரின் பல பகுதிகள் இன்னும் தீர்க்கப்படவும் இல்லை.

பெல்ஜியம் விஞ்ஞானி மார்க் வான் ரான்ஸ்ட்:-  தனிப்பட்ட நபர்களின் அனுபவத்தில் இருந்து பரந்த ஒரு முடிவுக்கு வர முடியாது. தொற்று எவ்வளவு இடைவெளியில் மீண்டும் வரக்கூடும் என்பது இன்னும் எங்களுக்கு தெரியவில்லை.

இப்படி விஞ்ஞானிகள் பலரும் கருத்து கூறி உள்ளனர்.