ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நமக்கு தேர்தல்கள் தேவையா
September 5, 2020 • Viduthalai • மற்றவை

நமக்கு தேர்தல்கள் தேவையா?

(ஜனநாயகம் ஒரு குழப்பம் நிறைந்த விவகாரம் என்று அவர்கள் கூறுகின்றனர். பரவாயில்லை.

சரியான வழியில் குழப்பம் நிறைந்ததாகவே அது இருக்க அனுமதியுங்கள்.)

இர்ஷாத் ரஷீத்

ஜனநாயக அரசியலுக்கு தேர்தல்கள் உண்மையிலேயே ஒரு வழியா?  ஜனநாயகம் பண்பட்டு மேம்பாடு அடைவதற்கு உண்மையில் தேர்தல்கள் உதவுகின்றனவா? இவை இரண்டுமே இல்லை என்று நான் மறுப்பேன். ஆனால் உங்களால் என்ன சொல்ல முடியும்?

பொதுவாக மக்கள் கூட்டு வாழ்க்கை வாழ்வதற்கான சட்டங்களையும், விதிகளையும் முடிவு செய்யும் அனைத்து வயது வந்த குடிமக்களுக்கும் சம உரிமை வழங்குவது என்பதே ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.  அனைத்து குடி மக்களுக்கும் அளிக்கப் படும் அரசாளப்படுவதற்கான உரிமை மட்டுமன்றி, அரசாள்வதற்கான உரிமையையும்  அளிக்கும் இத்தகைய அரசியல் சமத்துவம்தான் ஜனநாயகத்தின் அடித்தளமாக அமைந்திருப்பதாகும்.  ஜனநாயகம் என்ற சொல் மக்கள்  (demos) மற்றும் ஆட்சி  (rule)  என்னும்  இரண்டு கிரேக்க சொற்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது என்பது.

அப்படி பார்க்கும்போது, ஜனநாயகம் என்பது உண் மையில் தன்னாட்சி அல்லது சுயஆட்சி என்பதைக் குறிப் பதாக இருப்பதைக் காணலாம். என்றாலும், தேர்தல்கள் என்பவை அத்தகைய தன்னாட்சிக்கு எதிரான தடை யாகவே ஆகிவிட்டன. தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி இல்லாதவை என்பது மட்டுமன்றி, அதன் பண்புப்படி ஜனநாயகத்துக்கு எதிரானதாகவும் இருப்பதுமாகும். முதலில் படிக்கும்போது இது முட்டாள்தனமானதாகவும் கூட தோன்றலாம். ஜனநாயகத்தின் பிரித்துக் காண முடி யாத ஒரு பகுதியாக தேர்தல்களை உலக அளவில் ஏற்றுக் கொள்பவையாக தேர்தல் அமைப்புகள் ஆகிவிட்டன. தேர்தல்கள் ஜனநாயகத்துடன் இணைத்தே பார்க்கப்படு கின்றன. எடுத்துக் காட்டாக சாமுவேல் ஹண்டிங்டன் வெளிப்படையான, சுதந்திரமான, நேர்மையான தேர்தல் கள் ஜனநயாகத்தின் சாரம் என்று எழுதுகிறார்.

ஜனநாயகத்தைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஒரு தவறான கண்ணோட்டம் இது என்று நம்பும் நான், இது மாற்றம் பெறவேண்டும்  என்றும்  விரும்புகிறேன். தேர்தல் களுக்கு எதிராக எளிதில் வாதாட இயலாதபடி இன்று மக்களின் மனதில் மிகமிக ஆழமாக இந்தக் கருத்து வேரூன்றியுள்ளது. அப்படியிருந்தும் அதற்கு எதிராக வாதாடுவதற்கு நான் இங்கே முயன்றுள்ளேன்.

ஜனநாயகம் பிறந்த புராண நகரம் என்று நம்பப்படும் ஏதென்ஸ் நகர்வாழ் மக்கள்; ஜனநாயக நடைமுறையை சீரழிக்கும் அளவில்  தேர்தல்கள் ஆபத்து நிறைந்தவை என்பதைப் பற்றி உளமாற அறிந்தவர்களாக இருந்துள்ள னர். அதனால்தான் அவர்கள் ஜனநாயகத்தைப் பாது காத்து வைப்பதற்காக  இரண்டு மறுமலர்ச்சி கொண்ட அமைப்புகளை உருவாக்கி வைத்திருந்தனர். பணியாற்று வதற்காக அரசு அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்களை குலுக்கல் முறையில் ஏதென்ஸ் நகர மக்கள் தேர்ந்தெடுத்தனர். இவ்வாறு செய்வது, பொது அலுவல கங்களில் அதிகாரிகளாக வேலை செய்வதற்கு அனைத்து குடிமக்களும் இணைந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சமமான வாய்ப்பு அளிக்கப்படுகிறது.பொது அலுவலக அதிகாரிகள் பணிகளில் நியமிக்கப்படுவதற்கான உரிமை அனைத்து வயதுக்கு வந்த ஏதென்ஸ் நகர மக்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தது. (பெண்களுக்கும், அடிமைகளுக் கும் இந்த உரிமை வழங்கப்பட வில்லை.) தேர்தல்கள் இந்த நடைமுறையை சீரழித்துவிடும் என்பதை ஏதென்ஸ் நகர மக்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டனர் என்றே தோன்றுகிறது. போலிவாதம் பேசும் கலையில் தேர்ந்தவர் களும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வசதிகள் மற்றும் ஆற்றல்களைக் கொண்ட ஒரு சில மக்களை மட்டுமே தேர்தலில் போட்டியிட அவர்கள் அனுமதிப்பதே இதன் காரணம்.

பேச்சு வல்லமையுள்ள மக்கள் தலைவன்

இரண்டாவதாக,  பொது மக்களிடையே அதிக அள வில் செல்வாக்கை செலுத்தவும், அதிகாரத்தைப்  பெறுவ தற்கும்  இயன்றவர்களை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதென்ஸ் தடை செய்துவிட்டது. தங்கள் செல்வாக்கினால் தங்கள் செயல்களை மறைப்பதற்கு சூழ்ச்சித் திறனுடன் மக்களை ஏமாற்றி கையாள்வதன் மூலம்,  ஜனநாயகத்தின் உள்ளேயே இருந்து கொண்டு, ஜனநாயகத்தின் முக்கிய மான அங்கங்களை அழித்துவிட இயன்ற அவர்களது ஆற்றலை ஏதென்ஸ் நகர மக்கள் நன்றாகவே அறிந்திருந் தனர். எனவே, எப்பொழுதெல்லாம் அது போன்ற ஆட் கள் முன்னிலை பெறுவதற்கு முயலுகிறார்களோ அப் போதெல்லாம்,  குறைந்தது 10 ஆண்டு காலத்துக்கு அவர்கள் நகரத்துக்கு வெளியே இருக்க வேண்டும்  என்று வாக்களித்து நகரத்தினுள் வசிக்க தடை விதிக்கப் படுகிறது.   கண்களை மூடிக் கொண்டு மக்கள் பின்பற்றி, தங்களின் ஜனநாயக உரிமைகளையும் கடமைகளையும் சரண் செய்ய இயன்ற இத்தகைய போலி வேடதாரிகளை அதிகார வட்டத்துக்கு வெளியில் வைத்திருப்பதற்கு இந்தத் தடை உதவுகிறது.

இந்த மாதிரியாக இருந்த ஜனநாயகம், ஒரு சிலரின் சட்டத்தின் ஆட்சி என்ற எதிர்நிலைக்கு சிறிது சிறிதாக நகர்ந்து சென்றுவிட்டது. பணம் படைத்த மக்கள் அல்லது மக்களிடையே புகழ் பெற்றிருந்த பணக்காரர்கள் தேர்ந்து எடுக்கப்படுவதற்கான ஒரு நவீன சடங்காகவே,  ஜனநாய கத்தின் இடத்தில் ஒரு சில பணக்காரர்களின் ஆட்சிகளை மாற்றி அமைக்கும் ஒரு புதிர் விளையாட்டாகவே  தேர்தல் ஆகிவிட்டது. இந்த தேர்தல் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் இருக்கிறது என்று சொல்லப்படக் கூடும் என்பது உண்மைதான். ஆனால் இந்த நடைமுறை, பணம் மற்றும் அதிகாரம் மிகுந்த சிறு எண்ணிக்கை கொண்ட மக்களையே தேர்த லில் கலந்து கொள்ள அனுமதிக்கிறது.

இதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் வாதம், அளவி லும் மக்கள் தொகையிலும் நவீன நாடுகள் மிகப் பெரிய வைகளாக இருக்கின்றன என்பதும், தேர்தல்கள்தான் இதற்கான ஒரே திறமை மிகுந்த தீர்வாக அமையும் என்பதும்தான். பொது அரசு அதிகாரப் பதவிகளைக் கைப்பற்றும் பேராசை கொண்டவர்கள் அல்லது மக்களி டையே செல்வாக்கு பெற்ற ஒரு சிலரின் மந்திர, தந்திர செயல்பாடுகள் அற்றதொரு தேர்தல் நடைமுறையை கற்பனை செய்து பார்ப்பது மனிதர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாகும். ஜனநாயகத்தின் சாரத்தை இழந்து விடாமல் கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும் அளவுக்கு நமது கூட்டு அரசியல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு வேறு வழிகளே இல்லையா? அத்தகைய வழிகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தகைய வழிக ளுக்கு நியாயமான வாய்ப்பு அளிக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஒரு தொடக்கமாக நமது அரசியல் கட்டமைப்பு களை எளிதாக நிர்வகிக்க இயன்ற அளவில் மிகச் சிறிய அமைப்புகளாக, ஒரு சிறு அல்லது மிகச் சிறிய நகர அள விலானவைகளாக நாம் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இது உண்மையான அதிகாரப் பகிர்வுக்கு உறுதியான வழி வகுக்கும். ஒரு புவியியல் ஏற்பாட்டில் உள்ள அமைப்பின் மற்ற பிரிவுகளுடன் தொடர்பற்றவையாக வம்சாவளியில் அமையாத இந்த சிறிய கட்டமைப்புப் பகுதிகளில், மக்களின் பொது நன்மை பற்றிய கேள்விகளை விவா தித்து, நியாயமான அளவில் அதிகாரப் பகிர்வு அளிக்கப் பட இயலும். இவ்வாறு செய்வது,  ஜனநாயகம் என்பது பொதுமக்களுக்கு நியாயத்தை சேர்ப்பது என்பதை  நிலைநாட்டும்.  ஜனநாயகம் என்பது அடிப்படையில் விவாதம் மற்றும் பங்கேற்றுக் கொள்வதன் மூலம் நடத்தப் படும் ஓர் அரசாகும்.

இவற்றுக்கிடையேயான வேறுபாடு மிகப் பெரிய அளவிலானது. அமைப்பின் சிறு கிளைகளில் இருக்கும் மக்கள்,  உண்மையில் அடையாளம் காணக்கூடிய ஏதோ ஒன்றினை பார்ப்பார்களே அல்லாமல், ஓர் ஒட்டுமொத்த கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்களாக இனியும் நீடித்து இருக்கமாட்டார்கள். மக்களுடன் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கூறுவதைக் கேட்ட பிறகே சட்டங்கள் நிறைவேற்றப்படும். அத்தகைய விவா தங்கள் மேற்கொள்ளப்படும் விவகாரங்களில் அறிஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் ஆலோசனையும், அறிவுரையும் கேட்டுப் பெறப்படும். பொது சொத்துகளின் அறங்காவலர்கள் என்று நம்மால்  அழைக்க இயன்ற குடிமக்கள் குழுக்கள் அல்லது  பணியாளர் குழுக்களின்  மேற்பார்வையின் கீழ் சட்டங்களும் திட்டங்களும் நிறை வேற்றப்படும். இச் செயல்பாட்டில் அரசு அதிகாரிகளின்  அழிவைத் தரும் தொல்லைகள் தவிர்க்கப்படும்.

கொள்கைகள் செயல்திட்டங்கள் பற்றி முடிவுகளை மேற்கொள்வதற்கு,  கருத்தொற்றுமை எட்டுதல் என்ற நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். மற்ற பிரச்சினைகள் மீது, அவற்றின் தன்மையைப் பொறுத்து அவற்றை நிறைவேற்றுவதில் ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவிலான மக்கள் ஈடுபடுவார்கள். அத்தகைய கருத்தொற்றுமையை எட்டுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதே நேரத்தில் எது ஒன்றுமே எளிதானது அல்ல என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜன நாயகம் குழப்பம் நிறைந்த ஒரு விவகாரம் என்று அவர் கள் கூறுகின்றனர். குழப்பம் நிறைந்ததாக இருந்தாலும் அது சரியான வழியில்  இருப்பதற்கு அனுமதியுங்கள்.

ஜனநாயக நடைமுறைக்கு மக்கள் அளிக்கும் பங்களிப்பு

தற்போதுள்ள நடைமுறையில் தங்களது அன்றாட வாழ்வில் மிகமிக அரிதாகவே மக்கள் ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர். ஒரு பொது சதுக்கத்தில் பொது விவகாரங்கள் பற்றி பொது மக்களுடன் தொடர்ந்து பேசுவதுதான் ஜனநாயகம் என்றால்,  அய்ந்து ஆண்டு களுக்கு ஒரு முறை ஒரு நாளில் தங்கள் வாக்குகளை தேர்தலில் பதிவு செய்வதுடன் அது முடிந்துவிடுவதில்லை. உண்மையைக் கூறுவதானால், வாக்களிப்பதன் மூலம் நமது ஜனநாயகக் கடமைகளை நாம் நிறைவேற்றுகிறோம். ஒரு சில பிரதிநிதிகளுக்கு சுமைகளையோ பயன்க ளையோ அது அளிக்கிறது.

இதற்கு ஒரு மாற்றாக,  ஒரு சமூக மேலாண்மை மாதிரி யில் ஜனநாயகம் மறுபடியும் உயிர் பிழைத்து வர இயலும். புதிய கருத்துகளும், நடைமுறைகளும் ஏற்றுக் கொள்ளாத நீண்ட கால பிரச்சினைகள் மீது குறுகிய கண்ணோட்டத் தைக் குவிப்பதற்கு மாறாக,  நீண்டதொரு காலத்திற்கு பயன்தரும் கருத்துகளையும் நடைமுறைகளையும் தேடிப் பார்க்கத் தொடங்கி, ஒட்டு மொத்த நியாயங்கள், காரண காரியங்கள் மற்றும் விவாதங்கள் மூலம் மக்கள் கேள்வி கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். கொள்கை வழிப்பட்ட தொரு கண்ணோட்டமாக இது தோன்றக் கூடும். ஆனால், துணை அமைப்புகளின் உதவி மற்றும் புதிய நடைமுறை கள் பின்பற்றப்படும்போது,  சமூகத்தின் ஒவ்வொன்றும் மிகச் சரியாக அமைந்திருக்கும் என்ற அந்த கற்பனை, ஒரு மிகப் பெரிய உண்மை நிலையாக மாறிவிடும்.

நியூயார்க் நகரில் நடைமுறையில் உள்ள வரவு செலவு நிதி அறிக்கை தயாரிப்பதில் மக்களுக்கும் பங்களிப்பது அல்லது சுற்றுச்சூழல் மாற்றம் பற்றி விவாதிப்பதற்கு மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூரிகளின் நடை முறை மின்னிசோடா கிராமப்புறப் பகுதிகளில் கடைப் பிடிக்கப்படுவது போன்ற ஆழ்ந்த சிந்தனை கொண்ட தொரு ஜனநாயகத்தின் சில செயல்பாடுகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. மக்கள் எதை விரும்பி தேர்ந் தெடுக்கின்றனர் என்பது பற்றி சமூக உறுப்பினர்களிட மிருந்து நேரடியாக அறிந்து கொள்வதற்கு வடகரோலினா நகர அதிகாரிகள் மக்களிடம் நேரடியாகப் பேசுகின்றனர். நான் ஆதரிக்கும் ஒரு மாற்று அரசாட்சி மாதிரியில், தேவைப்பட்ட சில மாற்றங்களுடன் இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட இயலும். நம்மால் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்படுவதற்குத் தகுதியுள்ள நடைமுறை சாத்திய மான, அர்த்தம் நிறைந்த, உண்மையான மாற்று அரசாட்சி நடைமுறைதானே இது அன்றி, பண்டைய அரசியலின் கடந்த கால இனிய நினைவுகள்  மீது மேற்கொள்ளப்படும்  கண்மூடித்தனமாகன காதல் அல்ல. வாக்குச் சீட்டுகள் பதிவு செய்யும் ஒரு சாதாரணமான நடவடிக்கை என்ற அளவுக்கு நமது ஜனநாயக நடைமுறை குறுக்கப்பட்டு விட்டது. விவாதத்தின் மூலம் அரசாட்சி நடத்துதல் என்ற ஒர் அகண்ட முறையிலான ஜனநாயகத்தைப் புரிந்து கொள்வதை இது தடுக்கிறது. இது ஜனநாயகத்தையே ஒட்டுமொத்தமாக போதுமான அளவில் இல்லாததும், ஒழுக்கநெறியற்றதாகவும் ஆக்கிவிட்டது.

எளிதில் செய்யப்பட இயன்ற மாற்றங்கள்

இது ஒரு வீணான முட்டாள்தனமான முயற்சி என்று நினைப்பவர்கள், அண்மையில் சில மாத காலத்துக்கு முன்பு, அமெரிக்காவில் காவல்துறையினரின் வன்முறைச் செயல்களுக்கு மக்கள் ஆதரவு தருவது என்பது கற்பனை யிலும் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது; ஆனால் இப்போது அமெரிக்க அரசியல் பிரச்சாரத்தில் அது ஒரு முக்கியமான அம்சமாகவே ஆகிவிட்டது. நெருக்கடிகள் எப்போதெல்லாம் ஏற்படும் என்பதை நாம் எப்போதுமே அறிந்திருக்க முடியாது. அப்படி நெருக்கடி கள் உருவாகும்போது, செயல் படுத்தப்படாமல் கிடக்கும் கருத்துகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான ஒரு வாய்ப்பைப் பெறுகின்றன.

தற்போதுள்ள நமது அரசியல் அமைப்பு,  நமது நாடு ஒரு மாபெரும் வல்லரசாக மாற்றம் பெறுவது ஒன்றுதான் நமது அரசியல் நடைமுறைகளை சரி செய்வதற்கான சரியான வழி என்று நாம் நம்பச் செய்யப் பட்டிருக்கிறோம். அது உண்மையல்ல. மிகப் பெரிய கட்டமைப்புகளை, மக்களால் புரிந்து கொள்ளவும் கட்டுப் படுத்தவும் இயன்ற அளவிலான சிறுசிறு பிரிவுகளாக மாற்றி அமைக்கும் ஒரு தேவை இப்போதுள்ளது. இதை எவ்வாறு செய்வது என்று, பெரிய அளவிலான மக்கள் மீது செல்வாக்கு செலுத்திய  (Small is beautiful) "சிறியதே அழகானது" என்ற தனது நூலில் எர்னஸ்ட் சுமேக்கர் (Ernst Schumacher) நமக் குக் காட்டியிருக்கிறார். மிகப்பெரிய, பிரம்மாண்டமான கட்சி கட்டமைப்புகள், மனிதத் தன்மையற்ற நிலைக்கும், கட்டுப்பாட்டு இழப்புக்கும் புரிந்து கொள்ள இயலாமைக் கும் வழி வகுக்கின்றன என்று அவர் தெளிவாக வெளிப் படுத்தி இருக்கிறார்.

மக்களின் பிரச்சினைகளை நன்றாகப் புரிந்து கொண்டு தீர்க்க இயன்ற நிலையில் இருப்பவர்கள் யார்? மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட அல்லது ஒதுங்கியிருக் கும் ஒரு சில பிரதிநிதிகளா? அல்லது இந்த பிரச்சினை களை அன்றாடம்  சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களா? இது போன்ற மாற்று மாதிரி அரசாட்சி மூலம்  அந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து பாடு பட்டுக் கொண்டிருக்கும் மக்களா?

அனைத்து வகையிலும் மிகச் சிறந்த தூய்மையான ஜனநாயகம் என்பது எட்ட இயலாத கானல் நீராகக் கூட இருக்கக் கூடும். ஒரு காலத்துக்கோ அல்லது அனைத்து காலங்களுக்கோ நிலையாக பொருந்தக் கூடியதாக இருப்பது அல்ல அது. டெர்ரிடா (Derrida) கூறியபடி,  ஜனநாயகம் என்பது எப்போதுமே முழுமையாக இருந்தது அல்ல; இனிமேல் வரவேண்டியிருக்கும் ஏதோ ஒன்றான அது எப்போதுமே ஒத்தி வைக்கப்பட்டுக் கொண்டே இருப்பதாகும். அந்த உணர்வுடன், அதன் இன்றைய வடிவத்தில் அடையாளம் காணப்பட்டு, அது அழிந்து போகாமல் இருப்பதற்கு நாம் அனுமதிப்போமாக!

இந்த வர இருக்கும் என்பது, ஜனநாயகத்தின்  இதயத் தில்  மாற்றம் அளிக்கத்தக்க, இடையூறு விளைவிக்கத் தக்க ஆற்றல் பெற்றதாகும். உள்ளுக்கு உள்ளேயே மாற் றம் ஏற்படுவதற்கான ஓர் அடையாளமாக, சமிக்ஞையாக இருப்பது அது. தற்போதுள்ள தேர்தல் வடிவத்திலேயே ஜனநாயகத்தை மூச்சுத் திணற வைப்பது என்பது அதன் அடிப்படை உணர்வுகளுடன் நமது உணர்வுகளையும் கழுத்தை நெறித்து கொல்லுவதற்கு ஒப்பானதாகும். வர இருக்கும் ஜனநாயகத்தில் இருந்து பிரித்து அறியமுடியாத படி நமது எதிர்காலம் அதனுடன் பின்னிப் பிணைந்து இருப்பதாகும்.

நன்றி: ‘தி இந்து' 30-08-2020

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்