ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நன்கொடை
October 10, 2020 • Viduthalai • மற்றவை

திருச்சி சோமரசன்பேட்டை, பெரியார் பெருந் தொண்டர் பி.தியாகராஜன் அவர்கள் தனது 78ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக  ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.200/- நன்கொடை வழங்கியுள்ளார். வாழ்த்துகள்! நன்றி!

- - - - -

வேலூர், கமலாட்சிபுரம், பெரியார் வீதியில் வாழும் புலவர் ச.துறவரசன் அவர்களின் இணையர் மு.சரோஜா அம்மையாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை (11.10.2020) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி!

- - - - -

நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.காசி இணையரும், வாசுகி, வசந்தி, அழகிரி ஆகியோரின் தாயாருமாகிய சுயமரியாதைச் சுடரொளி சண்முகவடிவு அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.10.2020) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை அளிக்கப்பட்டது.

மறைந்த சண்முகவடிவு அவர்களின் உடல், தென் மாவட்டங் களிலேயே முதல்முறையாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 11.10.2010 அன்று உடல் கொடையாக வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.