ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தோட்டத் தொழிலாளர்களிடையே தந்தை பெரியாரின் உரை:
October 8, 2020 • Viduthalai • கழகம்

‘‘பகுத்தறிவோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்; உங்களுடைய பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுங்கள்!''

சிங்கப்பூரில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவனின் 142 ஆம் பிறந்த நாள் விழாவில் காணொலியில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை, அக்.8- தந்தை பெரியார் அவர்கள், மலேயா, சிங்கப்பூர், பர்மா மக்களைப் பார்த்து சொன்னார்கள், "நீங்கள் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் - பகுத்தறிவோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள். நல்ல அளவிற்கு உங் களுடைய பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் மீண்டும் உங்களைப் போன்று தோட்டத் தொழிலாளர்களாக வரக் கூடாது. அவர்கள் சிறந்த விஞ்ஞானிகளாக, பொறியாளர்களாக, வரவேண்டும் என்று சொன்னார்கள் என்ற வரலாற்று நிகழ்வினை எடுத்துக்காட்டி" விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 27.9.2020 இந்திய நேரப்படி காலை 8.30 மணியளவில்  சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் காணொலி வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

சமத்துவத்தை நாட்டிலே

அறிவுப்பூர்வமாகப் புகுத்தினார்

அதுமட்டுமல்ல,  நாயைக் கொஞ்சுகிறான்; பூனையைக் கொஞ்சுகிறான் - அதுபோலவே, மிருகங்களைக் கொஞ்சுகிறான் - இன்னும் கேவலமாக இருக்கக்கூடிய அளவிற்கு, மலத்தைத் தொட்டால்கூட, அந்த இடத்தை மட்டும் கழுவிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றவன் - ஒரு சக மனிதனைத் தொட்டால், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் குளிக்கவேண்டும் என்று சொல்கிறானே, தீட்டுப்பட்டு விட்டது என்று கருதுகிறானே, இதைவிட கொடுமையான காட்டுமிராண்டித்தனம் வேறு இருக்கிறதா என்று கேட்டு, சமத்துவத்தை நாட்டிலே அறிவுப்பூர்வமாகப் புகுத்தினார்.

இதுதான், தந்தை பெரியார் அவர்களுடைய மனித நேயம். பெரியார், மனிதனைப்பற்றி கவலைப்பட்டார்கள். அவருக்கு வேறு வேறு சிந்தனைகள் கிடையாது. அவருக்கு வேறு எந்த ஆசாபாசமும் கிடையாது.

அதன் காரணமாகத்தான், தந்தை பெரியார் அவர் களுடைய பிறந்த நாள் விழாவில், 1929 ஆம் ஆண்டு முதல் முறையாக, அன்னை நாகம்மையாரோடு மலாய் நாடாக இருந்த காலகட்டத்தில் பிரச்சாரம் செய்தார்கள்.

அந்தக் காலகட்டத்திலும், அதற்கடுத்து 1954, 1955 ஆம் ஆண்டு காலகட்டத்தில், மலாய், சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளுக்குச் சென்று மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், பெரியாருடைய தொலைநோக்கு என்பது எவ்வளவு சிறப்பானது என்பதற்கு அடையாளம்.

பகுத்தறிவோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்; உங்களுடைய பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுங்கள்

அந்த மக்களைப் பார்த்து சொன்னார்கள், "நீங்கள் வாழக் கற்றுக்கொள்ளுங்கள் - பகுத்தறிவோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள். நல்ல அளவிற்கு உங்களுடைய பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் மீண்டும் உங்களைப் போன்று தோட்டத் தொழிலாளர்களாக வரக்கூடாது. அவர்கள் சிறந்த விஞ்ஞானிகளாக, பொறியாளர்களாக, வரவேண்டும்" என்று சொன்னார்கள்.

இங்கே நண்பர் சோமு அவர்களைப் பார்க்கும்பொழுது, நமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. பெரியாருடைய உழைப்புப் பூத்திருக்கிறது - காய்த்திருக்கிறது - கனிந்திருக் கிறது என்பதற்கு இங்கே உரையாற்றிய இரண்டு பேர் மட்டுமல்ல, இளம் தலைமுறையினர் சார்பாக உரையாற்றிய மாணவச் செல்வமும்கூட அருமையான எடுத்துக்காட்டு!

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், பெரியாரை நாம் சுவாதித்துக் கொண்டிருக்கிறோம் - நம்மை அறியாம லேயே!!

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், பெரியாரு டைய பங்களிப்பு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இருக்கிறது.

ஆனால், சுவாசிக்கின்றவர்கள், காற்றுதான் நமக்கு மூச்சுக் காற்று என்று நினைக்காமல், அது இயல்பாக இருப் பதுபோல, அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வழமைதானே!

ஜாதி தீண்டாமை என்றாலே சிங்கப்பூர் நாட்டிலே என்னவென்றே தெரியாது!

அந்தக் காலகட்டத்தில், பெரியார் அவர்கள் செய்த பிரச்சாரம் மிகத் தேவையாக இருந்தது. இங்கே நான் சுட்டிக்காட்டியதைப்போல, தமிழ்நாட்டிலிருந்து வந்தவர் ஜாதிய அமைப்பினை இங்கேயும் கொண்டு வந்து தொலைத்தார்கள். எந்த அளவிற்கு இருக்கிறது என்று சொன்னால், அருமை நண்பர்களே, இங்கே உரையாற்றிய இளைய தலைமுறையினருக்கு சிங்கப்பூர் நாட்டிலே - 'ஜாதி' என்றாலே, 'தீண்டாமை' என்றாலே என்னவென்றே தெரியாது. சொன்னாலும் விளங்காது.

காரணம் என்ன?

தலைமுறைகள் மாறியிருக்கின்றன. அதற்கு முன்பு, ஜாதிக் கொடுமை நோய் வேகமாக இருந்த நேரத்தில், அதனை ஒழிக்க அதனை எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய தொலைநோக்கு ஒரு உதாரணம், இன்றைக்கு நாம் இந்தக் கரோனா கால கட்டத்திலும் கூட்டத்தை நடத்துகிறோம், கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம் - காரணம், இணைய வழியாக நாம் சந்தித்துக் கொள்கிறோம்.

''இனிவரும் உலகம்''

படிக்காதவர் என்று சொல்லப்பட்ட தந்தை பெரியார்,

"பள்ளிக்கூடத்திற்கு மழைக்குக்கூட ஒதுங்காதவர் என்று விமர்சிக்கப்பட்ட தந்தை பெரியார் தான், ஒரு சமூக விஞ்ஞானியாக இருந்து, 80 ஆண்டுகளுக்கு முன்பு பேசி னார் ''இனிவரும் உலகம்'' என்ற தலைப்பில் சொன்னார்,

"எதிர்காலத்தில், நாம் தொலைவிலிருந்து ஒருவருக் கொருவர் ஆள் பார்த்துப் பேசிக் கொண்டிருப்போம் - ஒரு வகுப்பறையிலிருந்து ஒருவர் பேசினால் - காணொலி மூலமாக இன்னொரு இடத்தில் இருந்து அதனைப் பார்க்கக் கூடிய, கேட்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒரே ஆசிரியர், உலகம் முழுவதும் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார்" என்று சொன்னார்.

பெரியாருடைய பிறந்த நாள் விழாவினையே இன் றைய காலகட்டத்தில் காணொலிமூலமாகக் கொண்டாடு கிறோம்.

பல நாடுகளில் இருக்கின்றவர்கள், இதனைக் கேட்டுப் பயன்பெறக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என் றால், அதற்குக் காரணம், பெரியாருடைய தொலைநோக்கு, பெரியாருடைய பகுத்தறிவுச் சிந்தனை, பெரியாருடைய விஞ்ஞான அறிவியல் மனப்பான்மை ஆகும்.

அந்த உணர்வோடு உங்களுடைய எதிர்காலத்தை நீங்கள் அமைத்துக் கொள்ளவேண்டுமானால், அருமைச் சகோதரர்களே, இங்கே வந்து இந்த நாட்டில் இருக்கக் கூடியவர்களுக்குச் சொன்னார்கள். ''நீங்கள் ஜாதியை விடுங்கள்!'' ''தீண்டாமைக் கொடுமையின் சிந்தனைகள் உங்களிடத்தில் வரக்கூடாது'' என்று சொன்னார்.

'Indians in Singapore (1819-1945) 
Diaspora in the Colonial Port City'

பெரியாருடைய தொலைநோக்குக்கு ஆதாரம் என்னவென்று சொன்னால், Rajesh Rai, (National university, Singapore) என்ற ஆய்வாளர் Indians in Singapore (1819-1945) Diaspora in the Colonial Port City  என்ற நூலை ''சிங்கப்பூரில் எப்படிப்பட்ட மாற்றங்கள்? யாரால் சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டன?'' என்பதைப்பற்றி ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த நூலில், அவர்கள் தெளிவாகச் சொல் கிறார்கள். 

பெரியாருடைய வருகையினால் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் மிகப்பெரிய அளவில் அமைந்திருக்கிறது என்பதை அந்த நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Caste as a social system was super imposed on the political super structure of  this Island. It was further enhanced by the fact that Indians lived in the enclaves in such these enclaves, the social system of the Indian village was recreated with minor modification.

During this period, distance maintains between caste hindus and untouchables was practiced and in serangoon road, Thanjong Pagar and at the Naval base the enclaves were marked for Adidravidas. In this areas Indian concentration even chinese stall owners purportedly recognised the caste differences in the Indian popultion and so  as not to a alienate their the upper caste Indian clients, they sometimes refused to serve Adidravidas and marked  out different actions for them.

கிராமங்களில் இந்தியாவில் எப்படிப்பட்ட ஜாதி முறை இருந்ததோ, அதனைக் கொண்டு வந்து இங்கே புகுத்திவிட் டார்கள். இந்த நாட்டிலும், நகரத்திலும் எப்படி புகுத்தியிருக் கிறார்கள் என்பதைச் சொன்னார்.

1930 ஆம் ஆண்டு காலகட்டத்தில், அவர்கள் வந்த நேரத்தில்,

சிங்கப்பூரில் கடற்கரைப் பகுதியையொட்டிய   (Naval base) தஞ்சங் பகார், செரங்கூன் தெருவில் "தீண்டத் தகாதவர்களுக்கும், ஜாதி இந்துக்களுக்கும்" இடையில் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. புலம் பெயர்ந்த நிலையில், பிறப்பால் ஆதிதிராவிடர்களாக  உள்ளவர்கள் அந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியதாக இருந்தது. அந்தப் பகுதிகளில் இந்தியர்கள் நெருக்கமாக வசித்தார்கள். சீனர்களின் கடைகளில்கூட, உயர்ஜாதி இந்துக்கள் வாடிக்கையாளர்களாக தொடர்ந்து வர வேண்டும். அவர்களை விரோதித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அவர்களிடமிருந்து வேறுபடுத்தி, ஆதிதிராவிடர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கும் நிலை இருந்தது.

மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது

அவற்றையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள், அந்தக் காலத்தில் சுட்டிக்காட்டி, பேதமிலா பெரு வாழ்வு வாழுங்கள் - எதற்காக இதையெல்லாம் தூக் கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று பிரச்சாரம் செய்ததினுடைய விளைவுதான் நண்பர்களே, மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. சாதாரண மாற்றமல்ல - மிகப்பெரிய அளவிற்கு, சிறப்பான மாற்றங்கள்.

"Periyar's visit to Singapore and the Peninsula in December 1929 and January 1930 on the invitation of a young, Singapore based Tamil Writer - Thamizhavel G.Sarangabani was Monumental in Galvany.

During his tour, packed audiences witnessed Periyar's delivery of scathing attacks on the caste system and were inspired by his call for an end to deep-seated social inequalities in Tamil society and the necessity to Tamils in Malaya to unite and join the Movement by establishing "Self-Respect Associations" (page 108).

அந்த மாற்றங்கள் ஏற்பட்டதின் காரணமாகத்தான், அன்றைக்குத் "தமிழர் சீர்திருத்த சங்கம்" என்று - இந்த மக்களையெல்லாம் சீர்திருத்தவேண்டும் என்ற உணர் வோடு, உருவாக்கி, அதிலே அருமையான கருத் துகளை உள்ளே வைத்தார்கள்.

  1. ஜாதி பேதம், தீண்டாமை இருக்கக்கூடாது -
  2. பெண்ணடிமை இருக்கக்கூடாது -

பெண்களை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் -

  1. வாழ்வாதாரத்தில் சிக்கனமாக, சிறப்பாக இருக்க வேண்டும் - நல்ல அளவிற்குச் சேமிக்கவேண்டும் -
  2. பகுத்தறிவுச் சிந்தனை இருக்கவேண்டும் என்ற அய்ந்து குறிக்கோள்களை வைத்துத்தான், அன்றைக்கு ஓ.ராமசாமி நாடார் என்று சொல்லக்கூடிய அவர்களும், தமிழவேள் கோசா அவர்கள், செயலாளராக இருந்தும் இந்த அமைப்பை உருவாக்கினார்கள்.

தமிழ்முரசு நிறுவன ஆசிரியர்

தமிழவேள் கோ.சாரங்கபாணி

இந்த நாட்டிலே, சுயமரியாதை இயக்கத்தை, பெரி யாருடைய கருத்தை முதன்முதலாகக் கொண்டு வருவ தற்கு, அடித்தளமாக, கழகம் தோன்றுவதற்கு முன்பாக, தமிழர் சீர்திருத்தச் சங்கத்தை அமைப்பதற்கு முன்பாக, 'குடிஅரசு' மூலமாக செய்த பெருமை - தமிழவேள் கோ.சாரங்கபாணி, தமிழ்முரசு நிறுவன ஆசிரியர் அவர்களைச் சார்ந்ததாகும்.

அப்படி அவர்கள் உருவாக்கியதன் விளைவாகத் தான் நண்பர்களே, அடுத்தடுத்த தலைமுறை - இன்றைக்கு நான்காவது, அய்ந்தாவது தலைமுறை என்று வரக்கூடிய நிலையில், அது என்னவென்றே தெரியாத அளவிற்கு - அதுவும் நல்ல அரசு சிறப்பான அரசாங்கம் அமைந்த காரணத்தினால், இங்கே யாரும் எந்தவிதமான பேதத் தோடும் நடத்தக்கூடாது என்பதோடு மட்டுமல்லாமல், எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று கொடுக்கக் கூடிய வாய்ப்பு -

பெரியார் அனைவருக்கும் உரியார்

இனங்களால் மாறுபட்டு இருந்தாலும், மனங்களால் ஒன்றுபட்டவர்களாக - சிங்கப்பூரியர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய ஓர் அற்புதமான வாய்ப்பை உருவாக்கி இருக்கின்ற காரணத்தினால்தான், பெரியார் அனைவருக்கும் உரியார் என்ற கருத்து இன்றைக்கு நிலைநாட்டப்பட்டு இருக்கின்றது.

எனவே, அதைவிட மிக முக்கியமான ஒரு செய்தியை இன்றைய இளைஞர்கள் தெரிந் துகொள்ளவேண்டும்.

பெரியாருடைய பிறந்த நாளை, ஏன் மலேசியாவில் கொண்டாடவேண்டும்; ஏன் சிங்கப்பூரில் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள்? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியாருடைய 62 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினைக் கொண்டாட ஆரம்பித்த சிங்கப்பூர் நாடு - இன்றைக்கு 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடுகிறார்கள், தொடர்ச்சியாக! இடையில் கொஞ்சம் தொய்வுகள் இருக்கலாம்.

ஆனால், அப்படிப்பட்ட அளவிற்கு என்ன காரணம்? தயவு செய்து எண்ணிப்பாருங்கள். மாற்றங்கள்தான். அந்த மாற்றங்கள் சாதாரணமான மாற்றங்கள் அல்ல. நம்முடைய மக்களுக்கு ஏற்றங்களைத் தரக்கூடிய மாற்றங்கள் என்பதுதான் மிக முக்கியம்.

பெரியாருக்கு எப்படி

நன்றி கடன்பட்டிருக்கிறார்கள்

அந்த ஏற்றம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் - பெரியாருக்கு எப்படி நன்றி கடன் பட்டிருக்கிறார்கள் என்பதை இங்கே சிறப்பாக எடுத்துச் சொன்னதைப்போல,

வெறும் பெண்ணடிமை மட்டுமல்ல -

வெறும் கல்வி வாய்ப்புகள், சமத்துவம் மட்டுமல்ல நண்பர்களே, நடைமுறை சிந்தனையிலேயே பயன்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு மிகப்பெரிய அடையாளமாக, இந்த நாட்டு மக்கள், புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் நாட்டைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்கள். எப்போது திரும்பலாம், எப்போது அங்கே போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில்தான், ஒரு தந்தைக்குரிய அறிவுரையை, தந்தை பெரியார் அங்கே உரையாற்றும்பொழுது சொன்னார்கள்.

"இந்தியாவிற்கு - தமிழ்நாட்டிற்குத் திரும்ப வரவேண்டும் என்று நினைக்காதீர்கள். குடிஉரிமை பெற்று இந்த நாட்டிற்கு நீங்கள் உண்மையாக இருங்கள். இந்த நாட்டுக் குடிமக்கள் ஆகுங்கள் - அதுதான் மிக முக்கியம்" என்று மலேயாவில் 1929 ஆம் ஆண்டு சென்றபொழுது உரையாற்றினார்.

குடியுரிமைக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள்

அதனுடைய விளைவாக, தமிழவேள் கோ.சாரங்க பாணி அவர்களும், அன்றைக்கு இருந்த திராவிடர் கழக அமைப்பாளர்கள் தோழர் நடராசன் போன்றவர்கள் தொடங்கி, அதேபோல, நம்முடைய பழைய தோழர்கள் எஸ்.டி.மூர்த்தி அவர்களானாலும், முருகு.சீனிவாசன் அவர்களானாலும், நாகரத்தினம் அவர்களானாலும், வெற்றிவேல் அவர்களானாலும், வீரையன் அவர்களா னாலும் இப்படி எத்தனையோ பேரைச் சொல்லலாம் நண்பர்களே, அவர்கள் எல்லோரும் தமிழவேள் அவர் களுடைய தலைமையில் திரண்டு, வீடு வீடாகச் சென்று நீங்கள் குடியுரிமைச் சீட்டை வாங்கிக் கொள்ளுங்கள்; குடியுரிமைக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

அதைக் கேட்டவர்கள், ஏற்றவர்கள் வாழ்ந்தார்கள்; ஏற்காதவர்கள் வீழ்ந்தார்கள்.

- தொடரும்